ராவண கோட்டம் திரைவிமர்சனம்: இராவண கோட்டம் கிராமத்து பின்னணியில் அரசியல் கலந்த ஒரு பயங்கர கார்ப்ரேட் மாஃபியா கொள்ளையை திரையரங்குகளில் பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம் | ரேட்டிங்: 3.5/5

0
439

ராவண கோட்டம் திரைவிமர்சனம்: இராவண கோட்டம் கிராமத்து பின்னணியில் அரசியல் கலந்த ஒரு பயங்கர கார்ப்ரேட் மாஃபியா கொள்ளையை திரையரங்குகளில் பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம் | ரேட்டிங்: 3.5/5

மதயானை கூட்டம் புகழ் விக்ரம் சுகுமாரன் எழுதி இயக்கிய ராவண கோட்டம் படத்தில் சாந்தனு பாக்யராஜ், ஆனந்தி, பிரபு, இளவரசு, சுஜாதா, தீபா சங்கர், அருள்தாஸ், பி.எல்.தேனப்பன், சஞ்சய் சரவணன், முருகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கண்ணன் ரவி குழுமத்தின் பேனரின் கீழ் கண்ணன் ரவி தயாரித்துள்ளார்.
இசை : ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவு : வெற்றிவேல் மகேந்திரன்
கலை இயக்குநர்கள் : நர்மதா வேணி மற்றும் ராஜுகின்
படத்தொகுப்பு : லாரன்ஸ் கிஷோர்
மக்கள் தொடர்பு : AIM

ராமநாதபுர மாவட்டம் உள்ள ஏனாதி என்ற ‘சாதி இல்லாத’ கற்பனாவாத கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. குடிமக்களிடையே சாதி அடிப்படையிலான பிளவுகளை உருவாக்குவதைத் தடுக்க அரசியல்வாதிகள் கூட ஏனாதிக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. ஏனாதி கிராமத்தில் சாதி மோதல் வந்துவிடாமல் ஊரைக் காத்து வருகிறார்கள் நண்பர்களான, வெவ்வேறு பிரிவைச் சேர்ந்த சந்திரபோஸும் (பிரபு) சித்ரவேலும் (இளவரசு). இவர்களைப் போலவே பிரபுவுக்கு வேண்டிய செங்குட்டுவனும் (சாந்தனு) இளவரசு மகன் மதிமாறனும் (சஞ்சய் சரவணன்) பங்காளிகளாக நட்பு பேணுகிறார்கள். இந்திரா (ஆனந்தி) மீதான செங்குவின் காதல் இரண்டு முக்கிய இளைஞர்களான செங்குட்டுவனுக்கும் (மேல்தெரு) மற்றும் மதிமாறனுக்கும் (கீழ்த்தெரு) இடையே பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதற்கிடையில், அம்மாவட்டத்தில் உள்ள கனிம வளத்தைக் கொள்ளையடிக்க, அரசியல்வாதிகளைக் கூட்டுச் சேர்த்து, சாதி கலவரத்தை உண்டாக்குகிறது கார்ப்பரேட்டுகளின் சூழ்ச்சி. தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காகவும் ஊரைப் பிரிக்க நினைக்கிறார்கள், உள்ளூர் எம்.எல்.ஏவும் (அருள்தாஸ்), அமைச்சர் ராசாகண்ணுவும் (பி.எல்.தேனப்பன்). இதற்கு செங்குட்டுவன்- இந்திரா (ஆனந்தி) காதலைப் பகடைக்காயாக வைத்து, ஒன்றாக இருந்த ஊரைப் பிரிக்கிறார்கள். இந்த மோதலில் கிராமம் முழுவதும் எரிந்து பல மக்கள் இறக்கும் போது அரசியல்வாதிகள் கிராம மக்களை எப்படி தங்கள் சொந்த நலனுக்காக சுரண்டுகிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை.
சாந்தனு பாக்யராஜ், எப்பொழுதும் சண்டைக்கு தயாராக இருக்கும் ஒரு கிராமத்து இளைஞனாக வசீகரமான, கொடூரமான முரட்டுத்தனமான செங்குட்டுவன் கதாபாத்திரத்தில ஒரு நேர்த்தியான ஈர்க்கக்கூடிய நடிப்பை வழங்கியுள்ளார்.
இந்திரா பிரியதர்ஷினியாக வரும் ஆனந்தி வழக்கமான காதலியாக வந்துபோகிறார். ஊரைப் பிரிக்கக் காதலைப் பயன்படுத்தும் பிரதான வில்லனாக வரும் மாரி (முருகன்) நல்ல தேர்வு.
பெரியவராக வரும் பிரபு, நண்பர் இளவரசு, சுஜாதா, தீபா சங்கர், சுயநல அரசியல்வாதிகள் அருள்தாஸ், அமைச்சர் பி.எல்.தேனப்பன், சஞ்சய் சரவணன், உட்பட அனைவரும் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவில், ராமநாதபுர நிலபரப்பு அப்படியேபதிவாக்கி படத்திற்குப் பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
கவனம் பெறும் கலை இயக்குநர்கள் நர்மதா வேணி மற்றும் ராஜுகின் பங்களிப்பும், ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசையும், திரைக்கதைக்கு கைகொடுத்திருக்கிறது. விறுவிறுப்பான கதை நகர்வுகளுக்கு லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு படத்தின் வேகத்தைக் கூட்ட முயன்றிருக்கிறது.
சீமைக் கருவேல மர பிரச்சினை, கார்ப்ரேட் மாஃபியா கொள்ளை, அரசியல், காதல், மற்றும் பல விஷயங்களையும் இணைத்து உணர்வுபூர்வமான திரைக்கதை அமைத்து ஒரு சமூக செய்தியுடன் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன்.
மொத்தத்தில் கண்ணன் ரவி தயாரித்துள்ள இராவண கோட்டம் கிராமத்து பின்னணியில் அரசியல் கலந்த ஒரு பயங்கர கார்ப்ரேட் மாஃபியா கொள்ளையை திரையரங்குகளில் பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம்.