‘வா வரலாம் வா’ சினிமா விமர்சனம் : ‘வா வரலாம் வா’ விறுவிறுப்பான பொழுதுபோக்கு சித்திரம்

0
244

‘வா வரலாம் வா’ சினிமா விமர்சனம் : ‘வா வரலாம் வா’ விறுவிறுப்பான பொழுதுபோக்கு சித்திரம்

எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா சார்பில் எஸ்.பி.ஆர் தயாரித்திருக்கும் படம் “வா வரலாம் வா”.
நடிப்பு: பாலாஜி முருகதாஸ், மஹானா சஞ்சீவி,  காயத்ரி ரேமா, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி,  சிங்கம்.புலி, சரவண சுப்பையா, தீபா, வையாபுரி, தீபா, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், போண்டாமணி, மீசை ராஜேந்திரன்
இசை: தேவா
ஒளிப்பதிவு: கார்த்திக் ராஜா
இயக்கம்: எஸ் பி ஆர், எல்.ஜி.ரவிசந்தர்
பி ஆர் ஒ :  வெங்கட்
சூழ்நிலையால் சிறுவயதிலேயே சிறைக்குச் சென்ற இரண்டு இளைஞர்கள் பாலாஜி முருகதாஸ் மற்றும் ரெடின்  கிங்ஸ்லி சிறையில் இருந்து திரும்பும்போது சொகுசாக ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு காவல்துறையை அச்சுறுத்தும் கொள்ளையன் தோட்டா ராஜேந்திரன் (மைம் கோபி) தரும் வேலையை செய்ய ஒப்புக் கொள்கிறார்கள். விரைவில் பணக்காரர்களாக வேண்டும் ஆசையில் வால்வோ பஸ்சை கடத்துகிறார்கள். பேருந்தில் 40 குழந்தைகளும் இரண்டு இளம் பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் NRI என்று இவர்களுக்கு தெரியாது, ஆனால் அவர்களை வைத்து பணம் பறிக்க பெரும் திட்டம் போடுகிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் அழகில் மயங்கி நண்பர்கள் இருவரும் அவர்கள் மீது காதல் வயப்படுகிறார்கள். இதற்கிடையில் பல்வேறு கெட்டப்பில் போலீஸ் இடம் இருந்து தப்பிக்கும் தோட்டா ராஜேந்திரன் பேருந்தில் இருந்த இரண்டு இளம் பெண்களை குறி வைத்து சதித்திட்டத்தை தீட்டுகிறான்.சரவண சுப்பையா தலைமையில் காவல்துறை கடத்தல் காரர்களையும், தோட்டா ராஜேந்திரனை தீவிரமாக தேடுகிறார்கள். அதை தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
பாலாஜி முருகதாஸ் கட்டு மஸ்தான தோற்றத்துடன் காதல், மோதல் என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
நாயகிகளாக மஹானா சஞ்சீவி, காயத்ரி ரேமா, கதையோடு பயணித்து கவனம் பெறுகிறார்கள்.
தீபா, சிங்கம் புலி, ரெடின் கிங்ஸ்லி உடன் சேர்ந்து அவ்வப்போது நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.
பலவிதமான கெட்டப்பில் பெரிய பில்டப்பை ஏற்படுத்தும் வில்லன் தோட்டா ராஜேந்திரன் கதாபாத்திரத்தில் ‘மைம்’ கோபி திரைப் பிரவேசம் செய்கிறார்.
ஸ்டைலிஷான காவல்துறை அதிகாரியாக சரவண சுப்பையா மிடுக்காக வலம் வருகிறார்.
யோகி ராமசாமி, வையாபுரி, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், பிரபாகரன், போண்டா மணி, மீசை ராஜேந்திரநாத், கிரேன் மனோகர், ரஞ்சன், திலீபன், வடிவேல் பீட்டர் என அனைத்து தெரிந்த முகங்கள் நகைச்சுவை கலந்த நடிப்பை தந்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு தேனிசை தென்றல் தேவா இசையமைத்து அவருக்கு உண்டான டிரேட் மார்க் பாடலான கானாவையும் தந்து சிறப்பித்துள்ளார்.
கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு, ராஜா முகமது எடிட்டிங், நோபல் நடனம் மற்றும் ‘இடிமின்னல்” இளங்கோ சண்டை பயிற்சி நகைச்சுவை கலந்த திரைக்கதைக்கு விறுவிறுப்பை கூட்டியுள்ளனர்.
சிம்பிளான கதை களத்தை ஆக்ஷன், காதல், குத்தாட்டம், நகைச்சுவை என கமர்ஷியல் பார்முலாவுடன் விறுவிறுப்பாக படைத்துள்ளனர் இரட்டை இயக்குனர்கள் எஸ் பி ஆர், எல்.ஜி.ரவிசந்தர்
மொத்தத்தில் எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா சார்பில் எஸ்.பி.ஆர் தயாரித்திருக்கும் படம் ‘வா வரலாம் வா’ விறுவிறுப்பான பொழுதுபோக்கு சித்திரம்.