| ரேட்டிங் – 3/5777 சார்லி விமர்சனம் : குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தோடு சென்று ரசிக்கலாம்| ரேட்டிங் – 3/5

0
9

777 சார்லி விமர்சனம் : குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தோடு சென்று ரசிக்கலாம்| ரேட்டிங் – 3/5

பரம்வா ஸ்டூடியோஸ் ஜி.எஸ்.குப்தா மற்றும் ரக்ஷித் ஷெட்டி, ஸ்டோன்பெஞ்ச் சார்பில் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து தயாரித்திருக்கும் படத்தில் ரக்ஷித் ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி,  ராஜ் பி.ஷெட்டி, பாபி சிம்ஹா, தன்ராஜ்.எஸ்., ஷர்வரி, கோபாலகிருஷண தேஷ்பாண்டே, சல்மான் அகமது, டேனிஷ் சையத், அபிஜித் மகேஷ்  ஆகியோர் நடித்துள்ளனர்.
777 சார்லி. படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கிரண்ராஜ்.கே.படத்தின் இசை மற்றும் பின்னணி இசை நோபின் பால், அரவிந்த் எஸ். காஷ்யப் ஒளிப்பதிவில் படத்தொகுப்பை பிரதீக் ஷெட்டி கவனித்துள்ளளார். சார்லியின் பயிற்சியாளர் பிமோத் பி.சி, வசனங்கள்-கே.என்.விஜயகுமார், பாடல் வரிகள்-மோகன்ராஜா, மதுர கவி, முத்தமிழ், சாயீஷ் பொய் பனாண்டிகர், அகெ;சிஸ் டிசிசோசா, இணை தயாரிப்பு-கல் ராமன், எஸ்.சோமசேகர், கல்யாண் சுப்மணியன், இணைத் தயாரிப்பாளர்-பவன் நரேந்திரன், பிஆர்ஒ- நிகில்.
சிறு வயதிலேயே விபத்தில் குடும்பத்தை இழந்து அனாதையாக வளரும் ரக்ஷித் வாழ்க்கையில் பிடிப்பில்லாமல் வாழ்கிறார். அவரின் வீட்டருகே சார்லி என்ற பெண் நாய்குட்டி வந்து சேருகிறது. முதலில் அதை பொருட்படுத்தாமல் இருக்கும் ரக்ஷித் ஒரு விபத்தில் அடிபடும் சார்லியை காப்பாற்ற, அதன் பின் தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார். நாளடைவில் சார்லியின் குறும்புத்தனம், அட்டகாசங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் இருந்தாலும் அதனுடன் பாசப்பிணைப்பு ஏற்பட்டு பின் சார்லியுடன் நன்றாக பழகுகிறார். இதனிடையே சார்லி உடல் நலம் சரியில்லாமல் போக டாக்டரிடம் அழைத்துச் செல்கிறார் ரக்ஷித், அப்பொழுது தான் சார்லிக்கு புற்றுநோய் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதை அறிகிறார். சார்லி இறப்பதற்குள் பிடித்தமானவற்றை காட்டி விட வேண்டும் என்ற முனைப்புடன் இமயமலைக்கு புல்லட் வண்டியில் அழைத்துச் செல்கிறார். வழியில் நண்பர் பாபி சிம்ஹாவின் வீட்டில் சிறிது நாள் ஒய்வெடுத்துவிட்டு செல்லும் ரக்ஷித்திற்கு அதன் பின் கடினமான பயணமாக அமைகிறது. ஒரு புறம் சார்லியின் உடல் மோசமடைய, மறுபுறம் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார். இந்நிலையில் சார்லியை இமயமலைக்கு ரக்ஷித் அழைத்துச் சென்றாரா? சார்லி மகிழ்ச்சி அடைந்ததா? இறுதியில் சார்லிக்கு என்னவானது? என்பதே கண் கலங்க வைக்கும் க்ளைமேக்ஸ்.
