டி பிளாக் திரைப்பட விமர்சனம்: டி பிளாக் பயமுறுத்த தவறிவிட்டது |மதிப்பீடு: 2/5

0
287

டி பிளாக் திரைப்பட விமர்சனம்: டி பிளாக் பயமுறுத்த தவறிவிட்டது |மதிப்பீடு: 2/5

எம்.என்.எம் பிலிம்ஸ் தயாரிப்பில்  அருள்நிதி, அவந்திகா, உமா ரியாஸ், ஆதித்யா கதிர், விஜய்குமார் ராஜேந்திரன், சரத் ரவி, தலைவாசல் விஜய், ரமேஷ் கண்ணா, கரு.பழனியப்பன் ஆகியோர் நடித்துள்ளனர்.டி பிளாக் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விஜய்குமார் ராஜேந்திரன்.இசை: ரான் ஏதன் யோகன், ஒளிப்பதிவு: அரவிந்த் சிங், எடிட்டிங்: கணேஷ் சிவா, பிஆர்ஒ- சுரேஷ்சந்திரா, ரேகா.

அடர்ந்த காட்டு பகுதியான வெள்ளிங்கிரியில் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவராக சேருகிறார் அருள்நிதி. அந்த கல்;லூhயில் சில மர்ம மரணங்கள் ஏற்படுவதால் பல கட்டுப்பாடுகள் விதித்து மாணவர்களை எச்சரிக்கின்றனர் கல்லூரி நிர்வாகித்தனர். அருள்நிதியின் வகுப்பில் படிக்கும் மாணவியும் ஒரு நாள் டி பிளாக் பெண்கள் ஹாஸ்டலில் இறந்து கிடக்கிறார். அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க அருள்நிதி முடிவு செய்கிறார். இறந்த பெண்கள் அனைவருமே சில ஒற்றுமைகள் இருப்பதை கண்டுபிடிக்கும் அருள்நிதியால்; என்ன காரணம் என்பது புலப்படாமல் இருக்கிறது. இறுதியில் அருள்நிதி மர்ம முடிச்சுக்களை கண்டுபிடித்தாரா? யார் கொலை செய்தது? எதற்காக? என்பதே மீதிக்கதை.

அருள்நிதி, அவந்திகா, உமா ரியாஸ், ஆதித்யா கதிர், விஜய்குமார் ராஜேந்திரன், சரத் ரவி, தலைவாசல் விஜய், ரமேஷ் கண்ணா, கரு.பழனியப்பன் ஆகியோர் முடிந்தவரை முக்கியத்துவம் கொடுத்து நடித்துள்ளனர்.

அர்விந்த்சிங்கின் ஒளிப்பதிவு, ரான் ஏதன் யோகனின் இசை படத்திற்கு பலம்.
கணேஷ் சிவா எடிட்டிங் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.

விஜய்குமார் ராஜேந்திரன் எழுதி இயக்கியிருக்கும் டி பிளாக் சைககோ திகில் த்ரில் கதையை கொடுக்க முயற்சி செய்துள்ளார். அதில் பாதி வெற்றி பெற்றாலும், மீதி லாஜிக் இல்லாத காரணத்தால் படத்திற்கு மைனஸ்சாக முடிந்துள்ளது. காட்சிகளில் இருக்கும் முக்கியத்துவம் திகை;கதையில் கொண்டு வந்திருந்தால் படத்திற்கான எதிர்பார்ப்பு கூடியிருக்கும்.

மொத்தத்தில் எம்.என்.எம் பிலிம்ஸ் டி பிளாக்  பயமுறுத்த தவறிவிட்டது.