டிடி ரிடர்ன்ஸ் விமர்சனம் : டிடி ரிட்டர்ன்ஸ் (டேர் டெமான்ஸ்) நோ லாஜிக் ஒன்லி மேஜிக். குடும்பத்தோடு டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை ஜாலியா பாருங்க – வாய்விட்டு சிரிங்க, மனம் குளிர்ந்து போங்க. | ரேட்டிங்: 4/5

0
804

டிடி ரிடர்ன்ஸ் விமர்சனம் : டிடி ரிட்டர்ன்ஸ் (டேர் டெமான்ஸ்) நோ லாஜிக் ஒன்லி மேஜிக். குடும்பத்தோடு டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை ஜாலியா பாருங்க – வாய்விட்டு சிரிங்க, மனம் குளிர்ந்து போங்க. | ரேட்டிங்: 4/5

நடிகர்கள்:
என் சந்தானம் – சதீஷ்
சுர்பி – சோபியா
மசூம் சங்கர் – கிளாரா
பிரதீப் ராம் சிங் ராவத் – பெர்னாண்டஸ்
மாறன் – ரவி
கிங்ஸ்லி – பென்னி
ஃபெப்சி  விஜயன் – அன்பரசு
மொட்டை ராஜேந்திரன் – பேராசிரியர்
முனிஷ் காந்த் – பீம்
பிபின் – குழந்தை
தீனா – மதி
சேது – பாம்பு
தங்கதுரை – பிளேடு பாபு
ரீட்டா – பாட்டி
மானஸ்வி – ரேச்சல்
தீபா – மலிகா
குழு:
தயாரிப்பு: ஆர்.கே. எண்டர்டெயின்மென்ட்
தயாரிப்பு: சி.ரமேஷ் குமார்
இயக்கம்: எஸ். பிரேம் ஆனந்த்
ஒளிப்பதிவு : தீபக் குமார் பதி
இசை: ofRo
எடிட்டர்: என்.பி.ஸ்ரீகாந்த்
கலை: ஏ.ஆர்.மோகன்
சண்டைக்காட்சி: ஹரி தினேஷ்
நடனம்: சாண்டி
VFX : ஆர். ஹரிஹர சுதன் (லார்வன் ஸ்டுடியோஸ்)
ஒலி கலவை: ராஜாகிருஷ்ணன்
விளம்பர வடிவமைப்பு: தினேஷ் அசோக்
ஆடை வடிவமைப்பாளர்: ஜாஸ்மின் ஜோசப்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்

புதுச்சேரியில் ஒரு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒரு குடும்பத்தினர் வெற்றி அல்லது ரன் (WIN OR RUN) என்ற ஆபத்தான கேம் ஷோவை ஊரின் வெளிபுறத்தில் உள்ள பழங்கால பிரெஞ்சு மாளிகையில் நடத்துகிறார்கள். போட்டியில் பங்கு பெறும் நபர்கள் விளையாட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே அவர்கள் வாழ முடியும். அங்கு அனைத்து போட்டியாளர்கள் முன்னேறத் தவறியதால் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். இருப்பினும், இந்த மோசமான விளையாட்டை ஏற்பாடு செய்த அந்த குடும்பத்தை கிராமவாசிகள் தீ வைத்து கொல்கிறார்கள். காலப்போக்கில் புதுச்சேரியில் மிகப்பெரிய டானாக வலம் வரும் அன்பரசு (ஃபெப்சி விஜயன்) தனது மகன் பென்னி (ரெடின் கிங்ஸ்ஸீ)க்கு திருமணம் செய்து, பணம் கொடுத்து விருப்பமில்லாத பெண் ஒருவரை தேர்வு செய்து திருமண ஏற்பாடு நடைபெறுகிறது. கடைசி நேரத்தில் மணப்பெண்  ஓடிவிட, அவரது தங்கை சோஃபியாவை (சுரபி) திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது. இதையறிந்த சோஃபியாவின் காதலர் சதீஷ் (சந்தானம்), அன்பரசு கொடுத்த ரூ.25 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்து கல்யாணத்தை நிறுத்தி சோபியாவை மீட்க நினைக்கிறார். இதனிடையே அன்பரசு விடம் இருந்து பணம், நகை உள்ளிட்டவை பிபின், முனிஷ்காந்த் குழுவால் கொள்ளை அடிக்கப்படுகிறது. மறுபக்கம் பிபின் போதைப்பொருள் பிசினஸில் சம்பாதிக்கும் பணத்தை திருட மொட்டை ராஜேந்திரன் குரூப் முயல்கிறது. இந்த நிலையில் பிபின் குழு கொள்ளையடித்த பணம், நகை மொட்டை ராஜேந்திரன் குழுவால் கைப்பற்றப்படுகிறது. அடுத்த நிமிடமே அது சந்தானம் வசமாகிறது. அவரும் அதில் இருந்து ரூ.25 லட்சத்தை திருப்பி கொடுத்து சுரபியை பிரச்சனையில் இருந்து காப்பாற்றி சிக்கலைத் தீர்க்கிறார். ஒரு கட்டத்தில் அந்த பணம் தொழிலதிபரிடம் இருந்து திருடப்பட்டது என்று அவருக்கு தெரிய வருகிறது. காதலி குடும்பம் அன்பரசுவிடம் மீண்டும் மாட்டிக் கொள்கிறார்கள். சதீஷ் மீதி பணத்தை திரும்ப கொடுத்தால் தான் காதலியும், அவளது குடும்பமும் விடுவிக்கப்படுவார்கள் என் அன்பரசு சதீஷிடம் கூறுகிறார். அதே வேளையில் போலீஸ்க்கு பயந்து மீதமுள்ள பணம், நகைகளை சந்தானத்தின் நண்பர்களாக மாறன், சைதை சேது இருவரும் ஒதுக்கு புறத்தில் உள்ள அந்த பேய் பங்களாவில்  வெளிப்புறத்தில் கொண்டு போய் வைக்கின்றனர். ஆனால் பணம் வைத்த இடத்தில் இல்லை. தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகள் சதீஷை பேய் அரண்மனைக்கு அழைத்துச் செல்கின்றன, அங்கு அவரும் அவரது குழுவினரும் பேய்களின் ஆபத்தான விளையாட்டை விளையாட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகின்றனர். மேலும் மற்ற கும்பல்களும் அரண்மனைக்குள்  திருடப்பட்ட பணத்தை மீட்டெடுக்க நுழைகின்றனர். இறுதியில் அந்த பணத்தை அவர் மீட்டு பேய்களிடமிருந்து தப்பித்தாரா? இல்லையா? அந்த பங்களாவில் நடந்தது என்ன என்பதை நகைச்சுவையுடன் மீதிக்கதை நகர்கிறது.

