ஜவான் திரைப்பட விமர்சனம் : ஜவான் அதிரடி ஆக்ஷன் பாக்ஸ் ஆபீஸ் திரில்லர் | ரேட்டிங்: 4/5

0
974

ஜவான் திரைப்பட விமர்சனம் : ஜவான் அதிரடி ஆக்ஷன் பாக்ஸ் ஆபீஸ் திரில்லர் | ரேட்டிங்: 4/5

நடிகர்கள்
ஷாருக்கான் விக்ரம் ரத்தோராகவும் ஆசாத் ரத்தோராகவும்
நர்மதா ராயாக நயன்தாரா
காளி கைக்வாடாக விஜய் சேதுபதி
சிறப்பு தோற்றத்தில் தீபிகா படுகோன்
லக்ஷ்மியாக பிரியா மணி

தொழில் நுட்ப குழு :
இயக்குனர் – அட்லீ
திரைக்கதை  அட்லீ மற்றும் எஸ்.ராமநகரிவாசன்
ஒளிப்பதிவு – ஜிகே விஷ்ணு
இசை – அனிருத் ரவிச்சந்தர்
ஏடிட்டிங் – ரூபன்
ஸ்டண்ட் இயக்குனர்கள் – அனல் அரசு, ஸ்பிரோ ரசாடோஸ், கிரெய்க்
மேக்ரே, யானிக் பென், கெச்சா காம்பக்டீ மற்றும் சுனில் ரோட்ரிக்ஸ்
பேனர் – ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்
தயாரிப்பு – கௌரி கான் மற்றும் கவுரவ் வர்மா
வெளியீடு – ஸ்ரீ கோகுலம் மூலம் ரெட் ஜெயண்ட் மூவீஸ்
மக்கள் தொடர்பு – யுவராஜ்

விக்ரம் ரத்தோர் (ஷாருக்கான்) என்ற இந்திய ராணுவ வீரரைப் பற்றிய படம். கொடூரமாக காயமடைந்த மர்மமான மனிதர் (ஷாருக்கான்) எல்லைக்கு அருகில் வசிக்கும் அன்பான கிராம மக்களால் மீட்கப்படுகிறார். சில மாதங்களுக்குப் பிறகு, தீவிரவாதிகள் கிராமத்தைத் தாக்குகிறார்கள். அப்போது குணமடைந்து கொண்டிருந்த மர்ம மனிதன் அனைவரையும் காப்பாற்றுகிறான். இருப்பினும், அவர் தனது நினைவாற்றலை இழந்ததால் தான் யார் என்பதை தெரியாமல் இருக்கிறான். 30 ஆண்டுகளுக்குப் பிறகு, லக்ஷ்மி (ப்ரியா மணி), ஈரம் (சன்யா மல்ஹோத்ரா), இஷ்க்ரா (கிரிஜா ஓக்), கல்கி (லெஹர் கான்), ஹெலினா (சஞ்சீதா பட்டாச்சார்யா) மற்றும் ஜான்வி (ஆலியா குரேஷி). அடங்கிய சூப்பர் ஹீரோயிக் பெண்களின் படை உதவியுடன் மும்பையில் ஒரு மெட்ரோ ரயிலை மர்ம மனிதன் கடத்துகிறான். அந்த மெட்ரோ ரயிலில் தொழிலதிபர் காளி கெய்க்வாட் டின் (விஜய் சேதுபதி) மகளும் உள்ளார். கடந்த காலங்களில் இதுபோன்ற பணயக்கைதிகளை வெற்றிகரமாக கையாண்டு காப்பாற்றிய நர்மதாவுக்கு (நயன்தாரா) பொறுப்பு வழங்கப்படுகிறது.  மெட்ரோ ரயிலை கடத்தி பயணிகளை பணயக்கைதிகளாக பிடித்து வைத்து அரசிடம் சுமார் ரூ. 40,000 கோடி வேண்டும் என தனது கோரிக்கைகளை  அதிகாரி நர்மதாவிடம் (நயன்தாரா) முன்வைக்கிறார். உலகின் மிகப்பெரிய ஆயுத வியாபாரி மற்றும் புகழ்பெற்ற தொழிலதிபர் காளி கெய்க்வாட் (விஜய் சேதுபதி) அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்று மர்ம மனிதன் கூறுகிறார். காளி கெய்க்வாட்டின் (விஜய் சேதுபதி) மகள் மூலம் கைபேசியில் தோடர்பு கொண்டு அந்தத் தொகையை வேறு ஒரு குறிப்பிட்ட கணக்கில் டெபாசிட் செய்யும் படி கூறுகிறார். தொடர்ந்து அந்த பணத்தை உடனே ஒரு குறிப்பிட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு வழங்குகிறார். காளி கெய்க்வாட் டின் மகளின் காதில் தன் பெயர் விக்ரம் ரத்தோர் என கூறி அந்த பெயரை அவளது தந்தையிடம் சொல்லும் படி கூறுகிறான். நர்மதாவின் அதிரடி நடவடிக்கை முயற்சிகள் இருந்தபோதிலும், மர்ம மனிதனும், அவனுடைய பெண்கள் குழுவும் தப்பிக்கிறார்கள். யார் அந்த மர்ம மனிதன்? விக்ரம் ரத்தோருக்கும் காளிக்கும் என்ன தொடர்பு? விக்ரம் ரத்தோரின் மகன் ஆசாத் கதை என்ன? இந்த கேள்விகளுக்கு ஜவான் பதில் அளிக்கிறது.

