மைக்கேல் திரைப்பட விமர்சனம் : மைக்கேல் அதே பழைய யூகிக்கக்கூடிய பலவீனமான கேங்க்ஸ்டர் டிராமா | ரேட்டிங்: 2/5

0
320

மைக்கேல் திரைப்பட விமர்சனம் : மைக்கேல் அதே பழைய யூகிக்கக்கூடிய பலவீனமான கேங்க்ஸ்டர் டிராமா | ரேட்டிங்: 2/5

நடிகர்கள் : சந்தீப் கிஷான், கௌதம் வாசுதேவ் மேனன், திவ்யான்ஷா கௌசிக், வரலட்சுமி சரத்குமார், விஜய் சேதுபதி, அனுசுயா, வருண் சதீஷ், அய்யப்பா ஷர்மா, அணிஷ் குருவில்லா.
தமிழில் இதற்கு முன்னதாக ‘புரியாத புதிர்’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய திரைப்படங்களை இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இத்திரைப்படம் வெளியாகியுள்ளது. கரண் சி புரடெக்ஷன்ஸ் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். கிரண் கௌசிக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.மக்கள் தொடர்பு AIM.

90களின் காலகட்டங்களில் நடக்கும் ஒரு கேங்ஸ்டர் கதைதான் மைக்கேல் திரைப்படத்தின் மையக்கரு. குருநாத் (கௌதம் மேனன்) மும்பை மாஃபியா சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னன். அவரை ஒரு சிறுவன் மைக்கேல் (சுந்தீப் கிஷன்) ஒரு கொலை தாக்குதலில் இருந்து காப்பாற்றுகிறார். குருநாத் மைக்கேலை வளர்க்கும்படி அவரது உதவியாளர் சுவாமியிடம் (ஐயப்ப சர்மா) கேட்கிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, குருநாத் மீண்டும் மைக்கேலால் காப்பாற்றப்படுகிறார். அதன் பிறகு, மைக்கேல் குருநாத்தின் நம்பிக்கைக்குரிய மனிதர்களில் ஒருவராக மாறுகிறார். குருநாத் தனது மகன் அமர்நாத்தை (வருண் சந்தேஷ்) விட மைக்கேலை சார்ந்து இருக்கிறார். ரத்தன் (அனிஷ் குருவில்லா) தவிர தன் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட அனைவரையும் கொன்ற குருநாத், அவரையும் அவரது அவரது மகள் தீராவையும் (திவ்யான்ஷா கௌசிக்) டெல்லிக்கு சென்று கொல்லும் பொறுப்பை மைக்கேலின் கைகளில் விட்டுவிடுகிறார். ரத்தனைப் பிடிக்க மைக்கேல் ரத்தன் மகள் தீராவுடன் (திவ்யான்ஷா) பின்தொடர்கிறார். அங்கு அவள் மீது காதலில் வயப்படுகிறார். ரத்தனைப் பிடித்தாலும், மைக்கேல் அவனைக் கொல்லாமல் விட்டுவிடுகிறான். அதன் பின் கதாநாயகிக்கு ஏற்படும் சில பிரச்சனைகள், கதாநாயகனின் ஆக்ஷன் காட்சிகள் என படம் நீள்கிறது. இடையில் விஜய் சேதுபதி மற்றும் வரலட்சுமி ஆகியோரின் கதாபாத்திரங்கள் வருகின்றன. கதாநாயகியை பிரச்சனையில் இருந்து மைக்கேல் காப்பாற்றினாரா? விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் படத்தில் என்ன செய்கிறது? மைக்கேல் எதற்காக கேங்க்ஸ்டர் ஆகிறார்? அவரது எண்ணம் நிறைவேறியதா? என்பதுதான் படத்தின் மீதி கதையாக இருக்கிறது.

