சத்தமின்றி முத்தம் தா சினிமா விமர்சனம் : சத்தமின்றி முத்தம் தா பார்வையாளர்கள் ஈர்க்கும் க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 2.25/5

0
239

சத்தமின்றி முத்தம் தா சினிமா விமர்சனம் : சத்தமின்றி முத்தம் தா பார்வையாளர்கள் ஈர்க்கும் க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 2.25/5

நடிகர்கள் :
ஸ்ரீகாந்த் – விக்னேஷ்
பிரியங்கா திம்மேஷ் – சந்தியா
ஹரிஷ் பெராடி – இன்ஸ்பெக்டர் எட்வர்ட்
வியான் – ரகு
நிஹாரிகா – ஷீலா
தொழில்நுட்ப கலைஞர்கள் :
இசை : ஜுபின்
பாடல்கள் : விவேகா
1. செம்பரம்பாக்கம் ஏரி அளவு (  பாடியது – ஆண்ட்ரியா )
2.ஆசை மழை  – (பாடியவர்கள் ஆ.ஆ.மானசி –  ஜித்தின் ராஜ்)
3.கடந்து நீயும் போகும் போது – (பாடியவர் ரவி.ஜி )
ஒளிப்பதிவு : யுவராஜ்.எம்
படத்தொகுப்பு – ஜி.மதன்
நடனம் : தினேஷ்
ஸ்டண்ட் :  மிராக்கிள் மைக்கேல்
தயாரிப்பு நிறுவனம் : செலிபிரைட் புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர் : கார்த்திகேயன்.எஸ்
தயாரிப்பு மேற்பார்வை – ஆனந்த்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் – ராஜ் தேவ்.
மக்கள் தொடர்பு – மணவை புவன்
இது ஹீரோ, கொலையாளி மற்றும் ஹீரோயின் சம்பந்தப்பட்ட மர்மம்  த்ரில்லர். பெரிய ஆடம்பர  வீட்டில் மர்ம நபர் ஒருவர் இளம் பெண் சந்தியாவை (பிரியங்கா திம்மேஷ்) கொலை செய்ய முயல்கிறார். சந்தியா கொலையாளியிடம் இருந்து தப்பித்து வெளியே ஓடும் போது ரோட்டில் தயாராக காரில் காத்திருந்த கொலையாளியின் கூட்டாளி காரை ஓட்டிச் சென்று சந்தியா மீது மோதி விட்டு செல்கிறது. சந்தியா ஹிட் அண்ட் ரன் கேஸில் சிக்கி தலையில் பலத்த காயத்துடன் ரோட்டில் விழுந்து கிடக்கிறாள். அந்த வழியாக காரில் வந்த விக்னேஷ் (ஸ்ரீகாந்த்) சந்தியாவை மீட்டு  மருத்துவமனையில் சேர்க்கிறார். மருத்துவமனையில் சந்தியாவுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலையில், தான் சந்தியாவின் கணவர் ரகு என்று கூறுகிறார். இந்த சம்பவத்தை பற்றி விசாரிக்க வரும் இன்ஸ்பெக்டர் எட்வர்ட் (ஹரிஷ் பெராடி) பார்த்து விக்னேஷ் நைசாக அங்கிருந்து வெளியே செல்கிறான். விபத்தில் அடிபட்டதால் தன் நினைவை இழந்து அவள் ஒரு மறதி நோயாக மாறுகிறாள். விக்னேஷ் சந்தியாவை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்று தான் தான் அவருடைய கணவர் ரகு என்று சொல்லி அதற்கான ஆதாரங்களை காட்டுகிறார். தன்னுடன் வைத்திருக்கிறான். தன் கணவனைக் கூட அடையாளம் காண முடியாமல் தவிக்கிறாள். அவள் ஆரம்பத்தில் அவனை நம்பத் தயங்கிய சந்தியா ஒரு கட்டத்தில் அவள் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே அவனை நேசித்தவள் என்று அவளுடைய பள்ளி படங்கள் அடங்கிய புகைப்பட ஆல்பத்தை பார்த்த பின் அவள் நம்பத் தொடங்குகிறாள். இந்நிலையில் மனைவியை காணவில்லை என ரகு (வியான்) போலீசில் புகார் அளித்துள்ளார். உண்மையில் விக்னேஷ் பணத்துக்காக கொலைகள் செய்யும் கொலையாளி. ஏற்கனவே இவர் போலீஸால் தேடப்பட்டு வரும் கொலைக் குற்றவாளி. இன்ஸ்பெக்டர் எட்வர்ட் விக்னேஷை பிடிக்கும் முயற்சியில் இருக்கும் போது