பிரேமலு சினிமா விமர்சனம் : பிரேமலு – ரொமாண்டிக் என்டர்டெய்னர் | ரேட்டிங்: 3/5

0
389

பிரேமலு சினிமா விமர்சனம் : பிரேமலு – ரொமாண்டிக் என்டர்டெய்னர் | ரேட்டிங்: 3/5

நடிகர்கள் :
நாஸ்லென்
மமிதா பைஜு
அல்தாப் சலீம்
ஷியாம் மோகன் எம்
அகில பார்கவன்
மீனாட்சி ரவீந்திரன்
சங்கீத் பிரதாப்
ஷமீர் கான்

தொழில்நுட்ப வல்லுநர்கள் :
இயக்குனர்: கிரிஷ் ஏ டி
தயாரிப்பாளர்கள்: ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன்
எழுதியவர்கள்: கிரிஷ் ஏ டி, கிரண் ஜோசி
இசை: விஷ்ணு விஜய்
ஒளிப்பதிவு: அஜ்மல் சாபு
எடிட்டர்: ஆகாஷ் ஜோசப் வர்கீஸ்
தயாரிப்பு வடிவமைப்பு: வினோத் ரவீந்திரன்
பாடலாசிரியர்: சுஹைல் கோயா
ஒலி வடிவமைப்பு: சங்கரன் ஏ எஸ், கே சி சித்தார்த்தன்
ஒலி கலவை: விஷ்ணு சுஜாதன்
ஸ்டில்ஸ்: ஜான் ஜோசப் ஜார்ஜ்
நிர்வாகத் தயாரிப்பாளர்கள்: பென்னி கட்டப்பனா, ஜோஸ் விஜய்
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: ரிச்சர்ட்
தயாரிப்பு : பாவனா ஸ்டுடியோஸ்
தமிழ் திரையரங்கம் வெளியீடு  : ரெட் ஜெயண்ட் மூவிஸ்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

சச்சின் (நஸ்லென் கபூர்) சேலத்தில் பொறியியல் படிப்பு முடித்த பட்டதாரி. கல்லூரியில் ஒரு பெண்ணைக் காதலிக்கிறார், ஆனால் அவளுக்கான தனது உணர்வுகளை வெளிப்படுத்தி கவர தவறுகிறான். பட்டம் பெற்ற பிறகு, இங்கிலாந்தில் தனது வாழ்க்கையைத் தொடர ஆசைப்படுகிறான். ஆனால் அவனது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. அவன் தனது சொந்த ஊரிலும் குடும்பத்தின் பேக்கரி தொழிலிலும் அதிலிருந்து தப்பிக்க  பள்ளி நண்பன் அமல் டேவிஸோடு (சங்கீத் பிரதாப்) ஆலோசனையின் பேரில், ‘கேட்’ நுழைவுத் தேர்வுக்கு தயாராக தன் நண்பனுடன் சேர்ந்து ஹைதராபாத்தில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்கிறார். ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியில் சேரும் ரீனுவும் (மமிதா பைஜு) சச்சினும் ஒரு திருமணத்தில் முதல் முறையாக சந்திக்கிறார்கள், வழக்கம் போல மோதலுடன் ஆரம்பிக்கும் சந்திப்பு, பிறகு நட்பில் தொடரும் போது ரீனுவின் மேல் சச்சினுக்கு காதல் வர, அதற்கு, ரீனுவின் அலுவலக “பெஸ்டி” ஆதியும் ரீனு மீது (ஷ்யாம் மோகன்) ரகசிய பாசத்தை வளர்த்துக் கொண்டிருப்பது இடைஞ்சலாக இருக்கிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பது பிரேமலுவின் முக்கிய அம்சமாகும்.

சச்சின் கதாபாத்திரத்தில் நஸ்லன் கஃபூர் பக்கத்து வீட்டுப் பையனைப் போல தோற்றமளித்து, அப்பாவித்தனம், புத்திசாலித்தனம் மற்றும் வசீகரிக்கும் குணங்களை திரையில் கச்சிதமாக கொண்டு வந்துள்ளார்.

நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ள ரீனுவின் கதாபாத்திரத்தில் மமிதா பைஜுவும் வசீகரமாக இருக்கிறார் மற்றும் அவரது கலகலப்பான நடிப்பு பார்வையாளர்களை கவர்கிறது.

சங்கீத் பிரதாப் மற்றும் ஷியாம் மோகன் இருவரும் தங்கள் பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி படம் முழுவதும் விறுவிறுப்பாக வைத்திருக்கின்றனர்.

ஆகில பார்கவன், மீனாட்சி ரவீந்திரன், அல்தாப் சலீம், ஷமீர் கான், உட்பட அனைத்து கதாபாத்திரங்களின் நடிப்பு திருப்திகரமாக உள்ளது.

எடிட்டர் ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பும், விஷ்ணு விஜய்யின் இசையும், அஜ்மல் சாம்புவின் ஒளிப்பதிவும் பிரேமாலு சுமக்கும் இனிமையான உணர்வை மெருகேற்றும்.

காதல் கதைக்களத்தில் திரைப்படம் ஆரம்பம் முதல் இறுதி வரை மகிழ்ச்சியான, இலகுவான நன்கு வடிவமைக்கப்பட்ட மற்றும் வசீகரிக்கும் எழுத்துடன், திரைக்கதையில் சூழலுக்குப் பொருத்தமான நகைச்சுவையை திறமையாக ஒருங்கிணைத்து,  ஜாலியான கிளைமாக்ஸ் அமைத்து, பார்வையாளர்களுக்கு பிரேமலுவை ஒரு மகிழ்ச்சிகரமான பார்வை அனுபவமாக மாற்றி இருக்கிறார் இயக்குனர் கிரிஷ் ஏ.டி.

மொத்தத்தில் ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன் இணைந்து தயாரித்துள்ள பிரேமலு – ரொமாண்டிக் என்டர்டெய்னர்.