சஞ்சீவன் விமர்சனம்: சஞ்ஜீவன் முதல் பாதி ஈர்ப்பு இரண்டாம் பாதி சொதப்பல் | ரேட்டிங்: 2.5/5

0
157

சஞ்சீவன் விமர்சனம்: சஞ்ஜீவன் முதல் பாதி ஈர்ப்பு இரண்டாம் பாதி சொதப்பல் | ரேட்டிங்: 2.5/5

மணி சேகர் இயக்கத்தில் மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சஞ்ஜீவன் படத்தில் வினோத் லோகிதாஸ், ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, சத்யா என்.ஜே, யாஷின், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் ஸ்வர்னகுமார் ஒளிப்பதிவில் தனுஜ் மேனன் இசையில் உருவாகியுள்ள சஞ்ஜீவன் படத்தின் படத்தொகுப்பை ஷிபு நீல் பி.ஆர் கவனித்துள்ளார். பிஆர்ஒ-சதீஷ்வரன்.

ஸ்னூக்கர் விளையாட்டும், நண்பர்கள் வாழ்க்கையில் நடைபெறும் எதிர்பாராத திருப்பங்களும் கதை. வினோத் லோகிதாஸ், சத்யா, ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, யாசின் ஆகிய ஐந்து பேரும் நெருங்கிய தோழர்கள். ஸ்னூக்கர் விளையாட்டில் திறமைசாலியான ஹீரோ நிலன் (வினோத). ஸ்னூக்கர் விளையாட்டு போட்டி ஒன்றில் இறுதி கட்டம் வரை சென்று வெல்கிறார். அதை கொண்டாட தனது நண்பர்கள் சத்யா, ஷங்கர், விமல் ஆகியோருடன் காரில் ஏற்காடுக்கு ட்ரிப் செல்கிறார். அங்கு அவர்கள் மது அருந்தி கொண்டாடும்போது வழியில் என்ன நடக்கிறது என்பது நெஞ்சை உறைய வைக்கும் த்ரில்லிங்கான சம்பவங்கள் மீதி கதை.

வினோத் லோகிதாஸ், சத்யா, ஷிவ் நிஷாந்த், யாசின் நால்வரும் நட்பு வட்டத்தை கலகலப்பாக நகர்த்தி மனதில் நிற்கிறார்கள். திவ்யா  உட்பட அனைவரும் புது முகங்களாக இருந்தாலும் தங்களுக்கான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.

ஸ்னூக்கர் போட்டியையும், ஸ்டண்ட் மாஸ்டர் ஃபயர் கார்த்தியின் கார் சேசிங் காட்சியையும் கார்த்திக் ஸ்வர்ணகுமார் கேமரா விறுவிறுப்பாக்கி உள்ளது.

ஷிபு நீல் பி.ஆர் படத்தொகுப்பும், தனுஜ் மேனனின் இசையும், பின்னணி இசையும் காட்சிகளோடு ஒன்ற வைக்கிறது.

காதல், காமெடி, ஆக்ஷன், த்ரில்லர் என அனைத்து சாராம்சங்களும் அடங்கிய திரைக்கதையில் டைரக்டர் மணி சேகர் முதல் பாதியில் ஸ்னூக்கர் விளையாட்டை மையப்படுத்தி ஒரு கதையும், சலிப்பு தட்டும் இரண்டாம் பாதி குடி பழக்கத்தின் பிரச்சினைகளை வைத்தும் மற்றொரு கதையாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர்.

மொத்தத்தில் மலர் மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் சஞ்ஜீவன் முதல் பாதி ஈர்ப்பு இரண்டாம் பாதி சொதப்பல்.