ரக்ஷித் ஷெட்டி மற்றும் சார்லி நாய் இருவருக்கும் இடையே ஏற்படும் பந்தம் இறுதிவரை பாசப் போராட்டத்துடன் கதைக்களத்தை அமைத்திருக்கும் விதம் அருமை. ரக்ஷித் ஷெட்டி ஒரு புறம் யதார்த்தமான நடிப்பால் கவர்ந்தால், சார்லி ஒரு புறம் பாச மழையாலும், சுட்டித்தனத்தாலும் அசத்திவிடுகிறது. பாராட்டுக்கள்.
மற்றும் சங்கீதா சிருங்கேரி,  ராஜ் பி.ஷெட்டி, பாபி சிம்ஹா, தன்ராஜ்.எஸ்., ஷர்வரி, கோபாலகிருஷண தேஷ்பாண்டே, சல்மான் அகமது, டேனிஷ் சையத், அபிஜித் மகேஷ் ஆகியோர் படத்திற்கு பக்க பலம்.
இசை மற்றும் பின்னணி இசையால் நோபின் பால் கலங்கடித்துவிடுகிறார்.
அரவிந்த் எஸ். காஷ்யப் ஒளிப்பதிவு படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் எடுத்திருக்கும் பொறுமை, கடினமான மெனக்கெடல்கள் படத்தில் காட்சிக்கோணங்களில் மிளிர்கிறது. ஆரம்பம் முதல் இறுதி காட்சி பனி மலை வரை கண்களுக்கு விருந்து படைக்கிறார்.
படத்தொகுப்பு பிரதீக் ஷெட்டி, சார்லியின் பயிற்சியாளர் பிமோத் பி.சி, வசனங்கள்-கே.என்.விஜயகுமார் ஆகியோர் படத்தின் விறுவிறுப்புக்கு தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.
ஒரு மனிதனுக்கும், நாய்க்கும் இடையேயான பாசம், விபத்தில் ஏற்படும் பந்தம், சார்லிக்காக புகைப்பதை கைவிடுவதும், வசிக்கும் காலனிவாசிகளை பகைத்துக் கொள்வதும், தத்தெடுக்க வரும் குடும்பத்திலிருந்து சார்லியை திரும்ப அழைத்து வருவது, அதன் பின் ஏற்படும் எதிர்பாராத திருப்பம் சார்லி இறந்து விடும் என்பதை அறிந்து துடிப்பதும். அதற்காக ஆசையை நிறைவேற்ற புறப்படும் பயணம், திடீர் நட்பு என்று படம் முழுவதும் அள்ளித்தெளித்திருக்கும் காட்சிகள் படத்தின் உயிர்நாடிகள். இயக்குனர் கிரண்ராஜ்.கே படத்தில் கொடுத்திருக்கும் உழைப்பு பெரிது. அவரின் முயற்சிக்கும், பொறுமைக்கும் பலன் கை மேல் கிடைத்துள்ளது. க்ளைமேக்ஸ் காட்சியில் சார்லி நடிப்பால் நெஞ்சை நெகிழ செய்து விடுகிறது. நாய் வளர்க்க ஆசைப்படாதவர்கள் கூட இப்படத்தை பார்த்தால் மனதை மாற்றிக் கொள்ளும் அளவிற்கு படம் நெகிழ்ச்சிதன்மை வாய்ந்ததாக உள்ளது.
மொத்தத்தில் பரம்வா ஸ்டூடியோஸ் ஜி.எஸ்.குப்தா மற்றும் ரக்ஷித் ஷெட்டி, ஸ்டோன்பெஞ்ச் சார்பில் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து தயாரித்திருக்கும் 777 சார்லி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தோடு சென்று ரசிக்கலாம், சார்லியின் குறும்புத்தனத்தையும், புத்திசாலித்தனத்தையும், பாசத்தையும் கண்டு மகிழலாம்.