வெய்யிலில் இருந்து சருமத்தை காக்க..!

0
55

வெய்யிலில் இருந்து சருமத்தை காக்க..!

வெய்யில் காலத்தில் சருமம் கருப்படைவது இயல்பானது. வெயிலில் சருமம் கருமை அடையாமல் இருக்க சில குறிப்புகள்:

– வெள்ளரிக்காய், கற்றாளை மற்றும் வேப்பம் பூவை சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர வெய்யிலால ஏற்படும் கருமை குறையும்.
– திராட்சையை அரைத்து வடிகட்டி, அந்த சக்கையை மசித்து முகத்தில் ஒரு மாஸ்க் போல பூசி, சிறிது நேரத்திற்கு பின் கழுவ வேண்டும்.

– ஆரஞ்சு தோலை காயவைத்து பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் முல்தானிமட்டி மற்றும் சந்தனத்தை ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள்.
– இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 2 ஸ்பூன் பால், 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாக மாறிவிடும்.