பரிவர்த்தனை திரைப்பட விமர்சனம் : பரிவர்த்தனை புரட்சி என்ற பெயரில் எதார்த்தத்தை மீறும் படம் | ரேட்டிங்: 2/5

0
244

பரிவர்த்தனை திரைப்பட விமர்சனம் : பரிவர்த்தனை புரட்சி என்ற பெயரில் எதார்த்தத்தை மீறும் படம் | ரேட்டிங்: 2/5

எம்.எஸ்.வி. புரொடக்‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் செந்திவேல் கதை, வசனம் எழுதி தயாரித்துள்ள படம், ‘பரிவர்த்தனை’.
நடிகர்கள்:
சுர்ஜித் – நவீன்
சுவாதி – பவித்ரா
ராஜேஸ்வரி – நந்தினி
மோஹித் – நவீன் (பள்ளி மேடை)
ஸ்மேகா – நந்தினி (பள்ளி மேடை)
பாரதிமோகன் – பண்ணையார்
திவ்யஸ்ரீதர் – பண்ணையார் மனைவி
ரயில் கார்த்தி – முருகேசன் (நவீன் தந்தை)
தொழில்நுட்ப கலைஞர்கள் :
தயாரிப்பு, கதை, வசனம் – பொரி.செந்திவேல்
திரைக்கதை, இயக்கம் : எஸ்.மணிபாரதி.
ஒளிப்பதிவு : கே.கோகுல்.
இசை: ரிஷாந்த் அர்வின்.
எடிட்டிங்: ரோலக்ஸ்.
இணை இயக்குனர்: இளமாறன்.
பாடல் வரிகள்: ஏதி ரகுபதி.
நடனம்: தினா.
மக்கள் தொடர்பு : மணவை புவன்.
பவித்ராவும் (சுவாதி), நந்தினியும் (ராஜேஸ்வரி) இருவரும் கல்லூரித் தோழிகள். பவித்ரா திருமணம் செய்து கொண்டு கணவருடன் மனவருத்தத்துடன் பேருக்கு வாழ்ந்து வருகிறார். சிறுவயது முதல் பால்காரர் முருகேசன் (ரயில் கார்த்தி) மகன் நவீனும் பண்ணையார் (பாரதிமோகன்) மகள் நந்தினியும் ஒன்றாக பழகியும் படித்து வருகிறார்கள். நந்தினி பருவம் அடைந்த பிறகு அது காதலாக மாறுகிறது. இவர்கள் காதல் பண்ணையாருக்கு தெரியவர நந்தினியை சொந்தக்காரர்கள் வீட்டுக்கு அனுப்பிவிட்டு நவீனைக்கு திருடன் பட்டம் கட்டி அடித்து விடுகிறார்கள். தன் மகன் மீது வீணாக திருட்டு பட்டம் கட்டியதால், மகன் எதிர்காலத்தை மனதில் கொண்டு நவீனை அழைத்துக்கொண்டு வெளியூர் சென்று விடுகிறார் அவரது தந்தை. நந்தினி காதலித்த காதலன் நவீனை எண்ணி திருமணம் செய்துகொள்ளாமல் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். திருமணம் ஆகி பல ஆண்டுகள் கழித்து, கல்லூரியில் தன்னுடன் படித்த தன் தோழியை பார்க்க வருகிறார் பவித்ரா. தன் தோழியின் கடந்த கால வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் பவித்ராவின் கணவர் அவருடைய விருப்பம் இல்லாமல் வாழ்வதற்கு என்ன காரணம் என்பதை அறிந்து கொள்கிறார். தன் தோழி நந்தினியின் வாழ்க்கைக்கும் தன் வாழ்க்கைக்கும் இருக்கும் தொடர்பையும் அறிந்து தன் ஊருக்குத் திரும்பிச் செல்கிறார். அதன் பின் என்ன நடக்கும் சம்பவமே பரிவர்த்தனை.
சுர்ஜித் (நவீன்), சுவாதி (பவித்ரா), ராஜேஸ்வரி (நந்தினி), மோஹித் (நவீன் பள்ளி பருவம்), ஸ்மேகா (நந்தினி பள்ளி பருவம்), பாரதிமோகன் (பண்ணையார்), திவ்யஸ்ரீதர் (பண்ணையார் மனைவி), ரயில் கார்த்தி (முருகேசன் நவீன் தந்தை) என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு அழுத்தமான நடிப்பை வழங்கியுள்ளனர்.
ரோலக்ஸ் படத்தொகுப்பு, கோகுலின் ஒளிப்பதிவு, ரஷாந்த் அர்வின் இசை மற்றும் பின்னணி இசை அழுத்தம் இல்லாத திரைக்கதைக்கு தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
‘காத்திருந்தால் காலம் கடந்தாலும் காதல் கைகூடும் என்ற கருத்தை மையமாக வைத்து, பிடிக்காத வாழ்க்கையை கடமைக்கு வாழும் தம்பதிகளுடன் இணைத்து இன்றைய கால கட்டத்தில் யாரும் ஏற்க முடியாத முடிவை வைத்து திரைக்கதை அமைத்து சமுதாயத்தில் ஏதோ புரட்சி செய்வதாக நினைத்து உருவாக்கியுள்ளார் இயக்குனர் மணிபாரதி.
மொத்தத்தில் எம்.எஸ்.வி. புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள பரிவர்த்தனை புரட்சி என்ற பெயரில் எதார்த்தத்தை மீறும் படம்.