75ஆவது சுதந்திர தினம் : தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

0
160

75ஆவது சுதந்திர தினம் : தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார்.

இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் மூவர்ண கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றிவைத்தார். இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாநில முதலமைச்சர்கள் தங்கள் மாநிலத்தில் தேசிய கொடியை ஏற்றினர்.

சென்னைசென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் மூ.க.ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். இதையடுத்து, தகைசால் தமிழர் விருது, அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது உள்பட பல்வேறு வகையான விருதுகளை விருதாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார்.

இதனிடையே, சுதந்திர தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சென்னையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பழமைவாய்ந்த முக்கிய கட்டிடங்களான, சென்ட்ரல் ரயில் நிலையம், எல்.ஐ.சி. கட்டிடம் அனைத்தும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.