தான் இந்த சம்பவம் நடைபெறுகிறது. ஒரு நாள் சந்தியா அவளது பழைய தோழி ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது, ஆனால் தோழியை  நினைவு படுத்தி பார்க்கும் போது சந்தியாவுக்கு ஞாபகம் வரவில்லை. அவளது தோழி சந்தியாவின் திருமண படங்களை அவருடன் பகிர்ந்து கொள்ளும் போது தான் சந்தியாவுக்கு விக்னேஷ் தன் கணவர் இல்லை என்பதும், தன் உண்மையான கணவர் பெயர் ரகு என்பதும் தெரிய வந்து அதிர்ச்சி அடைகிறாள். விக்னேஷ் கணவன் ரகுவாக ஏன் நடிக்கிறான்? சந்தியாவை கொல்ல முயன்ற மர்ம நபர் யார்? போன்ற கேள்விக்கு அதன் பின் மறதியில் தவிக்கும் சந்தியா, கொலையாளியான விக்னேஷ், கணவன் ரகு, இன்ஸ்பெக்டர் எட்வர்ட் இடையே நடக்கும் சம்பவங்கள் பதில் சொல்கிறது.
ஸ்ரீகாந்த், விக்னேஷ் கதாபாத்திரத்திற்கு குறிப்பிடத்தக்க ஆழமான நடிப்பை கொடுக்க தவறிவிட்டார். பல ஆண்டுகளாக அவரின் உடல் இருப்பு மற்றும் நுணுக்கமான நடிப்பு எந்த வகையிலும் குறிப்பிடும் படி இருந்ததில்லை என்பதை மீண்டும் இப்படத்தின் மூலம் நிருபித்துள்ளார்.
சந்தியா கதாபாத்திரத்தைச் சுற்றி நடக்கும் கதைக்களத்தில், பிரியங்கா திம்மேஷ் குழப்பம், பதட்டம், பயம் என அனைத்து முக பாவனைகளையும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி நேர்மை மற்றும் நம்பகத்தன்மையுடன் தனது பாத்திரத்தை திறம்பட நிரப்பியுள்ளார்.
இன்ஸ்பெக்டர் எட்வர்ட் கதாபாத்திரத்தில் ஹரிஷ்  பெராடி தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
வில்லன் கதாபாத்திரம் என்பது திரைக்கதையின் முக்கிய அங்கம் என்பதை புரிந்து அந்த கதாபாத்திரத்திற்கு கடுமையாக உழைத்து உடல் மொழியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினால் தான் திரைக்கதை உயிர்பித்து வேகம் எடுக்கும். வில்லனுக்கான ரகு கதாபாத்திரத்தில் சந்தியாவின் கணவராக வியான் திரை இருப்பை சரியாக பயன்படுத்தி திரைக்கதைக்கு வலு சேர்க்கவில்லை.
ஷீலா கதாபாத்திரத்தில் நிஹாரிகா முக்கிய பங்களிப்பு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்துள்ளார்.
விவேகா பாடல் வரிகளுக்கு ஜுபின் இசை நன்றாக உள்ளது. ஜுபின்  பின்னணி இசையில் மட்டும் கொஞ்சம் சத்தத்தை குறைத்து இருக்கலாம்.
மிராக்கிள் மைக்கேலின் எதார்த்தமான ஸ்டண்ட் காட்சிகளும், படத்தொகுப்பாளர் ஜி.மதனின் ஷார்ப் கட்டிங் மற்றும் ஒளிப்பதிவாளர் யுவராஜ்.எம் மின் காட்சியமைப்பும், ஒட்டுமொத்த த்ரில் அனுபவத்தை இன்னும் அதிகப்படுத்துகின்றன.
த்ரில்லர் கதை ஆரம்பத்தில் வலுவான அமைப்பு மற்றும் புதிரான முன்மாதிரியும் வசீகரிக்கிறது, ஆனால் திரைக்கதையில் அதன் பல்வேறு கூறுகளை தடையின்றி இணைக்க தேவையான ஒருங்கிணைப்பு இல்லை. அதே போல் சிறந்த வசனங்கள் அமைத்து இருந்தால் படம் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கும்.  இருப்பினும் இயக்குனர் ராஜ் தேவ் சஸ்பென்ஸ் திருப்பங்களுடன் சிறிய விளிம்பை கொடுத்துள்ளார்.
மொத்தத்தில் செலிபிரைட் புரொடக்ஷன்ஸ் கார்த்திகேயன்.எஸ் தயாரித்திருக்கும் சத்தம் இன்றி முத்தம் தா பார்வையாளர்கள் ஈர்க்கும் க்ரைம் த்ரில்லர்.