பீட்சா -3 தி மம்மி திரைப்பட விமர்சனம்: பீட்சா 3 சுவை குறைவு | ரேட்டிங்: 2.5/5

0
787

பீட்சா -3 தி மம்மி திரைப்பட விமர்சனம்:

பீட்சா 3 சுவை குறைவு | ரேட்டிங்: 2.5/5

நடிகர்கள்: அஷ்வின் காக்குமானு, பவித்ரா மாரிமுத்து, கௌரவ், கவிதா பாரதி, அனுபமா குமார், அபி நட்சத்திரா, காளி வெங்கட் மற்றும் குரைஷி.
இயக்குனர்: மோகன் கோவிந்த்
தயாரிப்பாளர்: சி.வி.குமார்
இசை: அருண்ராஜ்
ஒளிப்பதிவு : பிரபு ராகவ்
படத்தொகுப்பு : இக்னேசியஸ் அஸ்வின்
தயாரிப்பு நிறுவனம் : திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்

உணவகத்தின் ஆர்வமுள்ள உரிமையாளரான நளன் மற்றும் ஆப் கிரியேட்டர் அவரது காதலி கயல், ஒரு செயலி உருவாக்க விரும்புகிறாள். இதன் மூலம் ஒருவர் ஆவிகளுடன் தொடர்பு கொள்ளலாம். கயலின் சகோதரர் பிரேம், ஒரு போலீஸ் அதிகாரி, சகோதரியின் காதலன் நளனை துளியும் அவருக்கு பிடிக்காது. மேலும் நளன் மற்றும் கயலை பிரிப்பதற்கான வாய்ப்பு தேடுகிறார். இந்தச் சூழ்நிலையில் ஒரு நாள், நளனின் உணவகத்திற்குச் செல்லும் வாடிக்கையாளர் ஒரு பொம்மையை கொண்டு வருகிறார், அது ஒரு மர்மமான பண்டைய எகிப்திய சிலை. உணவகத்தில் இருந்து திரும்பும் போது அந்த பொம்மையை அவர் தன்னுடன் எடுத்துச் செல்ல மறந்து விடுகிறார். சிறிது நேரத்திற்குப் பிறகு, உணவகத்தில் விசித்திரமான விஷயங்கள் நடக்கத் தொடங்குகிறது. உணவகத்தின் குளிர்சாதனப்பெட்டியில் அற்புதமான சுவையுடன் கூடிய இனிப்பு தோன்றிக்கொண்டே இருக்கிறது, ஹோட்டல் ஊழியர்கள் நளன்தான் புதிய செய்முறையால் தயாரித்திருப்பதாக நினைக்கிறார்கள். விசித்திரமான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதை உணர்ந்த நலன் ஆரம்பத்தில், நளன் ஆச்சரியப்பட்டாலும் கவலைப்படவில்லை. இருப்பினும், அவர் இரவில் சில அசைவுகளை கவனிக்கத் தொடங்குகிறார். மேலும் பல கொலை சம்பவங்கள் நடைபெறுகிறது. அந்த கொலை பழி நலன் செய்தார் என்று ஒரு போலீஸ் அதிகாரி பிரேம் சந்தேகித்து நலனை விசாரிக்கிறார். நடைபெறும் விசித்திரமான நிகழ்வுகள் மற்றும் கொலை பழி நலனை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. ஆகையால் உணவகத்திற்குள் என்ன நடக்கிறது என்று கண்டறிய அவர் தனது ஹோட்டல் சமையலறைக்குள் ஒரு வீடியோ கேமராவை நிறுவுகிறார். நிறுவி பார்க்கும் போது, உள்ளே ஆவி  நடமாடுவதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். தொடர் கொலைகள் மற்றும் அமானுஷ்யங்கள் ஏன் நடக்கிறது? அதற்கு காரணம் என்ன? அதை தொடர்ந்து  அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது  ‘பீட்ஸா 3 – தி மம்மி’ படத்தின் மீதிக்கதை.

அஷ்வின் ககுமானு தைரியமான உணவக உரிமையாளர் நளனாக பயத்தையும் குழப்பத்தையும் நன்றாக வெளிப்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார்.

காதலி கயலாக பவித்ரா மாரிமுத்து தனது பங்கை சிறப்பாக செய்து ஈர்க்கிறார்.

உணவகத்தின் சமையல்காரர்களில் ஒருவர் தாமுவாக காளி வெங்கட், குரைஷி, போலீஸ் அதிகாரியாக வரும் கௌரவ் நாராயணன், இரண்டாம் பாதியில் பாசமான தாய் ராணியாக அனுபமா குமார், இவரது மகள் மித்ராவாக அபி நக்ஷத்ரா, வில்லனாக வரும் கவிதா பாரதி ஆகியோர் தங்களுக்கு கொடுப்பட்ட பாத்திரத்தை நேர்த்தியான மற்றும் மிகையில்லாமல் கச்சிதமாக நடித்துள்ளனர்.

பிரபு ராகவ் ஒளிப்பதிவு, இக்னேசியஸ் அஸ்வின் படத்தொகுப்பு, அருண் ராஜ் இசை மற்றும் பின்னணி இசை ஆகியோர் தங்கள் தொழில்நுட்பத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் சிரத்தை தந்து உழைத்திருந்தால், சிறப்பான திகில் அனுபத்தை தந்திருக்கும்.

மோகன் கோவிந்த், ஒரு உணவகத்தில் அமானுஷ்ய சக்தியை கதைக்களத்தில் அமைத்து திரைக்கதையில் ஒரு உணர்ச்சிகரமான மற்றும் இதயத்தை உடைக்கும் பின்னணியை புகுத்தி மற்றொரு பழிவாங்கும் கதையாக படைத்திருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்திருக்கும் பீட்சா 3 சுவை குறைவு.