பைரி பாகம் -1 சினிமா விமர்சனம் : பைரி பாகம் -1 உண்மையான கண்கவர் கூர்மையான பார்வை | ரேட்டிங்: 3/5

0
158

பைரி பாகம் -1 சினிமா விமர்சனம் : பைரி பாகம் -1 உண்மையான கண்கவர் கூர்மையான பார்வை | ரேட்டிங்: 3/5

நடிகர்கள் – கதாபாத்திரம் :
சையத் மஜீத் – ராஜலிங்கம்
மேகனா எலன் – ஷரோன்
விஜி சேகர் – சரஸ்வதி (அம்மா)
ஜான் கிளாடி – அமல்
சரண்யா ரவிச்சந்திரன் – சித்ரா
ரமேஷ் ஆறுமுகம் – ரமேஷ் பண்ணையார்
வினு லாரன்ஸ் – சுயம்பு
ஆனந்த் குமார் – திருமால் (ராஜலிங்கம் அப்பா)
கார்த்திக் பிரசன்னா – வில்லியம்
பிரான்சிஸ் கிருபா – ரவிச்சந்திரன் (சித்ரா அப்பா)
ராஜன் – அமல் அப்பா

தொழில்நுட்ப வல்லுநர்கள் :
தயாரிப்பு – வி.துரை ராஜ்
எழுதி இயக்கியவர் – ஜான் கிளாடி
ஒளிப்பதிவு – ஏ.வி. வசந்த குமார்
இசையமைப்பாளர் – அருண்ராஜ்
எடிட்டர் – ஆர்.எஸ்.சதீஷ் குமார்
ஃபைட் மாஸ்டர் – விக்கி
கலை இயக்குனர் – அனிஷ்
நடனம் – ஸ்ரீகிருஷ்
SFX – சதீஷ்
ஒலி வடிவமைப்பு – ராஜா நல்லையா
ஆடை வடிவமைப்பு – தினேஷ் அடி
ஒப்பனை – குமரேசன்
VFX – சேகர் முருகன்
பாடல் வரிகள் – கார்த்திக் நேதா, மோகன் ராஜன், பொன் மனோபன்
இணை இயக்குனர் – கங்கா ராம்
இணை இயக்குனர் – எஸ்.பன்னீர்செல்வம்,
முதல் உதவியாளர்கள் – மகேஷ் கேஸ்பர், ஜெய்சன்.
நிர்வாக தயாரிப்பாளர் – பொன் மனோபன், தினேஷ் குமார்
ஸ்டில்ஸ் – ஏ.ஜே.ஜோவி
தயாரிப்பு மேலாளர் – எஸ்.மாரியப்பன்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

படத்தின் கதை தென் தமிழகத்தின் நாகர்கோவில்-கன்னியாகுமரி பெல்ட்டில் உள்ள அறுகுவிளை கிராமத்தில், ‘ஒரு அம்மாவுக்கும் மகனுக்கும் இடையேயான பாசப் போராட்டங்கள்தான் படத்தின் கதை. தலைமுறை தலைமுறையாக புறா வளர்ப்பினால், தங்கள் குடும்பத்தில் பாதிப்பு ஏற்பட்டவே, தன் மகன் ராஜலிங்கமாவது (சையத் மஜீத்) அதில் ஈடுபடாமல் நல்ல வேலைக்கு போகணும் நினைக்கிறாங்க அம்மா சரஸ்வதி (விஜி சேகர்). ஏனெனில் அவர் தனது குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக ஆண்கள் அழிந்து போவதை கண்டவர். தன் மகன் அதற்கு இரையாகி தன் உயிரையும் இழக்க கூடாது என்பதில்  அம்மா  குறியாக இருக்கிறார். எனவே, புறா வளர்ப்பதில் இருந்து  மகனைக் கடுமையாக கட்டுப்படுத்துகிறார். அதற்குப் பதிலாக அவனது கல்லூரிக் கல்வியை முடித்து வேலைக்கு செல்லுமாறு மகனைத் தூண்டுகிறார். ராஜலிங்கம் இன்ஜினியரிங்  படித்துவிட்டு வேலைக்கு போகாமல் புறா வளர்ப்பதில் ஈடுபாடு காட்டுவதோடு, புறா பந்தயமும் நடத்தி வருகிறார். அம்மாவின் தொடர்ச்சியான கோபங்கள் இருந்தபோதிலும், ராஜலிங்கம் கவலைப்படாமல் தனது நெருங்கிய பால்ய நண்பர் அமலின் (ஜான் கிளாடி) உதவியுடன் வீட்டு மாடியில் பல வகை ஜாதி புறா வளர்த்து வருகிறார். அதே நேரத்தில் தனது புறாவிற்கு மற்றவர்களால் ஏதாவது கெடுதல் நடந்தால் கொலை வெறி தாக்குதலில் ஈடுபடுகிறார். அதே போல அறுகுவிளை கிராமம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள அனைவரும் புறாவை உயிராக எண்ணி அவற்றைப் பேணி பாதுகாத்து, அவர்கள் தங்கள் முழு நேரத்தையும் பறவைகள் இனப்பெருக்கம் மற்றும் ஒவ்வொரு சாதி புறாவை பந்தயத்திற்கு தயார் செய்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் ரமேஷ் பண்ணையார் (ரமேஷ் ஆறுமுகம்) நடத்தும் புறா ரேஸ் போட்டி வருகிறது. அப்பகுதியில் சில கொலைகளை செய்து பெரும் ரௌடியாக சுற்றி வருகிறார் சுயம்பு (வினு லாரன்ஸ்). புறா பந்தயத்தில் சுயம்பு செய்யும் மோசடியை ராஜலிங்கம் கண்டுபிடித்து தட்டிக் கேட்கிறார். இதனால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. அப்போது சுயம்பு எதிர்பார்க்காதது நடக்கிறது. அது என்னவென்றால், தனது மோசடி செயலுக்கு ராஜலிங்கம் சவால் விடும் ஒரு இணை போட்டியாளர் வருகிறார். எனவே, பந்தயத்தின் போது ராஜலிங்கம் சுயம்புவை வெளிப்படையாகக் கோபப்படும் படி வெறுப்பேற்றி கூப்பிடும்போது, சுயம்புவின் கோபம் ராஜலிங்கத்தின் மீது திரும்புகிறது. அதன் பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

