போர் சினிமா விமர்சனம் : போர் ஒருமுறை பார்க்கலாம் | ரேட்டிங்: 2.5/5

0
520

போர் சினிமா விமர்சனம் : போர் ஒருமுறை பார்க்கலாம் | ரேட்டிங்: 2.5/5

நடிகர்கள் :
அர்ஜுன் தாஸ்
காளிதாஸ் ஜெயராம்
டி.ஜே.பானு
சஞ்சனா நடராஜன்
அம்ருதா சீனிவாசன்
மெர்வின் ரோஜாரியோ

படக்குழுவினர்:
எழுதி இயக்கியவர் : பிஜாய் நம்பியார்
இசை: சஞ்சித் ஹெக்டே, துருவ் விஸ்வநாத், கௌரவ் கோட்கிண்டி
பின்னணி இசை : ஸ்கோர் மார்டன் டேப் ஸ்கோர்கள் (ஹரிஷ் வெங்கட் மற்றும் சச்சிதானந்த் சங்கரநாராயணன்), கௌரவ் கோட்கிண்டி
ஒளிப்பதிவு : ஜிம்ஷி காலித் மற்றும் பிரெஸ்லி ஆஸ்கார் டிசோசா
எடிட்டர் : பிரியங்க் பிரேம் குமார்
கலை இயக்குனர் : மணிமொழியன் ராமதுரை
பாடகர்கள் : சஞ்சித் ஹெக்டே, வி.எம்.மகாலிங்கம், வர்ஷா எஸ்.கிருஷ்ணன், கபில் கபிலன்
பாடல் வரிகள் : கிருத்திகா நெல்சன், விக்னேஷ் ஸ்ரீகாந்த், மோகன் ராஜன்
அதிரடி இயக்குனர் : ரியாஸ் மற்றும் ஹபீப்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : பாலகுமாரன்
ஒலி வடிவமைப்பு : டான் வின்சென்ட்
நிர்வாக தயாரிப்பாளர் : லக்ஷய் குமார்
தயாரிப்பு நிறுவனம் : டி-சீரிஸ், கெட்அவே பிக்சர்ஸ், ரூக்ஸ் மீடியா
தயாரிப்பாளர்: டி-சீரிஸ், பிஜாய் நம்பியார், பிரபு ஆண்டனி, மது அலெக்சாண்டர்
பிஆர்ஓ : சதீஷ்குமார்

செயிண்ட் மார்டின் மருத்துவக் கல்லூரியில் பி.ஹெச் டி பட்டம் வாங்க முயன்று கொண்டிருக்கிறார் சூப்பர் சீனியர் பிரபு செல்வன் (அர்ஜுன் தாஸ்).அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவராக சேருகிறார் யுவராஜ் (காளிதாஸ் ஜெயராம்). இருவருக்கும் இடையே, சிறு வயதில் ஏற்படும் எதிர்பாராத கசப்பான சம்பவத்தால் சிறு வயதிலிருந்தே யுவராஜ், பிரபு செல்வன் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார். பள்ளி பருவத்தில் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு பிரபுவை பழிவாங்கத் கல்லூரியில் சேர்ந்ததும் திட்டமிடுகிறார் யுவராஜ். இவர்கள் இருவருக்கும் தோழிகளாக ரிஷ்விகா (சஞ்சனா நடராஜன்), காயத்ரி (டி.ஜெ.பானு) இருக்கின்றனர். மறுபக்கம், மாணவர் தேர்தலில் கல்லூரி டிரஸ்டி மகள் சூர்யாவுக்கும் (அம்ருதா சீனிவாசன்) காயத்ரி குழுவுக்கும் சாதி பாகுபாடு நிறைந்த பகை. நடைமுறைக்கு மாறான ஒரு சில பல்கலைக்கழக மாணவர்களின் ஈகோ மோதல்கள், பொறுப்பற்ற முறையில் வாழும் இந்த இளைஞர்களின் வாழ்க்கையை பயன்படுத்தி மறைமுகமாக – அரசியல் தலையீட்டால் கல்லூரியில் களேபரம் உண்டாவதுடன் ஒரு கட்டத்தில் யுவராஜ் – பிரபு மோதல் உச்சம் அடைந்து கல்லூரியில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் ஒரே கோட்டில் நகர்ந்து இறுதியில் பல்கலைக்கழகம் ‘போர்’க்களமாகிறது என்பதை படம் அத்தியாயம் 1 அறிமுகம், அத்தியாயம் 2 களம், அத்தியாயம் 3 பகை, அத்தியாயம் 4 மய்யல், அத்தியாயம் 5 முரசொலி, அத்தியாயம் 6 விழா, மற்றும் இறுதியில் அத்தியாயம் 7 போர் என தனித்தனி அத்தியாயங்களாக கதை பயணிக்கிறது.

