பன்னிகுட்டி விமர்சனம்: பன்னிகுட்டியை ஒரு முறை சிரிக்காமல் பார்க்கலாம் | மதிப்பீடு: 2.25/5

0
358

பன்னிகுட்டி விமர்சனம்: பன்னிகுட்டியை ஒரு முறை சிரிக்காமல் பார்க்கலாம் | மதிப்பீடு: 2.25/5

சூப்பர் டாக்கீஸ் சமீர் பரத்ராம் தயாரித்து லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் சார்பில் பன்னிகுட்டி படத்தில் யோகிபாபு. லியோனி, கருணாகரன், லட்சுமிபிரியா, தங்கதுரை, சிங்கம்புலி, ராமர், சாஸ்திகா, டிபிஜே ஆகியோர் நடித்துள்ளனர்.படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அனுசரண்.ஒளிப்பதிவு-சதீஷ் முருகன், இசை-கே, கலை-என்.ஆர்.சுகுமாரன்,  எடிட்டிங்-அனுசரண், கதை-ரவி முருகைய்யா, திரைக்கதை- அனுசரண்,ரவி முருகைய்யா, பாடல்கள்-ஞானகரவேல், மணி அமுதவன், சண்டை-பயர் கார்த்திக், பிஆர்ஒ-நிகில்முருகன்.

தங்கையின்; திருமண வாழ்க்கை, தந்தையின் குடிப்பழக்கம், திருமண தடங்கல்கள் என்று வாழ்க்கையில் விரக்தியடையும் கருணாகரன் தூக்கு போட்டுக் கொள்ள செல்லும் போது நண்பர்களால் காப்பாற்றப்படுகிறார். இவர்களின் அறிவுரைப்படி சாமியார் லியோனியை சந்திக்க, அவரின் ஆலோசனையின் பேரில் பைக்கை திருடி வரும்போது வழியில் பன்னிகுட்டி மேல் மோதி விடுகிறார். அந்த பன்னிகுட்டியை தேடி கண்டுபிடித்து மீண்டும் மோதினால் தான் கருணாகரனின் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும் என்பதை சாமியார் சொல்ல, வேறு வழியின்றி பன்னிகுட்டியை தேடி நண்பர்களுடன் செல்கிறார் கருணாகரன். அதே சமயம் சீதனமாக கிடைத்த பன்னிகுட்டி தப்பித்து சென்றதை அறிந்து யோகிபாபுவும் தேடுகிறார். இருவரும் ஒரே பன்னிகுட்டியை தேட மோதலும், சண்டையும் உண்டாகிறது. இறுதியில் பன்னிகுட்டி யார் கைக்கு கிடைத்தது? யாருக்கு நன்மை ஏற்பட்டது? என்பதே மீதிக்கதை.

யோகிபாபு. லியோனி, கருணாகரன், லட்சுமிபிரியா, தங்கதுரை, சிங்கம்புலி, ராமர், சாஸ்திகா, டிபிஜே அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.

கிராமத்து சூழ்நிலைக்கேற்ற காட்சிக்கோணங்களை செவ்வென அமைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் சதீஷ் முருகன்.

கேயில் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் வண்ணம் உள்ளது.

சிம்பிளான கிராமத்து கதையில் கொஞ்சம் காமெடி, காதல் கலந்து நக்கல் நய்யாண்டியில் மூடநம்பிக்கையோடு திரைக்கதை அமைத்து இயக்கியுள்ள அனுசரண் முயற்சி வித்தியாசமாக இருந்தாலும் திரைக்கதையை அழுத்தமாக கொடுத்திருந்தால் இன்னும் பேசப்பட்டிருக்கும்.

மொத்தத்தில் சூப்பர் டாக்கீஸ் பரத்ராம் தயாரித்து லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் சார்பில் பன்னிகுட்டியை  ஒரு முறை சிரிக்காமல் பார்க்கலாம்.