வான் மூன்று திரைவிமர்சனம் : வான் மூன்று மனதை நெகிழ வைக்கும் காதல் கதை | ரேட்டிங்: 3/5

0
279

வான் மூன்று திரைவிமர்சனம் : வான் மூன்று மனதை நெகிழ வைக்கும் காதல் கதை | ரேட்டிங்: 3/5

சினிமாக்காரன் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ‘ஆஹா ஓடிடி’ தளத்திற்காக இந்தப் படத்தை வினோத் குமார் சென்னியப்பன் தயாரித்துள்ளார்.

படத்தில் ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, வினோத் கிஷன், அபிராமி வெங்கடாச்சலம், டெல்லி கணேஷ், லீலா சாம்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தயாரிப்பு – வினோத்குமார் சென்னியப்பன், தயாரிப்பு நிறுவனம் – சினிமாக்காரன், எழுத்து, இயக்கம் – ஏ.எம்.ஆர்.முருகேஷ், ஒளிப்பதிவு – சார்லஸ் தாமஸ், இசை – ஆர் 2 பிரதர்ஸ், படத் தொகுப்பு – அஜய் மனோஜ், பாடல்கள் – ஏ.எம்.ஆர்.முருகேஷ், இளைய வர்மன், சிவக்குமார், பி.எஸ்.சங்கரகுமார், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி.ஒன்.

சுஜித் குமார் (ஆதித்யா பாஸ்கர்)  மற்றும் சுவாதி (அம்மு அபிராமி) இருவரும் அவர் அவர்கள் காதலில் தோல்வி அடைந்ததால் தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைக்கிறார்கள். அங்கே எதிர் எதிர் பெட்டில் இருக்கும் போது அறிமுகமாகிறார்கள். அதே போல், தந்தையின் எதிர்ப்பை மீறி ஜோஷ்வா (வினோத் கிஷன்) காதலித்து திருமணம் செய்த ஜோதி மீனாட்சி (அபிராமி வெங்கடாச்சலம்) தனக்கு குழந்தை, உண்டாயிருக்கிறதா என்று பரி சோதனைக்கு வந்தபோது அதிர்ச்சியை ஏற்படுத்தும் உயிருக்கு ஆபத்தான மூளை கட்டி நோய் இருப்து தெரியவர அதற்கான சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கிறார் காதல் கணவர் வினோத் கிஷன். திருமணமாகி 10 மாதங்கள் ஆன நிலையில் தன் தந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆசையை கணவரிடம் கூறுகிறாள். மறுபுறம் 40 வருடங்களாக உனக்கு நான் எனக்கு நீ என்ற வாழ்க்கையை வாழ்ந்து வரும் 60வயதை கடந்த சிவம் (டெல்லி கணேஷ்) மற்றும் சித்ரா (லீலா) தம்பதியினர். தன் மனைவிக்கு இதயநோய் தாக்க அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவருடைய ஆபரேஷனுக்காக செலவுக்காக தன் மகனிடம் சென்று பணம் கேட்கிறார். மகன் ஏதோ காரணம் செல்லி அனுப்பிவிடுகிறார். வேறு வழி இன்றி பணத்துக்காக அலைகிறார் முதியவர் டெல்லி கணேஷ். ஒருவரை ஒருவர் தங்கள் அன்பையும் ஆறுதலையும் வெளிப்படுத்தும் இந்த மூன்று ஜோடிகள் சுற்றியே கதைக்களம் சுழல்கிறது. இந்த மூன்று ஜோடிகள் பிரச்சினைகள் எப்படி தீர்ந்தது? என்றும் கிளைமாக்ஸ் முடிவு என்ன என்பதை ‘வான் மூன்று’ படத்தை ‘ஆஹா ஓடிடி’ தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

டெல்லி கணேஷ் – லீலா சாம்சன் இருவரும் அவர்களின் அனுபவ மற்றும் யதார்த்த நடிப்பின் மூலம் அவர்களின் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்ற ஆதித்யா பாஸ்கர், அதே போல் காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்ற அம்மு அபிராமியின் ஆகிய இருவருக்கும் பெரிதாக நடிக்க ஸ்கோப் இல்லை என்றாலும் தாங்கள் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தை எந்த குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.

வினோத் கிஷன் மற்றும் அபிராமி வெங்கடாச்சலம் இருவரும் கதையின் கிளைமாக்ஸ் முடிவுக்கு முக்கிய கதாபாத்திரங்கள். இருவரும் முக வெளிப்பாடு இயல்பான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி வான் மூன்று திரைக்கதைக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் வித்தியாசமான கோணங்களில் காட்சிகளை ரசிக்க வைத்த ஒளிப்பதிவாளர் சார்லஸ் தாமஸ், அதற்கேற்ப இசையமைத்த ஆர் 2 பிரதர்ஸ், கதையின் தன்மைக்கேற்ற மிதமான வேகத்தில் பயணிக்கும் அஜய் மனோஜின் படத் தொகுப்பு, ஆகியோர் மூன்று விதமான கதை கலத்திற்கு ஏற்ப நேர்த்தியான பங்களிப்பை வழங்கி திரைக்கதை நகர்வுக்கு பலம் சேர்த்துள்ளனர்.

காதல் தோல்வி, உயிர் இழப்பும் அதன் வலியும் மற்றும் முதிர்வு காலத்தில் தம்பதிகளின் பிணைப்பும் பாசமும் நிறைந்தது என்பதை திரைக்கதை அமைத்து உயிரோடு தொடர்பு கொண்ட மூன்று கதைகளை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில் வினோத்குமார் சென்னியப்பன் தயாரித்துள்ள வான் மூன்று மனதை நெகிழ வைக்கும் மணம் கவரும் காதல் கதை.