விஜயானந்த் விமர்சனம் : விஜயானந்த் வாழ்க்கை வரலாறு உண்மையில் நம் அனைவருக்கும் ஒரு உத்வேகம் | ரேட்டிங்: 3.5/5

0
499

விஜயானந்த் விமர்சனம் : விஜயானந்த் வாழ்க்கை வரலாறு உண்மையில் நம் அனைவருக்கும் ஒரு உத்வேகம் | ரேட்டிங்: 3.5/5

நடிகர்கள்: நிஹால் ராஜ்புத், ஸ்ரீ அனந்த் நாக், பிரகாஷ் பெலவாடி, வி ரவிச்சந்திரன், அனிஷ் குருவில்லா, வினயா பிரசாத், சிரி பிரஹலாத், பாரத் போபண்ணா, நிஹால், ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைன் ஷெட்டி, அர்ச்சனா கோட்டிகே.
இசையமைப்பாளர்: கோபி சுந்தர் சி
ஒளிப்பதிவு: கீர்த்தன் பூஜாரி
எடிட்டர்: ஹேமந்த் குமார் டி
தயாரிப்பாளர்: டாக்டர் ஆனந்த் சங்கேஷ்வர்
தயாரிப்பு – விஆர்எல் பிலிம் புரொடக்ஷன்ஸ்
இயக்குனர்: ரிஷிகா சர்மா
மக்கள் தொடர்பு : யுவராஜ்லாஜிஸ்டிக்ஸ் நிறுவனர் விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட விஜயானந்த் படத்தின் மூலம் வி.ஆர்.எல். பிலிம்ஸ் திரைப்படத் தயாரிப்பு தொடங்கி தயாரித்துள்ள படத்தை பற்றி பார்ப்போம்.விஜய் (நிஹால் ராஜ்புத்) என்ற 19 வயது இளைஞன், தனது தந்தை பி ஜி சங்கேஷ்வரின் (அனந்த நாக்) அச்சகத்தில் பணிபுரிந்து அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறார். தந்தை பி ஜி சங்கேஷ்வரின் (அனந்த் நாக்) விருப்பத்திற்கு மாறாக, அவர்களது பிரிண்டிங் பிரஸ்ஸிற்காக ஒரு நவீன தானியங்கி அச்சு இயந்திரத்தை தன்னுடன் கொண்டு வருவதைக் கொண்டு படம் தொடங்குகிறது. புதிய இயந்திரத்தின் மூலம் அவர்களின் வணிகம் எதிர்பார்த்தபடி செழித்தோங்குகிறது விஜய் உயர்ந்த இலக்கை அடையத் தொடங்குகிறார். ஆனால் விஜய் தனது தனிப்பட்ட வளர்ச்சியில் மகிழ்ச்சியடையாமல் தனது பரம்பரையான புத்தக வெளியீட்டுத் தொழிலை விட்டுவிட்டு, போக்குவரத்துத் தொழிலைத் தொடங்குகிறார். அவர் சரக்கு போக்குவரத்து துறையில் மற்றொரு வணிகத்திற்கு தன்னை தயார்படுத்திக்கொண்டு ஒரு டிரக்கை வாங்க முயல்கிறார். இந்த முறை மீண்டும் அவரது தந்தையின் விருப்பத்திற்கு எதிராக விஜய் வலுவான மன உறுதியுடன் செயல்பாட்டாலும் அவர் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார். தொடர் முயற்சிகள், நண்பர்களின் ஆதரவு மற்றும் உதவிக்கு பிறகு விஜய் தனது தொழிலை நிறுவிகிறார். அரசியலில் அடியெடுத்து வைக்கும் அளவுக்கு நன்கு அறியப்பட்ட அவர் தனது போராட்டத்தின் ஒரு பகுதியாக கர்நாடகாவில் ஒரு பத்திரிகையையும் தொடங்கி மாநிலத்தின் மிகவும் வெற்றிகரமான செய்தித்தாளை நடத்துகிறார். அவர் வாழ்க்கையில் எப்படி பல தடங்கல்களை கடந்து சாதித்தார் என்பதுதான் படத்தின் கதை.