ஆராய்ச்சி மாணவன் பிரபு செல்வன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், நல்லவனாகவும் அதே நேரத்தில் கோபக்கார கல்லூரி மாணவ தலைவராக தனக்கே உரிய பாணியில் அசத்தலான நடிப்பு தந்துள்ளார்.

பிரபு செல்வனுடன் சிறுவயதில் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, கல்லூரியில் சேர்ந்ததும் பிரபு செல்வனை பழிவாங்கத் துடிக்கும் முரட்டுத்தனமான யுவராஜ் கதாபாத்திரத்தில் காளிதாஸ் ஜெயராம் கச்சிதமாக பொருந்தி உள்ளார்.

சஞ்சனா நடராஜன், டி.ஜெ.பானு, நித்யஸ்ரீ, மெர்வின் ரோஜாரியோ, அம்ருதா சீனிவாசன் உட்பட அனைத்து கதாபாத்திரங்கள் இன்றைய காலகட்டத்தில் கல்லூரியில் எப்படி மாணவர்கள் இருக்கிறார்கள், அத்துடன் ஒரு சில மாணவர்கள் சாதியின் அடிப்படையில் எப்படி எல்லாம் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை தங்களது கதாபாத்திரத்தின் மூலம் நோத்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

சஞ்சித் ஹெக்டே, துருவ் விஸ்வநாத், கௌரவ் கோட்கிண்டி இசை, ஸ்கோர் மார்டன் டேப் ஸ்கோர்கள் (ஹரிஷ் வெங்கட் மற்றும் சச்சிதானந்த் சங்கரநாராயணன்), கௌரவ் கோட்கிண்டி பின்னணி இசை, ஜிம்ஷி காலித் மற்றும் பிரெஸ்லி ஆஸ்கார் டிசோசா ஒளிப்பதிவு, பிரியங்க் பிரேம் குமார் எடிட்டர், ரியாஸ் மற்றும் ஹபீப் ஆக்ஷன், மற்றும் கலை இயக்குனர் மணிமொழியன் ராமதுரை உட்பட அனைத்து டெக்னீஷியன்கள் சிறப்பான பணி கல்லூரி வாழ்க்கையை நம் கண் முன்னே கொண்டு வந்துள்ளது.

நட்பு, கேளிக்கை, கல்லூரி விழாக்கள், சீனியர்களும் ஜூனியர்களும் ஈடுபடும் நட்பான ராகிங் என வழக்கமான கல்லூரி வாழ்க்கையில் அன்றாடம் நடைபெறும் சம்பவங்களுடன், அரசியல் தலையீடு மற்றும் சாதி பாகுபாடு, ஜூனியர் மற்றும் சீனியர்களுக்கு இடையே பகை, சிறு வயதில் நடந்த கசப்பான சம்பவத்தால் இரு நண்பர்களுக்கு இடையேயான மனஉளைச்சல் நட்பின் சிக்கல்கள் என அனைத்தையும் இணைத்து கல்லூரி விழாவின் பின்னணியில், அரசியல் தலையீடு மற்றும் ஜாதி பாகுபாடு நிறைந்த திரைக்கதை அமைத்து இயக்குனர் பிஜாய் நம்பியார் தனது போர் படத்தை படைத்துள்ளார்.

மொத்தத்தில் டி-சீரிஸ், கெட்அவே பிக்சர்ஸ், ரூக்ஸ் மீடியா தயாரித்திருக்கும் போர் ஒருமுறை பார்க்கலாம்.