தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் காலமானார்

0
100

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் காலமானார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் விஜயகாந்த். பின்னர் 2005ம் ஆண்டு தே.மு.தி.க கட்சியைத் தொடங்கி அரசியலில் கால்பதித்தார். பிறகு 2006 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். பின்னர் 2011ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று தே.மு.தி.க எதிர்க்கட்சி அந்தஷ்தை பெற்றது. இதனால் 2011 -2016ம் ஆண்டு வரை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.

இதையடுத்து அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்வதைக் குறைத்துக் கொண்டார். தொடர்ந்து சிகிச்சை ஓய்வு என்று விஜயகாந்த் இருந்தார். 2020ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 18ம் தேதி மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். இங்கு இரண்டு வாரங்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதையடுத்து நேற்று முன்தினம் நடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இன்று விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தே.மு.தி.க தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் காலமானதாக மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கேப்டன் விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்றிருந்தார். மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் இன்று காலை காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நாளை மாலை 4 45 மணி அளவில் கட்சி அலுவலகத்தில் முன்பு பகுதியில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அதிகபூர்வ அறிவவித்துள்ளார் எல் கே சுதீஷ்.

இந்நிலையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

எந்தக் காலத்திலும், எத்தகைய அரசியல் சூழலிலும் விஜயகாந்த் உடனான என் நட்பு மாறவே இல்லை. நண்பர் விஜயகாந்த் உடல்நலன் குன்றியிருந்த நிலையில், இரண்டு முறை நேரில் சந்தித்து, அவர் விரைந்து நலம் பெற விரும்பினேன். இயற்கை இரக்கமின்றி என் நண்பரின் வாழ்வை எடுத்துக் கொண்டிருக்கிறது. விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.