ஸ்ட்ரைக்கர் திரைப்பட விமர்சனம் : ஸ்ட்ரைக்கர் பயமுறுத்த வில்லை | ரேட்டிங்: 2/5

0
236

ஸ்ட்ரைக்கர் திரைப்பட விமர்சனம் : ஸ்ட்ரைக்கர் பயமுறுத்த வில்லை | ரேட்டிங்: 2/5

ஜேஎஸ்ஜே சினிமாஸ், தயாரித்துள்ள படம், ஸ்ட்ரைக்கர். இதில் ஜஸ்டின் விஜய், வித்யா பிரதீப், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், கஸ்தூரி சங்கர், அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.ஏ.பிரபு.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
இயக்குனர்: எஸ் ஏ பிரபு
இசை: விஜய் சித்தார்த்
ஓளிப்பதிவு : மணீஷ் மூர்த்தி
எடிட்டிங்: நாகூரன்
பாடலாசிரியர்: ஹரிசங்கர் ரவீந்திரன்
ஆடை வடிவமைப்பாளர்: அகிலன் ராம்
கிரியேட்டிவ் ஹெட்: அசோக் பெரியசாமி
வசனங்கள்: எஸ் ஏ பிரபு
நடனம்: ஜே.எம்., ராபர்ட் நாத்
சண்டைக்காட்சிகள்: சங்கர்
கலை இயக்குனர்: ஆனந்த் மணி
பின்னணி இசை: ஏவு மோனிஷ் மற்றும் ஏவு பாரதி
ஸ்டில்ஸ்: பாக்கியா
போஸ்டர் வடிவமைப்பாளர்: ஜோசப் ஜாக்சன்
ஒலிப்பதிவாளர்: சுகவேதன் வி.பி
VFX: அஜித்குமார் மணிகண்டன், தனசேகர்
SFX: சேது
DI வண்ணம்: பரணி
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அகமது
தயாரிப்பு நிர்வாகி: சுகிதன் சக்திவேல்
நிர்வாகத் தயாரிப்பாளர்: ராஜேஷ் கிருஷ்ணன் ஆர்
தயாரிப்பு: ஹென்ட்ரி டேவிட் ஐஆர், ஜஸ்டின் விஜய் ஆர்

கதாநாயகன் ஜஸ்டின் விஜய் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். நாயகி வித்யா பிரதீப் Youtube சேனல் நடத்தி வருகிறார்.ஜஸ்டின் விஜய்க்கு ஒயிஜா போர்டை வைத்து ஆவிகளுடன் பேசுவது, அமானுஷ்யங்களை பற்றிய ஆர்வம் அதிகமாக இருக்கிறது.மேலும் ஆவிகளுடன் பேசுவது பற்றி தெரிந்து கொள்ள ஆவிப் பயிற்சியாளர் கஸ்தூரியிடம் படித்து வருகிறார். அப்போது பயிற்சியாளர் அறிவுரைகள் கூறுகிறார். அதை மீறி செயல்பட்டால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்றும் எச்சரிக்கிறார்.ஆவிகளுடன் பேசும் ஜஸ்டின் விஜயை  பேட்டி எடுக்க யூடியூப்பரான வித்யா பிரதீப் வருகிறார். அவர்களது நட்பு காதலாக மாறுகிறது. இருவரும் இறந்து போன ராஜேந்திரன்; ஆவி இருக்கும் வீட்டுக்குள் அந்த ஆவியுடன் பேசப் போகிறார்கள். ஓஜா போர்டு மூலம் இறந்து போன ராஜேந்திரன் ஆவியோடு பேச ஆரம்பிக்கிறார்கள். அதன் பின் என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை.
அமானுஷ்யங்களை பற்றிய கதைகள் என்றால் நடிப்பு திறமையை வெளிப்படுத்த நிறைய இடமிருக்கும். அப்படி அந்தப் படத்திலும் அதற்கான ஸ்பேஸ் இருந்தும் கதாநாயகன் ஜஸ்டின் விஜய் சரியாக வந்த வாய்ப்பை பயன் படுத்தவில்லை. வித்யா பிரதீப், கஸ்தூரி, டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், தங்களது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளனர்.
அமானுஷ்ய கதைகளத்திற்கு ஏற்றவாறு பார்வையாளர்களை யாரும் பயமுறுத்தும் வகையில் அமையவில்லை விஜய் சித்தார்த் இசை மற்றும் பின்னணி இசை. மணீஷ் மூர்த்தி ஒளிப்பதிவு மற்றும் நாகூரன் படத்தொகுப்பு ஓர் அளவுக்கு திக்திக் ஏற்படுத்துகிறது.
அமானுஷ்யத்தை ‘மறைக்கப்பட்ட, இரகசியமான மற்றும் மர்மமான, குறிப்பாக இயற்கைக்கு அப்பாற்பட்டது” என்று அகராதி வரையறுக்கிறது. ஜோதிடம், மாந்திரீகம் (விக்கா), கண்கட்டி வித்தைகள், அதிர்ஷ்டம் சொல்லுதல், மந்திரம், ஓய்ஜா பலகைகள், டாரட் கார்டுகள், ஆவியுலகத் தொடர்பு, குறி சொல்லுதல் மற்றும் சாத்தானியம் ஆகியவை அமானுஷ்ய நடைமுறைகளுக்கு எடுத்துக்காட்டுகள். பண்டைய காலங்களிலிருந்து இன்று வரை, மனிதர்கள் எப்போதும் அமானுஷ்யத்தில் ஆர்வமாக உள்ளனர். அமானுஷ்யத்தில் ஈடுபடும் பலர் ஆர்வத்துடன் ஓய்ஜா பலகையுடன் விளையாடுவது போன்ற “தீங்கற்ற” நடைமுறைகளுடன் தொடங்குகிறார்கள். அந்த வகையில் ஓய்ஜா பலகையுடன் ஆவியை வரவழைத்து ஆவியுடன் பேசும் ஒரு பகுதியை எடுத்து விறுவிறுப்பு மற்றும் துளியும் திகில் ஏற்படுத்தும் காட்சிகள் இல்லாத திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் எஸ்.ஏ.பிரபு.
மொத்தத்தில் ஜேஎஸ்ஜே சினிமாஸ் தயாரித்துள்ள ஸ்ட்ரைக்கர் பயமுறுத்த வில்லை.