அரிமாபட்டி சக்திவேல் சினிமா விமர்சனம் : அரிமாபட்டி சக்திவேல் – அயர்ச்சி | ரேட்டிங்: 2/5

0
168

அரிமாபட்டி சக்திவேல் சினிமா விமர்சனம் : அரிமாபட்டி சக்திவேல் – அயர்ச்சி | ரேட்டிங்: 2/5

லைப்  சைக்கிள்   கிரியேஷன்ஸ் சார்பில் பவன் கே மற்றும் அஜிஸ்.பி ஆகியோர்கள் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ரமேஷ் கந்தசாமி இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள படம் ‘அரிமாபட்டி சக்திவேல்’.
நடிகர்கள் : சார்லி, பவன்.கே, மேகனா எலோன், இமான் அண்ணாச்சி, சூப்பர் குட் சுப்ரமணி, கராத்தே வெங்கடேஷ், ஹலோ கந்தசாமி, பிர்லா போஸ், அழகு, செந்தி குமாரி, சக்திவேல்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
தயாரிப்பாளர்கள்- அஜிஸ்.பி, பவன் கே
இயக்குநர் – ரமேஷ் கந்தசாமி
கதை, திரைக்கதை – பவன் கே
ஒளிப்பதிவு – ஜே பி மேன்
இசை – மணி அமுதவன்
படத்தொகுப்பு – ஆர்.எஸ். சதிஸ்குமார்
தயாரிப்பு – லைப்  சைக்கிள்  கிரியேஷன்ஸ்
தயாரிப்பாளர்கள்- அஜிஸ்.பி, பவன் கே
மக்கள் தொடர்பு – யுவராஜ்உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி உருவாகிய அரிமாபட்டி சக்திவேல், 1995 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திருச்சிக்கு அருகில் உள்ள அரிமாபட்டி என்ற இடத்தில் கதை தொடங்குகிறது. ஒரே சாதியினரை மட்டுமே உள்ளடக்கிய அரிமாபட்டி என்ற ஒரு கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்களுக்கென்று ஒரு கட்டுப்பாட்டை வழி வகுத்து வாழ்ந்து வருகின்றனர். அதாவது கட்டுப்பாட்டை மீறுபவர்களை கொலை செய்யும் அளவுக்கு அந்த அரிமாபட்டி மக்கள் இருந்து வருகிறார்கள். அரிமாபட்டி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் கவிதா (மேகனா எல்லன்) என்ற வேறு ஒரு ஜாதி பெண்ணை காதலிக்கிறான். அத்துடன் அவர்கள் இருவரும், அவர்களது  குடும்பத்தினருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஊர் கட்டுப்பாட்டை மீறி வேறு ஒரு ஜாதி பெண்ணை திருமணம் செய்த சக்திவேலை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறார்கள். இருவரும் தங்கள் கிராமங்களை விட்டு சென்னைக்கு செல்கிறார்கள். இதற்கிடையில், கிராம மக்கள் சக்திவேல் குடும்பத்தினர்களை ஒதுக்கி வைப்பதாக அச்சுறுத்தி அவரது குடும்பத்தினருக்கு தண்டனை வழங்கி வந்த நிலையில் கவிதாவின் அண்ணன் சுரேஷ் (பிர்லா போஸ்) சக்திவேல் குடும்பத்தினருக்கு மிரட்டல்கள் விடுத்து வருகின்றார். அத்துடன் சக்தி வேலை கொலை செய்ய திட்டமிடுகிறார். அதன் பின் அவர்கள் எந்த விதமான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பது அரிமாபட்டி சக்திவேல் படத்தின் மீதிக்கதை.
சக்திவேல் கதாபாத்திரத்திற்கு பவன் மற்றும் கவிதா கதாபாத்திரத்திற்கு மேகனா எலென் நடிப்பில் துளியும் ஈர்ப்பு இல்லை.
குழந்தைவேல் கதாபாத்திரத்தில் வழக்கம்போல் தனது அனுபவ நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்திய சார்லி மற்றும் அன்பழகன் கதாபாத்திரத்தில் இமான் அண்ணாச்சி, அண்ணன் சுரேஷ் கதாபாத்திரத்தில் பிர்லா போஸ், சின்ன கலிங்கண் கதாபாத்திரத்தில் அழகு, தங்கவேல் கதாபாத்திரத்தில் சூப்பர் குட் சுப்ரமணி, கஜேந்திரன் கதாபாத்திரத்தில் சேதுபதி ஜெயசந்திரன் உள்ளிட்ட துணை கதாபாத்திரங்களின் பங்களிப்பு பலவீனமான திரைக்கதையால் அவர்கள் நடிப்பு திறன் வீணடிக்கப்பட்ட உள்ளது.
மணி அமுதவன் இசை மற்றும் பின்னணி இசை சுமார்.
கிராமத்து இயற்கையை அழகை ஒளிப்பதிவாளர் ஜே பி மேனின் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார்.
பலவீனமான திரைக்கதையை படத்தொகுப்பாளர் ஆர்.எஸ். சதிஸ்குமார் முடிந்த அளவுக்கு ஒட்டி உள்ளார்.
சாதியை தழுவிய ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை களம் வெற்றி பெற வேண்டும் என்றால் வலிமையான திரைக்கதை மற்றும் விறுவிறுப்பான காட்சி அமைப்பு ரொம்ப முக்கியம். அப்போது தான் பார்வையாளர்கள் மத்தியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் திரைக்கதையில் பவன் கே இவை அனைத்தையும் சரியாக இணைக்க தவறி விட்ட தால் இயக்குநர் ரமேஷ் கந்தசாமியால் அரிமாபட்டி சக்திவேல் படத்தை சரியாக காட்சிப்படுத்தி விவரிக்க முடியவில்லை.
மொத்தத்தில் லைப் சைக்கிள் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள அரிமாபட்டி சக்திவேல் – அயர்ச்சி.