பட்டாம் பூச்சிகளால் உணவுப் பயிர்களின் உற்பத்தி அதிகரிக்கிறது- விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்

0
127

பட்டாம் பூச்சிகளால் உணவுப் பயிர்களின் உற்பத்தி அதிகரிக்கிறது- விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்

மதுரை மதுரை அரசு மீனாட்சி மகளிர் கல்லூரியில் இயங்கும் நிச் சங்கம் மற்றும் விலங்கியல் துறை சார்பில் பட்டாம் பூச்சி கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விலங்கியல் துறை தலைவர் கபிலா தொடங்கி வைத்தார். அமெரிக்கன் கல்லூரி விலங்கியல் துறை தலைவர் பேராசிரியர் ராஜேஷ் கலந்து கொண்டு மாணவிகளிடம் பட்டாம் பூச்சிகளின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், இந்த செப்டம்பர் மாதம் இந்தியா முழுவதும் பெரிய பட்டாம் பூச்சி மாதமாக கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் நம்மை சுற்றி உள்ள பூச்செடிகள், மரங்கள், அனைத்திலும் விதவிதமான பட்டாம்பூச்சிகளை காண முடியும். பட்டாம்பூச்சிகள் பூவுக்கு பூ சென்று மகரந்த சேர்க்கை நிகழ்த்துகிறது. இதனால், உணவுப் பயிர்களின் உற்பத்தி அதிகரிக்கிறது.

பட்டாம்பூச்சி இனங்கள் குறைந்து போனால் நாட்டில் உணவு உற்பத்தி குறைந்து உணவு தட்டுப்பாடு ஏற்படும். உணவுப்பயிர்களின் உற்பத்தியில் 75 சதவீதம் பட்டாம்பூச்சி மகரந்த சேர்க்கை மூலம் தான் கிடைக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே, மனிதர்களுக்கு தேவையான உணவு உற்பத்திக்கு பட்டாம்பூச்சிகள் நிகழ்த்தும் மகரந்த சேர்க்கையே முக்கிய காரணம் என்பதால் நாம் அனைவரும் வீடுகளில் அதிக அளவில் பூச்செடிகளை வளர்த்து பட்டாம் பூச்சிகளை கவர வேண்டும் என்றார்.

நிகழ்வில் அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் அமீர்கான் கலந்து கொண்டார். நிகழ்வை நிச் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜோதி சாம் ஒருங்கிணைத்தார்.