சின்னஞ்சிறுகிளியே விமர்சனம்

0
57

சின்னஞ்சிறுகிளியே விமர்சனம்

செண்பா கிரியேஷன்ஸ் சார்பில் செந்தில்நாதன் தயாரித்து சபரிநாதன் முத்துப்பாண்டியன் சின்னஞ்சிறுகிளியே ;திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில் செந்தில்நாதன், பேபி பதிவத்தினி, சாண்ட்ரா நாயர், அர்ச்சனா சிங், பாலாஜி சண்முகசுந்தரம், குலப்புளி லீலா,  செல்லதுரை, விக்ரமாதித்யன் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு – பாண்டியன் குப்பன்,  இசை – மஸ்தான் காதர்,  பாடல் வரிகள் -பத்மநாபன் மற்றும் கீதா, படத்தொகுப்பு- குமரேஷ், வசனம்-சபரிநாதன் முத்துப்பாண்டியன், பத்மநாபன்.ஜி, கலை-ராஜு, பிஆர்ஒ- ஆனந்த்.
முதல் பிரசவத்தின் போது மனைவியை இழந்த செந்தில்நாதன், பெண் குழந்தையான பதிவத்தினியை கண்ணின் மணி போல் காத்து வளர்கிறார். இயற்கை உணவகம் நடத்தும் செந்தில்நாதன், ஆங்கில மருத்துவத்தை நம்பாமல் இயற்கை வைத்திய முறையையே பின்பற்றுகிறார். இவரின் மகள் எதிர்பாராத விதமாக கால்பாதத்தில் அடிபட ஆங்கில மருத்துவம் பார்க்க இவரது மச்சினர் அவசரத்திற்காக அழைத்துச்செல்கிறார். அதன் பின் திருவிழாவின்போது மகள் காணாமல் போகிறார். மகளை தேடி அலையும் செந்தில்நாதன், இறுதியில் முட்புதரில் முதுகில் காயங்களுடன் கண்டெடுக்கிறார். அது முதல் மகளின் நிலை மோசமாகிறது. மகளை இயற்கை வைத்திய முறையில் காப்பாற்றினாலும் இதற்கு யார் காரணம் என்று தேட செந்தில்நாதன் போலீஸ் நிலையம் செல்கிறார். அங்கே மகன், பேரனை தேடி புகார் அளித்து காத்து கொண்டிருக்கும் ஒரு தாத்தாவின் அறிமுகம் கிடைக்க அவர் கொடுக்கும் தகவலால் அதிர்ச்சியாகிறார். இறுதியில் குழந்தைகளை கடத்தும் காரணம் என்ன? அவர்களிடமிருந்து எலும்பு மஜ்ஜை ஏன் எடுக்கிறார்கள்? அதை தடுக்க செந்தில்நாதன் என்ன முடிவு எடுத்தார்? என்பதே க்ளைமேக்ஸ்.
இதில் தயாரித்து நடித்திக்கும் செந்தில்நாதன்,அவருடைய மகள் பேபி பதிவத்தினி, மனைவியாக சாண்ட்ரா நாயர், இயற்கை வைத்தியத்தை படிக்க வரும் அர்ச்சனா சிங், பாலாஜி சண்முகசுந்தரம், குலப்புளி லீலா,  செல்லதுரை, விக்ரமாதித்யன் ஆகியோரின் பாசபந்தமான நடிப்பு படத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர்.
பத்;;;;;;பநாபன், கீதா பாடல் வரிகளில் மஸ்தான் காதர் இசை கேட்பதற்கு இனிமை.
பாண்டியன் குப்பனின் ஒளிப்பதிவு கிராமத்து தெருக்களையும், இயற்கை உணவகத்தின் குடில், பாரம்பர்ய வீட்டின் முகத்தோற்றம், திருவிழா, ஆங்கில மருத்துவ சீர்கேடுகள், இயற்கை முறை வைத்தியம் என்று பார்த்து பார்த்து காட்சிக் கோணங்களில் கொடுத்து அசத்திவிடுகிறார்.
சபரிநாதன் முத்துப்பாண்டியன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் சின்னஞ்சிறு கிளியே  உலகம் முழுவதும் எண்ணற்ற திரைவிழாக்களில் கலந்து கொண்டு 24 சர்வதேச விருதுகளை வென்று சாதனை படைத்திருப்பதினால் எதிர்பார்ப்பை  ஏற்படுத்தி ஆர்வமாக பார்க்கும் ஆவலை தூண்டியிருக்கிறது.குழந்தைகளை கடத்தி முதுகில் எலும்பு மஜ்ஜை; எடுத்து அதிலிருக்கும் ஸ்டெம் செல்கள் மூலம் புதிய இரத்த அணுக்களை உருவாக்கி, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து, சாதாரண இரத்த செல்கள் உற்பத்திக்கு வழி வகுக்கும் சிகிச்சை முறைக்காக குழந்தைகளை கடத்தும் கும்பல். அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள், பல குழந்தைகள் இதிலிருந்து காப்பாற்ற போராடும் ஒரு தந்தை அதில் தன் மகளைப் போல் மற்ற குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது என்று துணிந்து முடிவு எடுத்து செல்லும் கதைக்களத்தை அமைத்து அதில் தந்தை-மகள் பாசத்தை மையப்படுத்தி சிறப்பாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் சபரிநாதன் முத்துப்பாண்டியன். ஆங்கில மருத்துவதுறையில் வியாபார ரீதியிலான கார்பரேட் வணிகத்தையும் வெளிச்சம் போட்டு காட்டி எச்சரிக்கை மணி அடித்திருக்கும் இயக்குனர் நம் முன்னோர்களின் இயற்கை வைத்தியத்தை மறந்து விட்டோம் என்பதை சுட்டிக் காட்டியிருப்பது கவனிக்கப்பட வேண்டியுள்ளது.
மொத்தத்தில் சின்னஞ்சிறு கிளியே தந்தையின் பாசப்போராட்டத்துடன் மருத்துவ க்ரைம் கலந்த சப்ஜெக்ட்.