ஓடிடியில் நேரடியாக வெளியாகும் விக்ரம் பிரபுவின் டாணாக்காரன்…!

0
54

ஓடிடியில் நேரடியாக வெளியாகும் விக்ரம் பிரபுவின் டாணாக்காரன்…!

பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாணாக்காரனை எஸ்ஆர் பிரகாஷ் பாபு, எஸ்ஆர் பிரபு, கோபிநாத், தங்க பிரபாகரன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

விக்ரம் பிரபு இதில் போலீஸ் பயிற்சி பெறும் நபராக நடித்துள்ளார். சமீபத்தில் அவர் ஈடுபாட்டுடன் நடித்த படம் இது.

இதுவரை நிறைய போலீஸ் கதைகள் வந்திருந்தாலும், போலீசாவதற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு போலீஸ் அகதாமியில் கொடுக்கப்படும் பயற்சியை மையப்படுத்தி எந்தப் படமும் வெளிவந்ததில்லை.

டாணாக்காரன் அந்தப் பயற்சியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அகதாமியில் கொடுக்கப்படும் கடும் பயிற்சிகள்தான் யார் மீதும் யோசிக்காமல் போலீசார் லத்தியை வீச வைக்கிறது.

டாணாக்காரனில் அஞ்சலி நாயர் நாயகியாக நடித்துள்ளார்.

மலையாள நடிகர் லால் கொடூரமான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

சீனியர் நடிகர் எம்.எஸ்.பாஸ்கரும் முக்கியமான வேடம் ஒன்றில் நடித்துள்ளார்.

ஜிப்ரான் படத்துக்கு இசையமைத்துள்ளார். தமிழ் என்பவர் படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

போலீசின் வன்முறையை பல படங்களில் பார்த்தவர்களுக்கு, போலீசாவதற்கு எத்தனை வன்முறையைத் தாண்டி அவர்கள் வரவேண்டியிருக்கிறது என்பது புது அனுபவமாக இருக்கும்.

டாணாக்காரனை டிஸ்னி + ஹாட் ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளது. விரைவில் பட வெளியீட்டை அறிவிக்க உள்ளனர்.