மதிமாறன் சினிமா விமர்சனம் : மதிமாறன் – கூர்மையானவன் – வலிமை மிக்கவன் | ரேட்டிங்: 3/5

0
260

மதிமாறன் சினிமா விமர்சனம் : மதிமாறன் – கூர்மையானவன் – வலிமை மிக்கவன் | ரேட்டிங்: 3/5

நடிகர்கள்:
வெங்கட் செங்குட்டுவன் – நெடுமாறன்
இவானா – மதி
ஆராத்யா – பிரபாவதி
எம்.எஸ் பாஸ்கர் – சுந்தரம்
ஆடுகளம் நரேன் – கட்டபொம்மன்
பவா செல்லதுரை – கருப்பசாமி
சுதர்ஷன் கோவிந்த் – சுதர்சன்
பிரவீன் குமார் . ஈ – சந்திரன் மாணிக்கவேல்
தொழில்நுட்ப கலைஞர்கள்:
இயக்கம் – மந்த்ரா வீரபாண்டியன்
இசை – கார்த்திக் ராஜா
ஒளிப்பதிவு – பர்வேஸ்
படத்தொகுப்பு- சதீஷ் சூர்யா
கலை – மாயப்பாண்டி
தயாரிப்பு- ஜிஎஸ் சினிமா இன்டர்நேஷனல்
தயாரிப்பாளர்கள் – ஜிஎஸ் பிரதர்ஸ்
பாபின்ஸ் ஸ்டுடியோஸ் வெளியீடு
மக்கள் தொடர்பு – யுவராஜ்
கதையின் ஆரம்பத்தில் சென்னையில் தொடர்ச்சியாக பெண்கள் மாயமாவதும், கற்பழித்து கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. அதே நேரத்தில் கதையின் நாயகன் வளர்ச்சி குறைபாடு உள்ள நெடுமாறன் (வெங்கட் செங்குட்டுவன்), தற்கொலைக்கு முயற்சிக்கிறான். தண்ணீரில் தத்தளித்து இருக்கும் போது எந்த சூழலிலும் அக்காவை கைவிட கூடாது என்று இறந்து போன தன் தந்தை சொன்ன விஷயம் ஞாபகத்திற்கு வரவே கிணற்றிலிருந்து வெளியேறுகிறார்.  போஸ்ட் மாஸ்டர் சுந்தரம் (எம்.எஸ்.பாஸ்கர்) தந்தை, தாய் மற்றும் சகோதரி மதி (இவானா) என தனது குடும்பத்தினருடன் நெடுமாறன் வாழ்ந்து வருகிறார். அக்கா தம்பி இருவரும் இரட்டையர்கள். தம்பி நெடுமாறன் உடல் வளர்ச்சி இல்லாமல் மூன்று முதல் நான்கு அடி உயரம் மட்டுமே உள்ளதால் பல கேலி கிண்டலுக்கு ஆளாகிறார். இந்நிலையில் கல்லூரியில் படித்து வரும் அவரது அக்கா இவானா கல்லூரி பேராசிரியருடன் ஓடி விடுகிறார். இதனால் அவரது பெற்றோர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.  காதல் திருமணம் செய்துகொண்டு சென்னைக்கு சென்ற அக்கா மதியை தேடி நெடுமாறனும் சென்னை செல்கிறான். சென்னையில் நெடுமாறனின் காதலி பிரபாவதி (ஆராத்யா) போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கிறார். அவரது உதவியுடன் அக்கா உள்ள விலாசத்தை கண்டுபிடித்து அங்கு செல்கிறான். அங்கு அக்காவை பார்த்து அப்பா, அம்மா இறப்பிற்கு நீதான் காரணம் என்று கூறி பேச மறுக்கிறான். இதனிடையே சென்னையில் தொடர்ந்து மர்ம கொலைகள் நடைபெறுகிறது. அப்போது அக்காவின் பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு பெண் மாயமானது குறித்து தெரிய வர, தனது கல்லூரித் தோழியான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாவதி உதவியோடு கண்டுபிடிக்க களமிறங்குகிறார். அதன் பின் பல திடுக்கிடும் திருப்பங்களுடன் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
நெடுமாறன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தோற்றம் கொண்ட வெங்கட் செங்குட்டுவன் கதையின் நாயகன் முழு படத்தையும் சுமந்து உணர்ச்சிகரமான நடிப்பு, நடனம் என தன்னுடைய திறமையை சிறப்பான முறையில் வெளிப்படுத்தியுள்ளார்.
அக்கா மதியாக இவானா, தந்தையும் போஸ்ட் மாஸ்டர் சுந்தரமாக குணச்சித்திர நாயகன் எம்.எஸ் பாஸ்கர், காதலி மற்றும் போலீஸ் பிரபாவதியாக ஆராத்யா, இவர்கள் மூவரும் எதார்த்தமான நடிப்பை தந்து வெங்கட் செங்குட்டுவன் நடிப்பு திறன் வெளிப்படுவதற்கு முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
மற்றும் போலீஸ் அதிகாரி கட்டபொம்மனாக ஆடுகளம் நரேன், செக்யூரிட்டி கருப்பசாமியாக பவா செல்லதுரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதர்சனாக சுதர்ஷன் கோவிந்த், வில்லன் சந்திரன் மாணிக்கவேலாக பிரவீன் குமார்.ஈ உட்பட முக்கிய வேடங்களில் அனைவரும் நல்ல பெர்பார்மன்ஸ் வழங்கி திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளனர்.
இசை மற்றும் பின்னணி இசை – கார்த்திக் ராஜா : அருமை.
ஒளிப்பதிவு – பர்வேஸ் : பலம்
படத்தொகுப்பு – சதீஷ் சூர்யா : விறுவிறுப்பு
ஒரு மனிதனின் உருவத்தை பார்த்து யாரும், யாரையும் குறைவாக மதிப்பிடக் கூடாது என்பதை அழுத்தமாக பல சிறப்பான வசனம் மற்றும் காட்சிகள் மூலம் சொல்லி உயிரோட்டமான திரைக்கதை நகரும் போது அப்படியே படம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக மாற்றி விறுவிறுப்பாக  படைத்திருக்கிறார் இயக்குனர் மந்திர வீரபாண்டியன்.
மொத்தத்தில் ஜிஎஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் ஜிஎஸ் பிரதர்ஸ் தயாரித்து பாபின்ஸ் ஸ்டுடியோஸ் வெளியீடும் மதிமாறன் – கூர்மையானவன் – வலிமை மிக்கவன்.