பார்க்கிங் சினிமா விமர்சனம் : பார்க்கிங் கண்டிப்பாக நம் வாழ்வில் சந்தித்த பார்க்கிங் பிரச்சனையை ஒரு கனம் நினைவு கூறும் | ரேட்டிங்: 3.5/5

0
230

பார்க்கிங் சினிமா விமர்சனம் : பார்க்கிங் கண்டிப்பாக நம் வாழ்வில் சந்தித்த பார்க்கிங் பிரச்சனையை ஒரு கனம் நினைவு கூறும் | ரேட்டிங்: 3.5/5

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் கே.எஸ்.சினிஷ் தயாரித்திருக்கும் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ராம்குமார் பாலகிருஷ்ணன்.
ஹரிஷ் கல்யாண் (ஈஸ்வர்), இந்துஜா(அத்திகா), எம்.எஸ்.பாஸ்கர் (இளம்பருதி), ரமா ராஜேந்திரா (செல்வி), பிரார்த்தனா நாதன்(அபர்ணா),இளங்கோ (சண்முகம்), இளவரசு ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை: சாம் சிஎஸ்,ஒளிப்பதிவு- ஜிஜு சன்னி, எடிட்டிங்: பிலோமின் ராஜ், கலை: என்.கே.ராகுல், சண்டை: தினேஷ் காசி, பீனிக்ஸ் பிரபு, ஆடைகள்: ஷேர் அலி, நடன இயக்குனர்: அப்சர், பாடல் வரிகள்: சாம் சிஎஸ், விஷ்ணு எடவன், நிர்வாகத் தயாரிப்பாளர்: டி முருகேசன், ஒலிக்கலவை: ராஜகிருஷ்ணன் எம்.ஆர், ஒலி வடிவமைப்பு: சின்க் சினிமா, ஸ்டில்ஸ்: ராஜேந்திரன், பிஆர்ஒ-சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன்
அரசு ஊழியரான இளம்பருதி (எம்.எஸ். பாஸ்கர்) மனைவி மற்றும் ஒரே மகளுடன் 10 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார். தனது மனைவி அல்லது மகள் எதையாவது கேட்டால், அவர்களுடைய ஆசைகளுக்கு செவி சாய்க்காமல், மகளின் திருமணத்திற்காக பணத்தைச் சேர்த்து வைப்பதாக கூறுகிறார். ஐடி ஊழியர் ஈஸ்வர் (ஹரிஷ் கல்யாண்) மற்றும் அவரது கர்ப்பிணி மனைவி ஆத்திகா (இந்துஜா ரவிச்சந்திரன்) பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டு மாடி வீட்டில் தனிக்குடித்தனம்  நடத்துகிறார்கள். இரு குடும்பங்களுக்கும் இடையில் நல்ல உறவு நிலவும் நிலையில் தனது காதல் மனைவி ஆத்திகாவுக்காக புதிய கார் ஒன்றை வாங்குகிறார் ஈஸ்வர். இங்கு தான் தொடங்குகிறது பிரச்னை. ஈஸ்வரின் காரை பார்க்கிங்கில் நிறுத்துவதால் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்த முடியாமல் அவதிப்படுகிறார் இளம்பருதி. ஒரு கட்டத்தில் எரிச்சல் அடையும் இளம்பருதி ஈஸ்வருடன் மோதலில் ஈடுபடுகிறர். பார்க்கிங்க்காக ஏற்படும் இந்த ஈகோவில் இளம்பருதியும் ஒருபுது கார் வாங்குகிறார். அதன் பின் பார்க்கிங் பிரச்னை பயங்கரமாக வெடித்து இருவரும் போட்டி போட்டு யார் முதலில் வீட்டிற்கு வருகிறார்களோ அவர்களே நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனையில் பயணிக்கும் போது ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனை காவல் நிலையம் வரை செல்கிறது. சின்ன பார்க்கிங் பிரச்சனையால் ஏற்படும் மனகசப்பால் ஏற்படும் விளைவுகளை சுவாரசியமாக நகரும் பார்க்கிங் படத்தின் மீதிக் கதை.
இளம்பருதி கதாபாத்திரத்தில் எம்.எஸ். பாஸ்கர் மற்றும் ஈஸ்வர் கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாண்,இருவரும் போட்டி போட்டு நடித்து நம் நிஜவாழ்க்கையில் நாள் தோறும் சந்திக்கும் மனிதர்களின் குணாதிசயங்களை அப்படியே பிரதிபளித்துள்ளனர். எம்.எஸ்.பாஸ்கர் நகைச்சுவை, குணச்சித்திம், என அனைத்திலும் ஏற்கனவே அசத்திய இவர் பார்க்கிங்கில் ஈவிலாக மிளிர்ந்து தான் ஒரு மிகச்சிறந்த லெஜெண்ட் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு வில்லத்தனம் இருக்கும். ஈகோ என்ற அந்த வில்லத்தனத்திற்கு ஹரிஷ் கல்யாண், முழுதிறமையை சிறப்பாக வெளிப்படுத்தி தன்னுடைய ஈகோவால் மாறும் வயலண்ட்டான அந்த பாத்திரத்தை முழுமையாக்கினார்.
இந்துஜா, பிரார்த்தனா, ரமா ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளங்கோ, இளவரசு ஆகியோரின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இரண்டு பேருக்கும் இடையிலான ஈகோவால் ஏற்படும் கிளாஷை பல இடங்களில் விறுவிறுப்பாகவும், உணர்ச்சிபூர்வமாக நகர்ந்து கதையோடு ஒன்ற வைத்துள்ளது. தொழில் நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு. இசை: சாம் சிஎஸ், ஒளிப்பதிவு- ஜிஜு சன்னி, எடிட்டிங்: பிலோமின் ராஜ், கலை: என்.கே.ராகுல், சண்டை: தினேஷ் காசி, பீனிக்ஸ் பிரபு, ஆடைகள்: ஷேர் அலி, நடன இயக்குனர்: அப்சர், பாடல் வரிகள்: சாம் சிஎஸ், விஷ்ணு எடவன் ஆகியோரின் பங்களிப்பு கன கச்சிதமாக பலம் சேர்த்துள்ளது.

இரண்டு வீடு ஒரு பார்க்கிங், இரண்டு வீட்டிலும் கார் இருக்கிறது எனும்போது நடக்கும் சாமானியர்களின் பிரச்சினைகள் தான் கதைக்களம். பார்க்கிங் என்ற விஷயத்தில் இருந்து ஈகோ எப்படி வெடிக்கிறது என்பதை பக்கத்து வீட்டுக்காரர்களுக்குள் நடக்கும் பார்க்கிங் சண்டையை ரசிக்கும்விதமாகவும்; பார்வையாளர்களுடன் இணைந்து இருக்கும்படியாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.

மொத்தத்தில் பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் கே.எஸ்.சினிஷ் தயாரித்திருக்கும் பார்க்கிங் கண்டிப்பாக நம் வாழ்வில் சந்தித்த பார்க்கிங் பிரச்சனையை ஒரு கனம் நினைவு கூறும்.