ராஜலிங்கம் கதாபாத்திரத்தில் சையத் மஜீத் துணிச்சலான, முதிர்ச்சியடையாத இளைஞனாக, கோபம், நட்பு, பாசம் என அனைத்தையும் கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார்.

ரமேஷ் ஆறுமுகம் ரமேஷ் பண்ணையாராக கச்சிதமாக பொருந்தி அழுத்தமான நடிப்பு வெளிப்படுத்தியுள்ளார்.

மற்றும் மேகனா எலன் – ஷரோன், விஜி சேகர் – சரஸ்வதி (அம்மா), ஜான் கிளாடி – அமல், சரண்யா ரவிச்சந்திரன் – சித்ரா, வினு லாரன்ஸ் – சுயம்பு, ஆனந்த் குமார் – திருமால் (ராஜலிங்கம் அப்பா), கார்த்திக் பிரசன்னா – வில்லியம், பிரான்சிஸ் கிருபா – ரவிச்சந்திரன் (சித்ரா அப்பா), ராஜன் – அமல் அப்பா மற்றும் நிஜ பந்தயப் புறா வளர்க்கும் ஆட்கள் உட்பட அனைவரும் திரைக்கதைக்கு வேகத்தை கூட்டி நடிப்பில் ஈர்க்கக்கூடிய வகையில் நேர்த்தியான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

நெருக்கடி மிகுந்த தெருக்களில் மற்றும் கூட்டத்தில் சுழன்று சுழன்று காட்சி படுத்தி கடின உழைப்பை தந்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஏ.வி. வசந்தகுமார்.

இசையமைப்பாளர் அருண்ராஜ் இசையில் கார்த்திக் நேதா, மோகன் ராஜன், பொன் மனோபன் பாடல்கள் ஓகே. ஆனால் பின்னணி இசையில் கொஞ்சம் இரைச்சலை குறைத்து இருக்கலாம்..

விறுவிறுப்பான ஆர்.எஸ்.சதீஷ் குமார் படத்தொகுப்பு, அத்துடன் ஃபைட் மாஸ்டர் – விக்கி, கலை இயக்குனர் – அனிஷ், நடனம் – ஸ்ரீகிருஷ், SFX – சதீஷ், ஒலி வடிவமைப்பு – ராஜா நல்லையா, ஆடை வடிவமைப்பு – தினேஷ் அடி, ஒப்பனை – குமரேசன், VFX – சேகர் முருகன்,ஆகிய தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பு திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்து உள்ளது.

புறா பந்தயத்தை மையமாக வைத்து புறா பந்தயத்தில் ஈடுபடும் மக்களின் யதார்த்த வாழ்வியலை உணர்வுபூர்வமான படைப்பாக படைக்க முயற்சித்துள்ளார் இயக்குனர் ஜான் கிளாடி.

மொத்தத்தில் வி.துரை ராஜ் தயாரித்துள்ள பைரி பாகம் -1 உண்மையான கண்கவர் கூர்மையான பார்வை.