ஊமைச்செந்நாய் விமர்சனம்: ஊமைச்செந்நாய் அரசியல் வேஷம் களைக்கும் கழுகு பார்வை பழி தீர்க்க புறப்படும் உளவு பார்வை

0
40

ஊமைச்செந்நாய் விமர்சனம்: ஊமைச்செந்நாய் அரசியல் வேஷம் களைக்கும் கழுகு பார்வை பழி தீர்க்க புறப்படும் உளவு பார்வை

டாக்டராக இருந்து செய்யாத தப்பிற்காக சிறைக்கு சென்று திரும்பும் மைக்கேல் தங்கதுரை துப்பறியும் வேலை செய்கிறார். கணவர் ஜெயராஜின் நடத்தையில் சந்தேகப்பட்டு உளவு பார்க்க மனைவி சொன்னதாக ஒரு வேலையை கொடுக்கிறார் முதலாளி கஜராஜ். அதற்காக மைக்கேல் ஜெயராஜை பின் தொடர்ந்து உளவு பார்த்து பல தகவல்களை தருகிறார். ஆனால் உளவு பார்த்தது மனைவிக்காக இல்லை, அமைச்சருக்காக என்பதை அறிந்து வேலையை விட்டு மைக்கேல் செல்கிறார். அமைச்சரின் முன்னாள் பிஏவாக இருக்கும் ஜெயராஜ் பல தகவல்களை எதிர்கட்சிக்கு கொடுக்க டீல் பேசியிருக்கலாம் என்று சந்தேகப்பட்டு கண்காணிக்கப்பட்டார் என்பதை அறிந்து ஜெயராஜிடம் உண்மையை கூறி எச்சரிக்கிறார் மைக்கேல். இதனால் உஷாரடையும் ஜெயராஜ் தப்பிக்க நினைக்கும் போது காவல்துiறை அதிகாரி மற்றும் ரவடிகளால் குடும்பத்தோடு கடத்தப்படுகிறார். அதுமட்டுமில்லாமல் உண்மையை சொன்ன மைக்கேலின் காதலி ஷனம் ஷெட்டி கடத்தப்பட்டு கொல்லப்படுகிறார். இதனால் கோபத்தின் உச்சியில் இருக்கும் மைக்கேல் இதற்கு காரணமானவர்களை தேடித்தேடி கொல்ல புறப்படுகிறார், இவரின் சபதம் நிறைவேறியதா? ஜெயராஜின் குடும்பத்தை காப்பாற்றினாரா? இறுதியில் என்ன ஆனாது என்பதே சஸ்பென்ஸ் நிறைந்த மீதிக்கதை.

அனைத்து காட்சிகளிலும் எதையோ பறி கொடுத்த மாதிரி தெரியும் மைக்கேல் தங்கதுரை, சில காட்சிகள் என்றாலும் காதலியாக வந்து மனதில் நிற்கும் சனம் ஷெட்டி, கெத்து காட்டும் ரவுடி சேதுவாக சாய் ராஜ்குமார், மனைவிக்கு துரோகம் செய்து விட்டு அப்பாவி போல் வில்லனிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் அமைச்சர் பிஏவாக ஜெயகுமார், துப்பறிவு கம்பெனி நடத்தும் கஜராஜ், பக்கா பிளான் போட்டு ஆக்ஷனில் களமிறங்கும் ஏசிபி அரோல் டி.சங்கர் மற்றும் பலர் படத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.

கண்டையினருக்குள் நடக்கும் சண்டைக் காட்சியாகட்டும். விவசாய நிலத்தில் நடக்கும் இறுதிக்காட்சியாகட்டும்  கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு விறுவிறுப்பு.
சிவாவின் இசையில் பாடல்கள் பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது.

த்ரில்லர் கதையில் ஆரம்பம் முதல் கேள்விக்குறியுடன் தான் கதை பயணிக்கிறது. கதாபாத்திரங்களின் வாயிலாக சம்பவங்கள் நடந்ததாக சொல்வதை வைத்து ஒரளவு திரைக்கதை தெளிய ஆரம்பிக்க, அதன் பின் நகரும் கதைக்களம் அரசியல் நெடி கலந்து கடத்தல், துரத்தல், கொலை என்று டிராக் மாறி இறுதியில் யார் யாரை கொல்வது என்ற போட்டியில் ஜெயிப்பது யார் என்பதை திருப்பத்துடன் கொடுத்து முதல் படத்திலேயே அசத்திவிடுகிறார் இயக்குனர் அர்ஜுனன் ஏகலைவன். பாராட்டுக்கள்.திரைக்கதையில் அழுத்தமும், தெளிவும் இருந்திருந்தால் இன்னும் பேசப்பட்டிருக்கும்.

மொத்தத்தில் லைப் கோஸ் ஆன் பிக்சர்ஸ் சார்பில் முருகானந்தம் செல்வராஜ் மற்றும் வெங்கட்ராமன்  செல்வராஜ் இணை தயாரிப்பில் ஊமைச்செந்நாய் அரசியல் வேஷம் களைக்கும் கழுகு பார்வை பழி தீர்க்க புறப்படும் உளவு பார்வை.