தூக்குதுரை சினிமா விமர்சனம் : திகில் மற்றும் நகைச்சுவை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு தூக்குதுரை ஏமாற்றும் | ரேட்டிங்: 2.25/5

0
150

தூக்குதுரை சினிமா விமர்சனம் : திகில் மற்றும் நகைச்சுவை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு தூக்குதுரை ஏமாற்றும் | ரேட்டிங்: 2.25/5

ஓபன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அன்பு, வினோத், அரவிந்த் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தூக்குதுரை.

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ள இந்த படத்தில் இனியா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்ட்ராயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஸ்வின், சத்யா, சீனியம்மா, வினோத் தங்கராஜூ, சிந்தலைப்பட்டி சுகி, ராஜா வெற்றி பிரபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ரவிவர்மா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.எஸ். மனோஜ் இசையமைக்க, தீபக் எஸ் துவாரகநாத் எடிட்டிங் செய்துள்ளார். மக்கள் தொடர்பு டி ஒன், சுரேஷ் சந்திரா.

தூக்குதுரை கைலாசம் என்ற கிராமத்தில் ஊர் தலைவராக இருக்கும் மாரிமுத்துவிற்கு திருவிழாக்களில் தலப்பாகட்டி ஊரின் மரியாதையாக ஒரு தங்க கிரீடம் கையில் கொடுத்து முதல் மரியாதை கொடுக்கப்படுகிறது. அண்ணனுக்கு தான் எப்போதும் முதல் மரியாதை கிடைக்கிறது என்று பொறாமை படும் தம்பி நமோ நாராயணன், எப்போது தனக்கு அந்த முதல் மரியாதை கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருக்கிறார். அதே ஊருக்கு திருவிழாவுக்கு படம் ஓட்ட வரும் யோகிபாபு, மாரிமுத்துவின் மகள் இனியாவை காதலித்து வருகிறார். இனியாவின் வற்புறுத்தலின் பேரில், இருவரும் ஊரை விட்டு ஓட முயற்சிக்கிறார்கள். அவர்கள்  ஊரை விட்டு ஓடுவதை அறிந்த ஊர்காரர்கள் ஒன்று துரத்தி பிடிக்கிறார்கள். அந்த சமயத்தில் இனியா தன்னுடன் கொண்டு சென்ற பை (அதில் கிரீடமும் உள்ளது. அந்த பையில் கிரீடம் இருப்பது பற்றி அப்போது பார்வையாளர்கள் உட்பட யாருக்கும் தெரியாது) அருகில் உள்ள கிணற்றில் விழுந்து விடுகிறது. இனியாவின் தந்தை மாரிமுத்துவின் உத்தரவின் பேரில் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து யோகி பாபுவை அடித்து, கொலை செய்து ஒரு கிணற்றில் போட்டு எரித்து விடுகிறார்கள். அதன் பிறகு ஒட்டுமொத்த ஊர் மக்களை யோகிபாபு பேயாக வந்து பயமுறுத்துகிறார். இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு அந்த கிரீடத்தை பற்றி தெரிந்து கொள்ளும் மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், மகேஷ் மற்றும் சென்றாயன் அந்த கிரீடத்தை திருட முயற்சி செய்கின்றனர்.  அதன் பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

இனியா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சின்னத்திரை நடிகர் மகேஷ், பால சரவணன், சென்ட்ராயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஸ்வின், சத்யா, சீனியம்மா, வினோத் தங்கராஜூ, சிந்தலைப்பட்டி சுகி, ராஜா வெற்றி பிரபு ஆகியோரின் நடிப்பு திறமை பலவீனமான திரைக்கதையால் வீணடிக்கப்பட்ட உள்ளது.

நகைச்சுவை மூலம் எப்போதும் மக்களை மகிழ்விக்க நினைக்கும் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், சென்றாயன், நமோ நாராயணன் ஆகியோர் படத்தில் இடம் பெற்ற இந்தப் படத்தில் நகைச்சுவை மற்றும், திகில் துளியும் எடுபட வில்லை.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மா, இசையமைப்பாளர் கே.எஸ். மனோஜ், பட தொகுப்பாளர் தீபக் எஸ் துவாரகநாத் உட்பட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் பலவீனமான  திரைக்கதைக்கு டெக்னிக்கலாக தங்களுடைய சிறப்பான பங்களிப்பை தந்து ஓர் அளவுக்கு கதை தொய்வில்லாமல் நகரும்படி செய்துள்ளனர்.

காதல், காணாமல் போகும் வைரம் கிரீடம், பழிவாங்கும் ஆவி என கதைகளத்தில் திகில் கூறுகள் மிகவும் சாதாரணமானவை. திகில் மற்றும் நகைச்சுவைக் கூறுகளைக் சரியாக கலக்காமல், பலவீனமான திரைக்கதை அமைத்து பார்வையாளர்களை ஏமாற்றிவிட்டார் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத்.

மொத்தத்தில் ஓபன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அன்பு, வினோத், அரவிந்த் ஆகியோரின் தயாரித்துள்ள தூக்குதுரை திகில் மற்றும் நகைச்சுவை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு தூக்குதுரை ஏமாற்றும்.