வடக்குப்பட்டி ராமசாமி சினிமா விமர்சனம் : வடக்குப்பட்டி ராமசாமி குழந்தை குட்டிகளுடன் குடும்பத்துடன் தியேட்டருக்கு வரவழைத்து ஒட்டு மொத்தமாக சிரிப்பு அலையில் அதிர வைக்கும் | ரேட்டிங்: 4/5

0
395

வடக்குப்பட்டி ராமசாமி சினிமா விமர்சனம் : வடக்குப்பட்டி ராமசாமி குழந்தை குட்டிகளுடன் குடும்பத்துடன் தியேட்டருக்கு வரவழைத்து ஒட்டு மொத்தமாக சிரிப்பு அலையில் அதிர வைக்கும் | ரேட்டிங்: 4/5

நடிகர்கள் :
சந்தானம் – ராமசாமி
மேகா ஆகாஷ் – கயல் விழி
மாறன் – முருகேசன்
சேசு – பூசாரி
தமிழ் – கதிரேசன்
செல்வி. பாஸ்கர் – முனுசாமி
ஜான் விஜய் – மூக்கையன்
ரவிமரியா – கலையன்
அது பிரசாந்த் – முத்து
ஜாக்லின் – லட்சுமி
கூல் சுரேஷ் – தன்ராஜ்
நிழல்கள் ரவி – மேஜர் சந்திரகாந்த்
எம்.எஸ்.பாஸ்கர்
மொட்டை ராஜேந்திரன்
தொழில்நுட்ப கலைஞர்கள் :
எழுதி இயக்கியவர் – கார்த்திக் யோகி
தயாரிப்பாளர் – டி.ஜி.விஸ்வ பிரசாத்
பேனர் – மக்கள் மீடியா பேக்டரி
இணை தயாரிப்பாளர் – விவேக் குச்சிபோட்லா
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – வி.ஸ்ரீ நட்ராஜ்
இணை தயாரிப்பாளர்கள் – சுனில் ஷா, ராஜா சுப்ரமணியன்
நிர்வாகத் தயாரிப்பாளர் – விஜய ராஜேஷ்
இசையமைப்பாளர் – ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவாளர் – தீபக்
படத்தொகுப்பாளர் – டி.சிவானந்தீஸ்வரன்
கலை இயக்குனர் – ஏ.ராஜேஷ்
ஸ்டண்ட் – மகேஷ் மேத்யூ
நடன இயக்குனர் – எம். ஷெரீப்
பாடல் வரிகள் – அறிவு, பாக்கியம் சங்கர், கவிஞர் சாரதி
கூடுதல் திரைக்கதை – விக்னேஷ் பாபு, விக்னேஷ் வேணுகோபால்
தயாரிப்பு நிர்வாகி – டி.முருகேசன்
தயாரிப்பு கன்ட்ரோலர் – மகேஷ் சங்கர், ஆல்பின் கிளமென்ட்
ஆடை வடிவமைப்பாளர் – தினேஷ் மனோகரன்
ஒலி வடிவமைப்பு – சரத்குமார். எம்
ஒலிக்கலவை – ஹரிஷ்
VFX மற்றும் DI – டெக்கான் ட்ரீம்ஸ்
ஒப்பனை – தசரதன் தாஸ்
ஸ்டில்ஸ் – ஆர்.எஸ். ராஜா
ஆடை – எம். சின்னவாமி
மக்கள் தொடர்பு – டி.ஒன், சுரேஷ் சந்திரா, அப்துல் ஏ நாசர்

1960 களின் பின்னணியில், வடக்குப்பட்டியில் வசிக்கும் ராமசாமி (சந்தானம்) சிறுவயதில் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார். அவரது குடும்பம் காலகாலமாக பானை தொழில் செய்து வருகிறது. இந்த கிராமம் பல ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தெய்வத்தை எடுத்துச் சென்றதாக ஒரு புராணக்கதை உள்ளது. கடவுள் காணாமல் போன பிறகு ஊரே காட்டேரியின் துன்புறுத்தலின் பயந்து இருக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, காட்டேரி போர்வையில் நடமாடிக் கொண்டிருக்கும் அந்த மர்ம நபர் எதிர்பாராத தருணத்தில், அதாவது ராமசாமி வீட்டில் இருந்து பானையை திருடி செல்லும் திருடனை ராமசாமி துரத்தி செல்லும் போது, தற்செயலாக ராமசாமியின் பானையால் அந்த மர்ம நபர் வீழ்த்தப்படுகிறார். கிராம மக்கள் தங்கள் தெய்வம் ஒரு மண் பானை வடிவில் திரும்பியதாக நம்புகிறார்கள். அந்த பானையை அம்மனாக வழிபட தொடங்குகின்றனர். தனக்குச் சொந்தமான இடத்தில் நடந்த அந்த நிகழ்வை வைத்து ராமசாமி விரைவாக பணம் சம்பாதிக்க கிராம மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி வடக்குப்பட்டி ஊர் மக்களை ஏமாற்றி அந்த பானையை வைத்து ஒரு சிறிய கோயில் ஒன்றைக் கட்டி பணம் சம்பாதிக்கிறார். இந்நிலையில், ராமசாமியின் செயல்பாடுகளைக் கண்டறிந்த வடக்குப்பட்டி தாசில்தார் கதிரேசன் (தமிழ்) கோயிலை வைத்து தானும் பணம் பார்க்க நினைக்கிறார். கோயிலில் இருந்து நிலையான பணத்தை சம்பாதிக்க ஒரு திட்டத்தைத் தீட்டுகிறார். அதற்கு ராமசாமி உடன்படாத போது, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு  ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் ராமசாமிக்கு சொந்தமான கோவில் சொத்துக்களை அபகரிப்பதற்காக தாசில்தாரின் சூழ்ச்சியால் கோயில் சீல் வைக்கப்படுகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதை கலகலப்புடன் ராமசாமி என்னவெல்லாம் செய்தான் என்பது ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் மீதிக்கதை.

