நாட்டுக்கோழிகளின் தனித்துவங்கள்

0
431

நாட்டுக்கோழிகளின் தனித்துவங்கள்

பொதுவாக கிராமங்களில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகள் இயற்கையான பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் முட்டைக்கும் கோழி இறைச்சிக்கும் அந்தச் சத்து கிடைக்கிறது.

ஒரு நாட்டுக் கோழி ஓராண்டில் முட்டைகள் வரை இடும். இயற்கையாக அதன் உடல் பெற்ற ஊட்டம், இந்த 80 முட்டைகளுக்கும்பிரித்து அளிக்கப்படுகிறது.

ஆய்வுரீதியாகச் சொல்ல வேண்டுமென்றால் நாட்டுக்கோழி இறைச்சியும் நாட்டுக்கோழி முட்டையும் நிறம், மணம், குணம் ஆகிய அம்சங்களில் தனித்தன்மையுடன் காணப்படும்.

நாட்டுக்கோழியின் இறைச்சி சாப்பிடுவதற்கு சற்று கடினமாக இருக்கும். நாட்டுக்கோழி இறைச்சியில் இயற்கையான குண மும்மணமும் கூடுதலாக இருப்பதன் காரணமாகவே, பலருக்கும் அது பிடிக்கிறது.அதேநேரம் நாட்டுக்கோழிகளை இயற்கையாக இரை தேட விடாமல், பண்ணையில் அடைத்து நெருக்கடியாக வளர்த்தால், அதன் குணாதிசயங்கள் தனித்துவமாக இருக்காது.

நாட்டுக்கோழி குட்டையாக இருப்பதைப் போலவே, அதன் முட்டையும் அளவில் சிறியதாக, பழுப்பு (பிரவுன்) நிறத்தில் இருக்கும். அதன் மஞ்சள் கரு, இயற்கையான நல்லநிறத்துடன் திடமாக இருக்கும்