பெல் சினிமா விமர்சனம் : பெல் பழந்தமிழர் களின்‌ மருத்துவத்துக்கு பெருமை சேர்க்கும் | ரேட்டிங்: 2.5/5

0
312

பெல் சினிமா விமர்சனம் : பெல் பழந்தமிழர் களின்‌ மருத்துவத்துக்கு பெருமை சேர்க்கும் | ரேட்டிங்: 2.5/5

பீட்டர்‌ ராஜின்‌ ப்ரோகன்‌ மூவிஸ்‌ தயாரிப்பில்‌ இயக்குநர்‌ வெங்கட் புவன்‌ இயக்கி இருக்கும் படம் ‘பெல்‌’.
குருசோம சுந்தரம், ஸ்ரீதர் மாஸ்டர், நிதீஷ் வீரா, பீட்டர் ராஜ், துர்கா, ஸ்வேதா உள்ளிட்ட  பலர் நடித் துள்ளனர்.
தியாகராஜன் எடிட்டிங் கவனிக்க, பரணி கண்ணன் ஒளிப்பதிவு செய்ய ராபர்ட் இசை அமைத்திருக்கிறார். மக்கள் தொடர்பு வேலு.பழந்தமிழர் மருத்துவ முறை மற்றும் பெருமைகளை பேசும் படம் பெல். சிங்கவனம் என்கிற மலை காட்டில் மர்மமான முறையில் ஒரு கும்பல் இறந்து கிடப்பதாக காவல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்க, அங்கு இறந்து கிடந்தவர்களை காட்டிலிருந்து எடுத்துச்செல்கின்றனர், அதில் பெல் மற்றும் அவரது நண்பர் ம்டடும் உயிருடன் இருக்கின்றனர். இவர்களை போலீஸ் அதிகாரிகள் விசாரிக்கின்றனர். விசாரணையில் சித்தர்களின் வழித்தோன்றல் வழியில் வந்த பெல் (ஸ்ரீதர்) நிசம்பசூரிணி என்ற மூலிகையை பற்றிய தகவலை கூறுகிறார். அதை அதே சித்தர்களின் வழித்தோன்றலில் வந்த குருசோமசுந்தரம் அந்த நிசம்பசூரிணி மூலிகையைக் கைப்பற்றி வெளிநாடுகளுக்கு விற்றுப் செய்து பணம் சம்பாதிக்க முயற்சிப்பதை பற்றி விளக்கமாக கூறுகிறார்.காட்டில் மக்கள் மர்மமான முறையில் இறந்ததற்கான காரணம் என்ன?  குருசோமசுந்தரம் நிசம்பசூரிணி மூலிகையை கைப்பற்றினாரா? இல்லையா? நிசம்பசூரிணி மூலிகை பத்திரமாக காப்பாற்றப்பட்டதா? என்பதை அறிய கண்டிப்பாக படத்தை பார்த்தால் தான் தெரியும்!

இந்தப் படத்தின் நாயகன் நடன இயக்குநர் ஸ்ரீதர், ஸ்ரீதரின் கற்பனை உருவத்தில் நாயகனாக வரும் மறைந்த நடிகர் நிதீஷ் வீரா இருவரும் கதாபாத்திரத்திற்கான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளனர். ஆனால் நடன இயக்குநர் ஸ்ரீதர் கொஞ்சம் அதிகமாக நடித்து விட்டார் என்பதுதான் உண்மை. அந்த வகையில் மறைந்த நடிகர் நிதீஷ் வீரா, கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை உடல் மொழியில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

குரு சோமசுந்தரம் வழக்கம் போல் அவருக்குண்டான ஸ்டைலில் நடிப்பை வெளிப்படுத்தி தூள்கிளப்பி உள்ளார்.
பீட்டர் ராஜ், துர்கா, ஸ்வேதா ஜாக் அருணாச்சலம், கல்கி, உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
காட்டின் இயற்கை அழகை பிரமிக்க வைக்கும் கோணங்களில் கண்கள் கவரும் விதம் காட்டிய பரணி கண்ணன் ஒளிப்பதிவுக்கு பின்னணி இசை மூலம் பரபரப்பை எற்படுத்தி உயிர் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ராபர்ட். தியாகராஜனின் எடிட்டிங் கூடுதல் பலம் சேர்த்துள்ளது.இயக்குநர்‌ வெங்கட் புவன்‌ இயக்கத்தில்‌ இயற்கை மருத்துவத்தின்‌ சிறப்புகள்‌ பற்றியும்‌, அது காப்ரேட் நிறுவனங்களால் எவ்வாறு அழிக்கப்படுகிறது என்பதை சொல்ல முயற்சித்துள்ளளர் இயக்குநர்‌ வெங்கட் புவன். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படம் வேற லெவலுக்கு போய் இருக்கும்.

மொத்தத்தில் பீட்டர்‌ ராஜின்‌ ப்ரோகன்‌ மூவிஸ்‌ தயாரித்திருக்கும் பெல் பழந்தமிழர் களின்‌ மருத்துவத்துக்கு பெருமை சேர்க்கும்.