காமெடியனாக வலம் வந்த சந்தானம், அடுத்த லெவலுக்கு (ஹீரோ) போனாலும் அவருடைய பல படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற வில்லை. அதே நேரத்தில் ஹீரோவாக நடித்து காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து பார்வையாளர்களை சிரிக்க வைத்து அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி வெற்றி பெற செய்த படங்களின் பட்டியலில் வடக்குப்பட்டி ராமசாமி முதலிடத்தில் இருக்கும். படத்தில் சந்தானத்துக்கு பல காட்சிகளில் ஹீரோயிசம் காட்டும் தருணங்கள் பல இருந்தாலும், தனது பாத்திரம் என்ன எதிர்பார்க்கிறதோ, அதை சரியான மீட்டரில் வழங்கி தன்னுடன் பயணித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து காமெடியில் அவர்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்க உதவியுள்ளார்.

சேசு, மாறன், ரவிமரியா, நிழல்கள் ரவி, ஜான் விஜய்,  பிரசாந்த், கூல் சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உட்பட அனைத்து பெரும் காமெடி நட்சத்திரங்கள் நிறைவான காமெடி கதாபாத்திரங்களாக வெடிச் சிரிப்புக்கு உத்தரவாதம் அளித்து மனதில் பதிகிறார்கள்.  இதில் சேசு, மாறன் அடிக்கும் லூட்டிகள், ரவி மரியா மற்றும் ஜான் விஜய் சேட்டைகள், அடக்கமான கூல் சுரேஷ் சைலண்ட் காமெடி, பிரசாந்த்தின் குறும்புத்தனமான நடிப்பு, இராணுவ அதிகாரியாக நிழல்கள் ரவி தனித்து, காமெடியில் கலக்கும் மேஜர் சந்திரகாந்த் கதாபாத்திரம், மற்றும் மொட்டை ராஜேந்திரனும் அவரது கேங்-கின் கண்ணிவெடி காமெடி என வரிசையாக நகைச்சுவை பாத்திரங்களின் நடிப்புத் திறனை தனித்தனியாக பிரித்து பார்க்க முடியாது. ஒவ்வொருவரும் அவர்களுடைய கதாபாத்திரங்களின் நகைச்சுவை நாயகர்கள்களாவே திகழ்ந்து ஒட்டு மொத்த படத்தின் வெற்றிக்கு கூட்டாக ஓடி உழைத்துள்ளனர்.

கதையின் முக்கிய திருப்புமுனையாக அமைந்து இருந்தது தமிழ் ஏற்று நடித்துள்ள தாசில்தார் கதிரேசன் கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்திற்கு தமிழ் கச்சிதமாக பொருந்தி திரைக்கதை வேகத்தை கூட்டியுள்ளார்.

மேகா ஆகாஷ் இரண்டாம் பாதியில் தனது இருப்பை நன்றாக பதிவு செய்துள்ளார். பாஸ்கர், ஜாக்லின், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட அனைத்து துணை கதாபாத்திரங்கள் நேர்த்தியான நடிப்பு தந்துள்ளனர்.

ஷான் ரோல்டனின் பின்னணி இசை, தீபக்கின் ஒளிப்பதிவு, சிவானந்தீஸ்வரன் எடிட்டிங், ராஜேஷ் கலை இயக்கம் என தொழில்நுட்ப அம்சங்கள் சிறப்பாக உள்ளது.

மக்கள் கடவுள் மீது வைத்துள்ள முரட்டுத்தனமான நம்பிக்கைகளை வைத்து எப்படியெல்லாம் ஏமாற்றி பணம் சம்பாதிக்க முடியும் என்பதை நகைச்சுவை மிகுந்த திரைக்கதை அமைத்து அற்புதமான கதாபாத்திரங்கள் தேர்வு செய்து அனைவரிடமும் அவர்களுக்குள் உள்ள சிறந்த நடிப்புத் திறனை வெளிக்கொண்டு வந்து மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பார்வையாளர்களை சிரிப்பு மழையில் நனைய வைத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் யோகி.

மொத்தத்தில் மக்கள் மீடியா பேக்டரி தயாரித்திருக்கும் வடக்குப்பட்டி ராமசாமி குழந்தை குட்டிகளுடன் குடும்பத்துடன் தியேட்டருக்கு வரவழைத்து ஒட்டு மொத்தமாக சிரிப்பு அலையில் அதிர வைக்கும்.