மெரினா கடற்கரையில் சிலைகள் கரைத்த இடங்களில் இருந்து, பூ, மரக்கட்டை, பிளாஸ்டிக், இதர கழிவுகள் என சுமார் 70 டன்-க்கும் மேல் கழிவுகள் இதுவரை அகற்றம்

0
66

மெரினா கடற்கரையில் சிலைகள் கரைத்த இடங்களில் இருந்து, பூ, மரக்கட்டை, பிளாஸ்டிக், இதர கழிவுகள் என சுமார் 70 டன்-க்கும் மேல் கழிவுகள் இதுவரை அகற்றம்

இன்று காலை சென்னை மநாகாராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரையில் ஆய்வு மெற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “1,400-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் உள்ளே கரைக்கப்பட்டது. சுமார் 50 சிலைகள் கரை ஒதுங்கியுள்ளது. பெரிய சிலைகள் உள்ளே போகாமல் தடுமாறும் நிலை இருப்பதை பார்க்க முடிகிறது. ஒரு பக்கம் பணியாளர்கள்… இன்னொரு பக்கம் பெரிய சிலைகளை மீண்டும் கடலில் போடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறோம்.

தாழ்வான அலைகளாக வருகிறது. ஹை டைடு வரும் போது சின்ன சிலைகள் தானாக போய்விடும். இரவு பகல் பாராமல் பணியாளர்கள் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். மீனவர் தன்னார்வலர்களும் கூடவே இருக்கிறார்கள். காவல்துறையும் தேவைப்பட்டால் கிரேனுக்கு ஏற்பாடு செய்வதாக சொல்லியிருக்கிறார்கள். 40 மெட்ரிக் டன் பூக்கள் போன்ற குப்பைகளை அகற்றியிருக்கிறோம்.

பூ, மரக்கட்டை, பிளாஸ்டிக், இதர கழிவுகள் என சுமார் 70 டன்-க்கும் மேல் கழிவுகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளதது.

கடல் எல்லாவற்றையும் உள்வாங்கி கொள்ளாமல் சில சிலைகள் மட்டுமே வெளியே வந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் சில சிலைகள் வரும். குறிப்பாக பெரிய சிலைகள் 20 உள்ளன. பூக்கள் போன்றவற்றை அகற்றுவதற்கும் இரவு பகல் பாராமல் பணியாளர்கள் உழைக்கிறார்கள். பெரும்பாலான சிலைகள் தானாக கரைந்துள்ளது” என்றார்.