திரையின் மறுபக்கம் விமர்சனம் : திரையின் மறுபக்கம் பிளாக் காமெடி மற்றும் கடுமையான யதார்த்தத்தின் சரியான கலவையை அனைத்து சினிமா எடுக்க முன் வரும் தயாரிப்பாளர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ப(பா)டம் | ரேட்டிங்: 2.5/5

0
160

திரையின் மறுபக்கம் விமர்சனம் : திரையின் மறுபக்கம் பிளாக் காமெடி மற்றும் கடுமையான யதார்த்தத்தின் சரியான கலவையை அனைத்து சினிமா எடுக்க முன் வரும் தயாரிப்பாளர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ப(பா)டம் | ரேட்டிங்: 2.5/5

திரையின் மறுபக்கம் எனும் திரைப்படம் உண்மையும் நகைச்சுவையும் சார்ந்த கதை. இப்படத்தை நிதின் சாம்சன் இயக்கியதோடு மட்டுமல்லாமல் கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு ஆகிய பணிகளை மேற்கொண்டு உள்ளார்.
நடிகர்கள்: முகமது கவுஸ், மணிகண்டன், ஹேமா ஜெனிலியா, நிதின் சாம்சன், ஸ்ரீ ரிஷா, ஜோதி, யாசர், சத்தியண்ணதுரை.
இயக்கம், கதை, ஒளிப்பதிவு, தயாரிப்பாளர் – நிதின் சாம்சன்
இசை – அனில் என் சி
எடிட்டிங் – நிஷாந்த் ஜேஎன்எஸ்
BGM – JKV ரித்திக் மாதவன்
DI – பங்கஜ் ஹல்தேர்
பிஆர்ஓ – சிவக்குமார்
தமிழ் சினிமா ரசிகர் சத்தியமூர்த்தி ஒரு விவசாயி. அத்துடன் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர். அவர் சென்னையில் ஒரு டீ கடையில் எதர்ச்சையாக வாயால் வடை சுடுகிற இயக்குனர் செந்திலை சந்திக்கிறார். அவரிடம் தன்னை ரஜினியுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுக்க உதவுமாறு கேட்கிறார். டுபாக்கூர் இயக்குனர் சத்தியமூர்த்தி பற்றி விசாரித்து அவரை படம் தயாரிக்கும்படி கூறுகிறார். படத்தின் ஆடியோ வெளியீட்டை ரஜினி கையால் வெளியிட ஏற்பாடு செய்வதாக கூறி அவரை குழப்பி படம் எடுக்க சம்மதிக்க வைக்கிறார். சினிமா பற்றி எதுவும் தெரியாத தயாரிப்பாளர், தனது நிலத்தை விற்று திரைப்பட தயாரிப்பில் முதலீடு செய்து படத்தை தயாரிக்கிறார். திறமை இல்லாத டுபாக்கூர் இயக்குனர் செந்தில் இயக்கிய படம் படு மோசமாக வந்ததை அடுத்து தயாரிப்பாளரால் வியாபாரம் செய்ய முடியவில்லை. படத்தை பார்க்கும் விநியோகஸ்தர்கள் அனுபவமுள்ள நல்ல தெரிந்த நடிகர்களை வைத்து ஒரு சில காட்சிகளை மீண்டும் சேர்த்தால் வியாபாரத்திற்கு நல்லது என்று அவர்கள் கூற அதற்கு, சத்தியமூர்த்தி தனது வீட்டை சினிமா பைனான்சியர் அன்பரசுவிடம் அடகு வைத்து மீண்டும் ஷூட்டிங்கிற்கு ஏற்பாடு செய்கிறார். மீண்டும் இயக்குனர் செந்தில்   படத்தை  பயங்கரமாக சொதப்புகிறார். கோபம் அடையும் சத்தியமூர்த்தி இயக்குனர் செந்திலை நீக்கி விட்டு வெளியேறுகிறார். அதன் பின் மீண்டும் வட்டிக்கு பணம் பெற்று நாயகனை மற்றும் துணை இயக்குனர் உதவியோடு படத்தை முடிக்கிறார். படம் ஓர் அளவுக்கு வியாபாரம் முடியும் தருவாயில் பணமதிப்பிழப்பு நிலை ஏற்பட்டதால் வியாபாரம் தடைபட்டு மீண்டும் சிரமத்திற்கு ஆளாகிறார் தயாரிப்பாளர். ஒரு பக்கம் பணம் கொடுத்தவர் பணம் கேட்டு சத்தியமூர்த்தி நெருக்கடி கொடுக்கிறார்கள். மற்றொரு பக்கம் சினிமா பைனான்சியர் அன்பரசு அவரது வீட்டிற்கு சென்று அவரை அவமானப் படுத்தி, அவரையும் அவரது குடும்பத்தினரையும் வீட்டைவிட்டு வெளியேற்றி வீட்டை அபகரிக்கிறார். வேதனையுடன் குடும்பத்துடன் வெளியேறிய தயாரிப்பாளர் சத்தியமூர்த்தி தற்கொலை செய்து கொள்கிறார். அதன் பின் அவரது குடும்பத்தில் என்ன நடந்தது? அன்பரசு நிலை என்ன ஆயிற்று? இந்த திரைப்படம் வெளி வந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
