‘வாட்ச்’ விமர்சனம் : வித்தியாசமான சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் |மதிப்பீடு: 2.5/5

0
155

‘வாட்ச்’ விமர்சனம் : வித்தியாசமான சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் |மதிப்பீடு: 2.5/5

வாட்ச் என்பது திகில் உளவியல் திரைப்படம். விஜய் அசோகன் எழுதி இயக்கியுள்ளார். விஏ ஸ்டுடியோஸ் பேனரில் நாவலன் வீரபாண்டியன் தயாரிக்கும் இந்தப் படத்தில் க்ரிஷ் கதாநாயகனாக நடிக்கிறார். சப்ரீனா ஆலம் மற்றும் மேத்யூ வர்கீஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுகன்யன் சுந்தரேஸ்வரன் – எட்வின் லூயிஸ் பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைத்துள்ளனர். முகமது அமீன், இனியா கதிரவன், கலைச்செல்வன், சுதிர் – விஜய் அசோகன் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்ய, விஜய் அசோகன் – ராஜா ராம் படத்தொகுப்பு செய்துள்ளனர்.

மருத்துவத்துறையில் நடக்கும் அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் படங்கள் அவ்வப்போது வரும் அந்த வரிசையில் தற்போது வந்திருக்கும் படம் வாட்ச்.
கார்டூனிஸ்ட் கலைஞராக இருக்கும் நாயகன் கிரிஷ் ஒரு பத்திரிக்கையாளர் மூலம் மருத்துவத்துறையில் நடக்கும் மிகப்பெரிய மருந்துகள் மோசடி பற்றிய தகவல் மற்றும் அதில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான ஆதரங்களும் கிடைக்கிறது. அந்த ஆதாரங்களை வைத்து அந்த மோசடி கும்பலை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதன் விளைவு வில்லன்களிடம் சிக்கி கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி மூன்று ஆண்டுகள் சுயநினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைக்கிறார். இருந்தாலும், தலையில் அடிபட்டதால் வினோத நோய்க்கு ஆளாகிறார். அதாவது, மூன்று வருடங்களாக கோமாவில் இருந்தவருக்கு விபத்துக்கு முன்பு பார்த்த முகங்கள் அனைத்தும் புதிய முகங்களாக தெரிகிறது. இவ்வளவு சோதனைகளுக்கு நடுவே அவர் மருந்து கொள்ளைக்காரர்களை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதை படத்தின் மீதிக்கதை.

நாயகன் கிரிஷ் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு கதையை உள்வாங்கி உணர்ந்து நடித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் சப்ரினா ஆலத்திற்கு குறைவான பகுதி என்றாலும் கிடைத்தை வாய்ப்பை பயன்படுத்தி கவனிக்க வைக்கிறார்.

வில்லன்கள் மேத்யூ வர்கீஸ், உதயகுமார் உள்ளிட்ட நடிகர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஹீரோவின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அளவாக நடித்திருக்கிறார்கள்.

முகமது அமீன், விக்னேஷ் வாசு, இனியகதிரவன், கலைச்செல்வன் ஆகிய நான்கு பேர் ஒளிப்பதிவுவாளர்களும் திறம்பட உழைத்திருக்கிறார்கள்.

சுகன்யன் சுந்தரேஸ்வரன் இசை மற்றும் பின்னணி இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு ப்ளஸ்.

மருத்துவத்துறையில் நடக்கும் மிகப்பெரிய பிரச்சனையை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கில் இப்படத்தின் கதை எழுதி திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் விஜய் அசோகன்.

மொத்தத்தில், விஏ ஸ்டுடியோஸ் பேனரில் நாவலன் வீரபாண்டியன் தயாரிக்கும் ‘வாட்ச்’ வித்தியாசமான சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லர்.