விஜய் சங்கேஷ்வராக நிஹால்  தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை அனுபவித்து, தனது சொந்த பாதையை நிர்ணயிக்கும் ஒரு புத்திசாலியான வணிக அதிபர் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ளார். விஜய் சங்கேஷ்வர் கதாபாத்திரத்தை கச்சிதமாக காட்டி இவரின் பவர் பேக் நடிப்பு இந்த முரண்பட்ட கதாபாத்திரத்தை சிறந்த முறையில் வெளிக்கொண்டு வந்துள்ளது.
செய்தித்தாள் உரிமையாளராக நடித்திருக்கும் பிரகாஷ் பெலவாடி தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.
ட்ரான்ஸ்போர்ட் பிசினஸில் தொழிலாளர்கள் மத்தியில் நன்மதிப்பில் இருக்கும் கணேஷ் தாதாவாக மூத்த நடிகர் வி.ரவிச்சந்திரன் கம்பீரமாக தோன்றினாலும் கதையின் அடிப்படையில் மிகச் சிறிய பங்கைக் கொண்டிருந்தாலும் கதைக்களத்தைப் பொறுத்தவரை, அவரது கதாபாத்திரம் விஜய் சங்கேஷ்வரின் வெற்றிப் பயணத்தில் அவரிடமிருந்து வரும் நிதியுதவி மிக முக்கியமான பகுதியாகும்.
விஜய் சங்கேஷ்வரின் தந்தையாக மூத்த நடிகர் ஆனந்த் நாக் பி ஜி சங்கேஷ்வர் போன்ற அமைப்பிற்கு மதிப்பு மற்றும் தீவிரத்தை சேர்க்க உதவுகிறார். மற்றும் மனைவியாக வினயா பிரசாத், விஜய் சங்கேஷ்வரின் மகன் ஆனந்தாக பரத் போபண்ணா, சிரி பிரஹலாத், அர்ச்சனா கோடிக், அனிஷ் குருவில்லா, ஷைன் ஷெட்டி ஆகியோர் வரம்புக்குட்பட்ட சிறப்பான நடிப்பை வழங்கியது பாராட்டுக்குரியது.
கோபி சுந்தர் இசையில் கமர்ஷியல் டச் சேர்க்கும் வகையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது. கீர்த்தன் பூஜாரியின் ஒளிப்பதிவு, மற்றும் ஃப்ரேமிங் பார்வையாளர்களை உடனடியாக விஜயானந்தின் உலகிற்குள் இழுத்து கதையின் மூலம் நகர்த்துகிறது. மற்றும் ஹேமந்த் குமார் டி படத்தொகுப்பும், ரிஷிகா ஷர்மாவின் கலை மற்றும் ஆடை வடிவமைப்பும் படத்தின் தயாரிப்பு வடிவமைப்புக்கு நன்றாக பலம் சேர்த்துள்ளது.
வாழும் லெஜண்ட் பத்மஸ்ரீ விருதைப் பெற்ற விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான விஜயானந்த் ஸ்கிரிப்ட் சிறப்பாகவும் ஈர்க்கக் கூடியதாகவும் உள்ளது. ஒரு உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் பார்வையாளர்களிடம் உணர்ச்சிபூர்வமாக மிகவும் யதார்த்தமாக காட்டப்பட்டுள்ளது. அதிகம் அறியப்படாத இந்தக் கதையை மக்களின் கவனத்திற்கு கமர்ஷியல் டச்சுக்காக இளைஞர்களை கவரும் வகையில் ஒன்றிரண்டு ஆக்ஷன் காட்சிகள் சேர்த்து ஒரு இளம் தொழிலதிபரின் உறுதியான நிலைப்பாட்டின் கதையை ஓரளவு வழங்கிய படத்தின் இயக்குனர் ரிஷிகா ஷர்மாவுக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் விஆர்எல் பிலிம் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் விஜயானந்த் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று கற்றுத் தரும். அத்துடன் விஜயானந்த் வாழ்க்கை வரலாறு உண்மையில் நம் அனைவருக்கும் ஒரு உத்வேகம்.