காமி சினிமா விமர்சனம் : ‘காமி’ ஒரு வித்தியாசமான புதிய முயற்சி | ரேட்டிங்: 3/5

0
315

காமி சினிமா விமர்சனம் : ‘காமி’ ஒரு வித்தியாசமான புதிய முயற்சி | ரேட்டிங்: 3/5

நடிகர்கள் :
விஸ்வக் சென் – சங்கர்
சாந்தினி சவுத்ரி – டாக்டர் ஜானவி
அபிநயா – துர்கா
ஹரிகா பெட்டா – உமா (துர்காவின் மகள்)

தொழில்நுட்ப கலைஞர்கள் :
இயக்கம் – வித்யாதர் காகிடா
திரைக்கதை – வித்யாதர் காகிதா மற்றும் பிரத்யுஷ் வாத்யம்
ஒளிப்பதிவு – விஸ்வாந்த் ரெட்டி செலுமல்லா
இசை (பாடல்கள்) – ஸ்வீகர் அகஸ்தி
பின்னணி இசை – நரேஷ் குமரன்
படத்தொகுப்பு – ராகவேந்திர திருன்
தயாரிப்பு நிறுவனம் – கார்த்திக் கல்ட் கிரியேஷன்ஸ், வி செல்லுலாய்ட், வி ஆர் குளோபல் மீடியா, ஸ்வேதா வாகினி ஸ்டுடியோஸ் லிமிடெட், கிளவுன் பிக்சர்ஸ்
தயாரிப்பாளர் – கார்த்திக் சபரீஷ்
மக்கள் தொடர்பு – யுவராஜ்

ஷங்கர் (விஸ்வக் சென்) அகோரி. அவர் ஒரு தனித்துவமான நிலையில் அவதிப்படுகிறார். உடல் முழுவதும் ஷாக் அடித்த உணர்வுக்குச் சென்றுவிடுவார் (ர்யிhநிhழடியை). அவரால் மற்ற நபர்களுடன் உடல் ரீதியான தொடர்பு கொள்ள முடியவில்லை.  இதனால் மற்ற அகோரிகள் அனைவரும் அவரை ஆசிரமத்தை விட்டு வெளியேற்றி விடுகிறார்கள், ஏனெனில் அவரால் மற்ற அகோரிகளுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அதனால் தன் பிரச்சனைக்கு தீர்வு காண காசி செல்கிறார். அங்கே ஒரு துறவி சங்கரின் பிரச்சனைக்குத் தீர்வை கூறுகிறார். அதாவது, இமயமலையில் 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் மாலி பற்றலு என்ற மலரைக் கண்டறிவதன் மூலம் அவர் குணப்படுத்த முடியும் என்று கூறுகிறார். உடன் ஷங்கர் இமயமலைக்கு தனது பயணத்தைத் தொடங்குகிறார். மேலும் டாக்டர் ஜானவி (சாந்தினி சவுத்ரி) என்ற மருத்துவ விஞ்ஞானி அவருடன் செல்கிறார். மறுபுறம், ஒரு சிறுவன், தன்னையும் பிற நபர்களையும் அச்சுறுத்தும் சோதனைகளை நடத்தும் விநோதமான மருத்துவ ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளால் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு அறையில் சிறையிலிருந்து ‘Shawshank Redemption’ பாணியில் தப்பிக்க முயற்சிக்கிறான். அதே போல உமா (ஹரிகா பெத்தா) என்ற சிறுமி தன் தாய் துர்காவை (அபிநயா) போல் தேவதாசியாக மாறுவதைத் தவிர்க்க முயல்கிறாள். இதற்குப் பயந்து அந்தச் சிறுமியும் தப்பி ஓடுகிறாள். இந்தக் கதைகள் அனைத்தும் எவ்வாறு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு, அவர்கள் மூவரும் நினைத்ததை முடித்தார்களா, என்பதே படத்தின் மீதிக்கதை.

கதையின் முக்கியமான மற்றும் சவாலான கதாபாத்திரத்தில் விஸ்வ சென், அகோரி சங்கராக படம் முழுக்க ஒரே உடையில் தோன்றி படத்தின் உணர்ச்சிகரமான கதையை மேம்படுத்தும் வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

டாக்டர் ஜானவியாக நடித்த சாந்தினி சௌத்ரி, துர்காவாக நடித்த அபிநயா, உமாவாக நடித்த (ஹரிகா பெத்தா) தயானந்த் ரெட்டி, முகமது சமத், சாந்தி ராவ் மற்றும் மயங்க் பராக் உள்ளிட்ட அனைத்து நடிகர்கள், தங்கள் பாத்திரங்களில் ஈர்க்கப்பட்டனர்.

விஸ்வாந்த் ரெட்டி செலுமல்லா ஒளிப்பதிவு, ஸ்வீகர் அகஸ்தியின் பாடல்கள், நரேஷ் குமரனின் பின்னணி இசை, ராகவேந்திர திருன் படத்தொகுப்பு அகிய தெழில்ட்ப கலைஞர்களின் பங்களிப்பு ஒரே நேரத்தில் இயங்கும் மூன்று வித்தியாசமான கதைக்களங்கள் இருப்பு மிகுந்த ஆர்வத்தை உருவாக்குகிறது.

தேடலின் மையக் கருவை நோக்கி, விஸ்வக் சென்னின் பயணம், தேவதாசியாக மாறுவதை எதிர்க்கும் ஒரு இளம் பெண்ணின் அவலநிலை மற்றும் மருத்துவ பரிசோதனையை தவிர்க்கும் ஒரு சிறுவனின் முயற்சி என ஒரே நேரத்தில் மூன்று வித்தியாசமான கதைக்களங்கள் மூன்றடுக்குகளாகத் திரைக்கதையை விரித்து மூன்று கதைகள் சங்கமிக்கும் கிளைமாக்ஸில் முக்கிய விஷயத்தை வெளிப்படுத்தி உள்ளார் இயக்குனர் வித்யாதர் காகிடா.

மொத்தத்தில் கார்த்திக் கல்ட் கிரியேஷன்ஸ், வி செல்லுலாய்ட், வி ஆர் குளோபல் மீடியா, ஸ்வேதா வாகினி ஸ்டுடியோஸ் லிமிடெட், கிளவுன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து உள்ள ‘காமி’ ஒரு வித்தியாசமான புதிய முயற்சி.