சாந்தானம் ராக்கிங் பெர்ஃபார்மன்ஸுடன் மீண்டும் டைமிங் காமெடியுடன் வலம் வந்துள்ளார். சந்தானத்திற்கு இது ஒரு சிறந்த மறுபிரவேசம் ஆகும். வழக்கமான நடிப்பு இல்லாமல் சக நடிகர்களுக்கு இணையான திரை பிவேசம் தந்து சதீஷ் கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்துள்ளார்.

பொதுவா அனைத்து படங்களிலும் கதாநாயகன், நாயகி மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடிப்பவர்களில் ஒரு சிலரின் நடிப்பு நம்மை பெரிய அளவில் எரிச்சல் அடைய செய்யும். அந்த பட்டியலில் இந்த படத்தில் நடித்துள்ள பல நடிகர்களும் அடங்குவார். ஆனால் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்துள்ள சுர்பி (சோபியா), மசூம் சங்கர் (கிளாரா), பிரதீப் ராம் சிங் ராவத் (பெர்னாண்டஸ்), மாறன் (ரவி), கிங்ஸ்லி (பென்னி), ஃபெப்சி  விஜயன் (அன்பரசு), மொட்டை ராஜேந்திரன் (பேராசிரியர்), முனிஷ் காந்த் (பீம்), பிபின் (குழந்தை), தீனா (மதி), சேது (பாம்பு), தங்கதுரை (பிளேடு பாபு), ரீட்டா (பாட்டி), மானஸ்வி (ரேச்சல்), தீபா (மலிகா) ஆகியோர் அந்தந்த கதாபாத்திரத்தில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நகைச்சுவை, டயலாக் டெலிவரி, திரைப் பிரவேசம் என அனைத்திலும் அனைவரும் சூப்பரா ஸ்கோர் செய்தது மட்டும் இல்லாமல் படத்தை பெரும் வெற்றி பாதைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த ஒட்டு மொத்த குழுவை அரவணைத்து வழிநடத்திய சந்தானத்தை பாராட்டியே ஆக வேண்டும்.

ஏ.ஆர்.மோகனின் கலை, தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவு, ofRo வின் இசை, என்.பி.ஸ்ரீகாந்த்தின் எடிட்டிங், மற்றும் VFX  ஆர். ஹரிஹர சுதன் (லார்வன் ஸ்டுடியோஸ்), ஒலி கலவை: ராஜாகிருஷ்ணன், ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு இந்த ஒரு ஹாரர் காமெடி படத்திற்கு உயர்தரத்தில் இருந்ததால் படம் ரோலர் கோஸ்டர் போல 2 மணி நேரம் போவது தெரியாமல் கடைசி வரை லாஃபிங் கோஸ்டராக இருப்பதை உறுதி செய்துள்ளார்கள்.

எஸ்.பிரேம் ஆனந்த் எழுத்தில் உள்ள புத்திசாலித்தனத்தை முதல் பாதியில் கச்சிதமான அமைத்து, இரண்டாம் பாதியில் அனைத்து கதாபாத்திரங்களை சரியான தருணத்தில் உள்ளே நுழைத்து நகைச்சுவைகளை திரைக்கதையில் இணைத்து படத்தை ஒரு வேடிக்கை நிறைந்த அனுபவமாக பார்வையாளர்களுக்கு படைத்துள்ளார்.

மொத்தத்தில் ஆர்.கே. எண்டர்டெயின்மென்ட் சார்பில் சி.ரமேஷ் குமார் தயாரித்திருக்கும் டிடி ரிட்டர்ன்ஸ் (டேர் டெமான்ஸ்) நோ லாஜிக் ஒன்லி மேஜிக். குடும்பத்தோடு டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை ஜாலியா பாருங்க – வாய்விட்டு சிரிங்க, மனம் குளிர்ந்து போங்க.