மனதில் இருக்கும் தீராத வலியை வெளிப்படுத்த முடியாத இளைஞனாக சந்தீப் கிஷான் படத்தில் அரிதாகவே பேசுகிறார். அவரது நடிப்பு மிகவும் செயற்கைத்தனமாக தெரிகிறது. கட்டுமஸ்தான் உடலமைப்புடன் தீவிரமான சண்டைக் காட்சிகளில் கவனம் செலுத்திய அவர் இறுகிய முகத்துடன் படத்தில் மிக குறைவான எக்ஸ்பிரஷனை வெளிப்படுத்துகிறார்.

திவ்யன்ஷா கௌஷிக் ஸ்டைலாக இருந்தாலும் முக்கியமான காட்சிகளில் உணர்ச்சிவசப்பட சிரமப்படுகிறார்.

ஒரு மாஃபியா டானாக கௌதம் மேனனின் துளியும் எடுபடவில்லை. அச்சுறுத்தும் உடல் மொழி அவரிடம் எங்கும் காண முடியவில்லை.

வருண் சந்தோஷின் அம்மாவாகவும், கவுதம் மேனனின் மனைவியாகவும் அனசுயாவின் கேரக்டருக்கு நடிக்க ஸ்கோப் இல்லை.

வருண் சந்தோஷின் கதாபாத்திரம் 90களின் காணப்படும் மேக்கப்புடன் நன்றாக இருக்கிறது. ஆனால், அவரது கதாபாத்திரம் பேசும்படி அமையவில்லை.

விஜய் சேதுபதி மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் சிறிய கேமியோக்களில் நடித்துள்ளனர். அவர்கள் நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இல்லை என்றாலும், விஜய் சேதுபதியின் பாத்திரம் வலுவானது. இடைவேளைக்கு பின் அவரது திரை பிரவேசம் ரகிகர்களை கவர்ந்து இருக்கையில் அமர வைக்கிறது. அவர்கள் இருவரும் இல்லையென்றால் இரண்டாம் பாதி முற்றிலும் இழுவையாக இருந்திருக்கும்.

கிரண் கௌஷிக்கின் ஒளிப்பதிவும், சாம் சிஎஸ்ஸின் இசை மற்றும் பின்னணி இசையும் திரைக்கதைக்கு மிகுந்த பலம் சேர்த்திருந்தாலும், ஏற்கனவே நாம் பார்த்து பழகிப்போன கேங்க்ஸ்டர் திரைப்படத்தின் சாயலில்தான் இந்த திரைப்படம் இருக்கிறது. என்றாலும் கதையின் பின்னணிக்கு ஏற்றவாறு லைட்டிங் தீம் மற்றும் கலர் கிரேடிங் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. தினேஷ் காசியின் சண்டைக்காட்சியும் சிறப்பாக உள்ளன.

முதல் 10 நிமிடங்களில் இந்தப் படம் மிகவும் ஏமாற்றமளிக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். கதை மற்றும் திரைக்கதை பெரும்பாலும் சலிப்பை ஏற்படுத்தும், ஏனென்றால் ஏற்கனவே நாம் பார்த்து பழகிப்போன கேங்க்ஸ்டர் திரைப்படங்களில் இருந்து நகலெடுக்கப்பட்டது. அதாவது… ‘மைக்கேல்’ கதையும், புதிதாக இருக்காது. கதை சொல்லப்பட்ட விதம் ‘கே.ஜி.எஃப்’ படத்தை ஞாபகப்படுத்தும். ஒரு அற்புதமான தொழில்நுட்பக் குழு இருந்தும், ரஞ்சித் ஜெயக்கொடி ஒரு பலவீனமான கேங்க்ஸ்டர் கதைக்கு ஈர்க்கக்கூடிய ரேஸியான திரைக்கதை அமைக்க தவறவிட்டதால் அவர் வெற்றி பெறவில்லை என்பது நிஜம்.

மொத்தத்தில் மைக்கேல் அதே பழைய யூகிக்கக்கூடிய பலவீனமான கேங்க்ஸ்டர் டிராமா.