தலைக்கூத்தல் விமர்சனம்: தலைக்கூத்தல் தந்தையை காப்பாற்ற போராடும் மகனின் நிராசை | ரேட்டிங்: 3.5/5

0
286

தலைக்கூத்தல் விமர்சனம்: தலைக்கூத்தல் தந்தையை காப்பாற்ற போராடும் மகனின் நிராசை | ரேட்டிங்: 3.5/5

ஒய் நாட் ஸ்டுடியோஸ் எஸ். சஷிகாந்த் தயாரிப்பில், சமுத்திரக்கனி, கதிர்,வசுந்தரா,வையாபுரி, கதிர், முருகதாஸ், கதாநந்தி, கலைச்செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தலைக்கூத்தல் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தலைக்கூத்தல்.இசை- கண்ணன் நாராயணன், பாடல்கள் -யுகபாரதி,, ஒளிப்பதிவு – மார்ட்டின் டான்ராஜ், படத்தொகுப்பு- டேனி சார்லஸ், பிஆர்ஓ-நிகில்.
ஏடிஎம் நிறுவனத்தில் இரவு நேர வாட்ச்மேனாக வேலை செய்யும் சமுத்திரகனி உடல்நலமின்றி இருக்கும் தந்தை, மனைவி வசுந்தரா, மகளுடன் வாழ்ந்து வருகிறார். தந்தையின் வைத்திய செலவிற்கு கடன் வாங்கி இருக்க, அதற்காக வீட்டை அடமானம் வைத்து மேலும் பணம் வாங்குகிறார். இந்த விஷயத்தை அறியும் மனiவி வசுந்தரா கணவனிடம் சண்டை போடுகிறார். வசுந்தரா தன் தந்தை மூலம் மாமனார் கலைச்செல்வனுக்கு தலைக்கூத்தல் முறையில் கொலை செய்யுமாறு வற்புறுத்துக்கிறார். ஆனால் இதற்கு சம்மதம் தெரிவிக்காத சமுத்திரகனி தன் தந்தையை பார்த்துக் கொள்கிறார். இதனால் குடும்பத்தில் பிரச்சனை உருவாகி வசுந்தரா வீட்டை விட்டே சென்று விடுகிறார். இறுதியில் வசுந்தரா நினைத்த மாதிரியே தலைக்கூத்தல் நடந்ததா? சமுத்திரகனி சம்மதித்தாரா? என்பதே மீதிக்கதை.

மகனாக சமுத்திரக்கனி தந்தை மீது பாசம், நேசத்துடன் பராமரிப்பது, கடன் சுமை ஒரு புறம், மனைவி நச்சரிப்பு ஒரு புறம், இதை சமாளிக்க இயலாத நிலையில் இருதலைக்கொல்லியாக தவித்து வேண்டா வெறுப்பாக எடுக்கும் முடிவு என்று அருமையாக நடித்துள்ளார். குடும்பத்தை சமாளிக்க முடியாமல்,  கணவன் நல்ல வேலைக்கு சென்றால் கடனை அடைக்கலாம் என்ற எண்ணம் கொண்டு இதற்கு இடையூறாக இருக்கும் மாமனாருக்கு எதிராக போர் கொடி தூக்குவது என்று மனைவியாக வசுந்தரா, இளமைகால அப்பாவாக கதிர், குறி சொல்லும் சாமியாரினியாக வையாபுரி, நண்பராக முருகதாஸ், காதலியாக கதாநந்தி, தந்தையாக கலைச்செல்வன் பொருத்தமான கதாபாத்திரங்கள்.

இசை- கண்ணன் நாராயணன்,ஒளிப்பதிவு – மார்ட்டின் டான்ராஜ் ஆகிய இருவரும் கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கிராமத்து கதைக்கேற்ற பங்களிப்பை சுவாரஸ்யம் குறையாமல் கொடுத்துள்ளனர்.

படத்தொகுப்பு- டேனி சார்லஸ் கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து புரியும்படி முடிந்த வரை செய்துள்ளார்.

மரண படுக்கையில் இருக்கும் வயதானவர்களை கருணைக்கொலை செய்வதே கிராமப்புறங்களில் நடக்கும் தலைக்கூத்தல் முறையாகும். இதை மையமாக வைத்து வயதான தந்தை, நேசமான மகன், எதிரியாக மருமகள், பாசமான பேத்தி என்று ஒரு குடும்ப சூழ்நிலையோடு, நட்பு, காதல் கலந்து தோய்வில்லாமல் கொடுத்து அசத்தியுள்ளார் இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

மொத்தத்தில் ஒய் நாட் ஸ்டுடியோஸ் எஸ். சஷிகாந்த் தயாரிப்பில் தலைக்கூத்தல் தந்தையை காப்பாற்ற போராடும் மகனின் நிராசை.