4554 விமர்சனம்: ‘4554′ ஓட்டுனர்கள் தினம் சந்திக்கும் இடர்பாடுகளை கண்ணாடி போல் காட்டும் படம் | ரேட்டிங்: 2.5/5

0
129

4554 விமர்சனம்: ‘4554′ ஓட்டுனர்கள் தினம் சந்திக்கும் இடர்பாடுகளை கண்ணாடி போல் காட்டும் படம் | ரேட்டிங்: 2.5/5

நடிகர்கள்: அசோக், ஷீலா நாயர், டாக்டர். கர்ணன் மாரியப்பன், எஸ்ஆர் கோதண்டம், பெஞ்சமின், குட்டிப்புலி சரவண சக்தி, ஜாகுவார் தங்கம், கிரேன் மனோகர், மகேஷ் சேதுபதி, கம்பம் மீனா
ஒளிப்பதிவு : வினோத் காந்தி
படத் தொகுப்பு : விஷால்
இசை: ரஷாந்த் அர்வின்
தயாரிப்பு நிறுவனம் : மன்னன் ஸ்டுடியோஸ்
தயாரிப்பு : டாக்டர்.பிரபா கர்ணன்
இயக்கம் : டாக்டர். கர்ணன் மாரியப்பன்
வண்டி உரிமையாளரும் டிரைவருமான கார்த்தி (அசோக்), தான் காதலித்த பெண்ணான ஷீலாவை இரண்டு தினங்களில் திருமணம் செய்யவிருக்கிறார். இந்நிலையில் துபாய் சென்று திரும்பும் நண்பர்கள் 4 பேரை முதல் சவாரியாக பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு அழைத்துச் செல்கிறார்.  திருமணத்தின் முந்தைய நாளில் செல்லும் கார்த்தி தனது வாடிக்கையாளர்களில் ஒருவரால் ஒரு சூழ்நிலையில் சிக்கித் தவிக்கிறார், மேலும் பயணத்தின் போது அவர்கள் சேலம் சென்று விட்டு பிறகு தான் சென்னை பயணம் என்கிறார்கள். அவர் தனது பொறுப்பை சமநிலைப்படுத்தி, டிரைவர் சந்திக்கும் பிரச்சனைகளை சமாளித்தாரா? பயணத்தின் போது அசோக்கிற்கு என்னென்ன நடந்தது.? சென்னை சேர்ந்த  பின் மீண்டும் ஏற்பட்ட சிக்கல் என்ன? சரியான நேரத்திற்குள் திருமணத்திற்கு அவரால் போக முடிந்ததா? திருமணம் நடந்ததா? என்பதை வெள்ளித் திரையில் காண்க.
டிரைவர்களின் இன்னல்களையும், அவர்களின் வாழ்வியலையும் சில உணர்வுகளை முகபாவத்தின் மூலம் வெளிப்படுத்துவது தான் சிறந்த கலைஞனின் கடமை. அதை நாயகன் அசோக் எல்லா படத்திலும் நடிப்பது போல ஒரே முகபாவத்துடன் வழக்கமான நடிப்பை தான் வழங்கியுள்ளார்.
ஷீலா நாயர், டாக்டர். கர்ணன் மாரியப்பன், எஸ்ஆர் கோதண்டம், பெஞ்சமின், குட்டிப்புலி சரவண சக்தி, ஜாகுவார் தங்கம், கிரேன் மனோகர், மகேஷ் சேதுபதி, கம்பம் மீனா ஆகியோர் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
ரஷாந்த் அர்வின் இசை ஓகே என்றாலும், ஒளிப்பதிவில் வினோத் காந்தியும், படத் தொகுப்பில் விஷாலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஒரு கால் டாக்ஸி டிரைவரின் வாழ்வில் ஒரு நாள் நடக்கும் நிகழ்வைக் கருவாகக் கொண்டு இயக்கியுள்ளார் இயக்குநர் டாக்டர் கர்ணன் மாரியப்பன். முழுக்க முழுக்க ஒரு கால் டாக்ஸி டிரைவரைப் பற்றிப் பேச முயற்சிக்கும் போது திரைக்கதையில் தேவையற்ற அலுப்புத்தட்டும் காட்சியை நீக்கி இன்னும் விறுவிறுப்பு சேர்த்திருந்தால் 4554 வேகம் அதிகரித்திருக்கும்.
மொத்தத்தில் மன்னன் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர்.பிரபா கர்ணன் தயாரித்திருக்கும் ‘4554′ வேகம் குறைவு… பயணம் சிறப்பு.