வெப் திரைப்பட விமர்சனம்: வெப் இளைஞர்களுக்கான பாடம் | ரேட்டிங்: 2.5/5

0
295

வெப் திரைப்பட விமர்சனம்: வெப் இளைஞர்களுக்கான பாடம் | ரேட்டிங்: 2.5/5

வேலன் புரொடக்‌ஷன் சார்பாக வி.எம் முனிவேலன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஹாரூன் இயக்கத்தில், நட்டி நட்ராஜ், ஷில்பா மஞ்சுநாத், அனன்யா மணி, நந்தினி மாதேஷ், ஷஷ்வி பாலா, மொட்டை ராஜேந்திரன்  உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் வெப் (WEB).

 கிறிஸ்டோபர் ஜோசப் படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, சுதர்ஷன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். கார்த்திக் ராஜா இசையமைக்க, ஹரூன் இப்படத்தை இயக்கியுள்ளார். மக்கள் தொடர்பு மற்றும் நிர்வாக தயாரிப்பாளராக கே.எஸ்.கே செல்வா பொறுப்பேற்றுள்ளார்.

ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் ஷில்பா மஞ்சுநாத்,  தனது இரு நண்பர்கள், சாஷ்வி பாலா, சுபபிரியா மலர். மூவரும் ஒரே கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். வீக் எண்ட் பார்ட்டி என்று அடிக்கடி போதைப்பொருள் மற்றும் மதுபானம் என கும்மாளம் அடித்து ஜாலியாக, சுதந்திரமாக வாழ்கிறார்கள். ஒரு நாள் தனது நிறுவனத்தில தங்களுடன் வேலை செய்யும் புதுமண தம்பதிகள் ராகேஷ் மற்றும் அனன்யா இருவரையும் பார்ட்டிக்கு அழைத்து சென்று அனன்யாவை மது பழக்கத்திற்கு ஆளாக்குகிறார்கள். பார்ட்டி முடிந்து திரும்பும் போது இவர்கள் நான்கு பேரும் சைக்கோ மனிதன் வீரா (நட்டி) கடத்தி ஒதுக்கு புறத்தில் உள்ள ஒரு பங்களாவில் அடைத்து வைக்கிறான். சைக்கோ மனிதன் ஏன் கடத்தினான் என்று இவர்கள் யாருக்கும் தெரியாத நிலையில் வேதனையுடன், வெறியுடனும் இருக்கிறார்கள்.  பல நாட்களாக, அவர்கள் அடிபட்டு, சிறைபிடிக்கப்பட்டு இருக்கும் வேளையில் நண்பர்களில் ஒருவரான அனன்யா  கொல்லப்படுகிறார். இந்த சைக்கோ மனிதனிடமிருந்து தப்பிக்க பெண்கள் தீவிரமாக முயற்சிக்கும் போது, அந்த முயற்சி தோல்வியில் தான் முடிகிறது. வீரா ஏன் கடத்தினார்? அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? வீரா யார்? கடத்தப்பட்டவர்கள் என்ன ஆனார்கள்? என்பது வெப் படத்தின் மீதிக்கதை.

வழக்கமான ஹீரோயிசம் பாதையில் இருந்து சைக்கோத்தனமான கதாபாத்திரத்தில் வித்தியாசமான மாறுபட்ட நடிப்பை தருகிறேன் என்று ஒரே மாதிரியான ரியாக்‌ஷன் கொடுத்து நம்முடைய பொருமையை ரொம்பவே சோதித்து விட்டார் நட்டி.
ஷில்பா மஞ்சுநாத், அனன்யா மணி, ஷாஸ்வி பாலா, சுபப்ரியா  உட்பட அனைவரும் கதாபாத்திரத்திற்கு உணர்ச்சிபூர்வமான நடிப்பை தந்து தங்கள் பாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளனர். குறிப்பாக ஷில்பா மஞ்சுநாத், பெரும்பாலான காட்சிகள் சிறப்பான பங்களிப்பை தந்து ஸ்கோர் செய்துள்ளார்.
பார்வையாளர்களுக்கு ஒரே மாதிரியான சளிப்பை ஏற்படுத்தும் ரியாக்‌ஷன்களிலிருந்து சற்று ரிலாக்ஸாக வைக்கிறது மொட்டை ராஜேந்திரன் நகைச்சுவை காட்சி.
ஒளிப்பதிவு – கிறிஸ்டோபர் ஜோசப், இசை – கார்த்திக் ராஜா, எடிட்டர் – சுதர்சன் ஆர், கலை இயக்குனர் – அருண் சங்கர் துரை, ஸ்டண்ட் – தீ கார்த்திக் ஆகியோர் பலவீனமான திரைக்கதைக்கு முடிந்த வரை தங்களின் சிறந்ததைக் வழங்கியுள்ளனர்.
சஸ்பென்ஸ் திரில்லர் ஜோனர் படங்களின் வழக்கமான பாணியை பின்பற்றி சைக்கோ – த்ரில்லர் அனுபவத்துடன், போதை மற்றும் ராஷ் டிரைவிங் பற்றிய விழிப்புணர்வு சேர்த்து வழங்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஹாரூன். அனைவரும் எளிதில் யூகிக்கக்கூடிய திரைக்கதை அமைத்து இறுதியில் ஒரு திடீர் திருப்பத்தை கொடுத்துள்ளார்.
மொத்தத்தில் வேலன் புரொடக்‌ஷன் சார்பாக வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள வெப் இளைஞர்களுக்கான பாடம்.