சினிமா பற்றி எதுவும் தெரியாத தயாரிப்பாளர் சத்தியமூர்த்தியாக நடித்த முகமது கவுஸ், ஒரு படத்தை எடுக்கும் போது தயாரிப்பாளர்கள் படும் அவஸ்தை, மற்றும் துன்பங்கள் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். சிறுபடத் தயாரிப்பாளர்களின் மனவேதனையும் துயரத்தையும் அப்படியே தனது நடிப்பின் மூலம் பிரதிபலித்துள்ளார்.
டுபாக்கூர் இயக்குனராக செந்தில் கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டன், அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். நகைச்சுவை கலந்த நடிப்பை வழங்கியுள்ளார். தான் ஒரு டுபாக்கூர் இயக்குனராக இருந்த போதிலும், தன்னை நம்பி நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நடிகை, ஒருகட்டத்தில் தவறான பாதையை பின்பற்ற முயற்சிக்கும் போது, அவர் தான் ஒரு டுபாக்கூர் இயக்குனர் ஆனால் கன்னியமானவன் என்று சொல்லி அந்த நடிகையை பார்த்து உன் திறமையால் நேர்வழியில் பயணித்து செல், நீ நிச்சயம் வெற்றி பெறுவாய் என்று அறிவுரை கூறும் காட்சியில் கைதட்டல் பெற்று அனைவரின் மனதில் இடம் பிடிக்கிறார்.
படத்தில் நடித்த ஹேமா ஜெனிலியா, நிதின் சாம்சன், ஸ்ரீ ரிஷா, ஜோதி, யாசர், சத்தியண்ணதுரை உட்பட அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளனர்.
திரையின் மறுபக்கம் எனும் திரைப்படம் உண்மையும் நகைச்சுவையும் சார்ந்த கதை.இப்படத்தை நிதின் சாம்சன் இயக்கியதோடு மட்டுமல்லாமல் கதை,திரைக்கதை, வசனம் ,தயாரிப்பு ஆகிய பணிகளை மேற்கொண்டு உள்ளார்.
நிஷாந்த் ஜேஎன்எஸ் எடிட்டிங், அனில் நலன் சக்கரவர்த்தி, ரித்திக் மாதவன், இசை மற்றும் பின்னணி இசை ஓகே ரகம்.
கதை, ஒளிப்பதிவு, தயாரிப்பு மற்றும் இயக்கம் என அனைத்தையும் நிதின் சாம்சன் கவனித்துள்ளார். சினிமாவை பற்றி எதுவும் அறியாமல், சினிமா எடுக்கவரும் தயாரிப்பாளர்கள் முறையாக எப்படி படம் எடுப்பது என்று தெரியாமல் மாட்டிக்கொண்டு, 99 சதவீதம் ஏமாற்றும் நபர்கள் உலாவரும் இந்த அற்புதமான சினிமா உலகில் அவர்களிடம் மாட்டி ஏமாற்றப்பட்டு படும் அவஸ்தையை நகைச்சுவையோடு படைத்துள்ளார் இயக்குனர். அப்படி நகைச்சுவையோடு படைத்தாலும் சிறு படத் தயாரிப்பாளர்கள் படும் இன்னல்களை நம்மால் நன்றாக உணர முடிகிறது. அத்துடன் திறமையற்ற ஒரு சில இயக்குனர்கள் சினிமா துறையில் இருக்கதான் செய்கிறார்கள். இயக்குனர் நிதின் சாம்சன் அந்த ஒரு சில இயக்குனர்களை வெளிப்படையாக இப்படி திரையில் இழிவு படுத்தாமல் இருந்திருக்கலாம்.
மொத்தத்தில் நிதின் சாம்சன் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள திரையின் மறுபக்கம் பிளாக் காமெடி மற்றும் கடுமையான யதார்த்தத்தின் சரியான கலவையை அனைத்து சினிமா எடுக்க முன் வரும் தயாரிப்பாளர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ப(பா)டம்.