ஷாருக்கான் மாசி என்ற விக்ரம் ரத்தோர் மற்றும் விக்ரமின் மகன் ஆசாத் ரத்தோர் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஷாருக்கானின் பிரவேசம் திரையரங்குகளில் பரபரப்பை ஏற்படுத்தும். ஷாருக்கானின் அபாரமான நடிப்பு மற்றும் பல்வேறு தோற்றங்கள் ரசிகர்களை வசியபடுத்தி படத்தோடு ஒன்றாக வைத்து விட்டார். ஷாருக்கான் ரயில் கடத்தல் காட்சிகளிலும், இரண்டாம் பாதியில் வயதான விக்ரம் ரத்தோராகவும் மாஸ் எண்ட்ரி கொடுத்து ஜொலிக்கிறார்.

விஜய் சேதுபதி தனது கதாபாத்திரத்தில் தனித்துவமான நடிப்பை கடைப்பிடித்துள்ளார். அவருடைய டயலாக் டெலிவரியும், மேனரிஸமும், ஷாருக்கானுடனான அவரது மோதல் காட்சிகள் அசத்தலாக உள்ளது. ஏற்கனவே தென்னிந்தியாவில் விஜய் சேதுபதி ஒரு அற்புதமான நடிகன் என்பதை அனைவரும் அறிவோம். ஜாவான் படம் மூலம் விஜய் சேதுபதியின் சிறப்பான வில்லத்தனமான நடிப்பு உலகளவில் பேசப்படும்.

நயன்தாராவின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் மிக அருமையாக உள்ளது, மேலும் சண்டை காட்சிகளில் அசத்தியுள்ளார். விக்ரமின் மனைவி ஐஸ்வர்யாவாக தீபிகா படுகோனின் கேமியோவும் சிறப்பாக இருந்ததோடு கதையை முன்னோக்கி கொண்டு செல்கிறது. சஞ்சய் தத் ஸ்கிரீன் பிரசன்ஸ் சூப்பர்.

லட்சுமியாக பிரியாமணி, டாக்டர் ஈராமாக சான்யா மல்ஹோத்ரா, இரானியாக சுனில் குரோவர், ஹெலினாவாக சஞ்சீதா பட்டாச்சார்யா, கிரிஜா ஓக் இஷ்க்ராவாக, கல்கியாக லெஹர் கான், ஜான்வியாக ஆலியா குரேஷி, காவேரியாக ரித்தி டோக்ரா, பப்புவாக யோகி பாபு, காளியின் சகோதரர் மணீஷ் கெய்க்வாடாக எய்ஜாஸ் கான், ஜூஜூவாக சங்கே ஷெல்ட்ரிம், நம்ரதாவின் மகள் சுசி ராய் வேடத்தில் சீசா சரோஜ் மேத்தா உட்பட அனைவரும் தனித்துவமான நடிப்பை வழங்கி படத்தின் கதைக்கு பொருத்தமாக சேர்ந்து ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தொடர்பு படுத்தி இருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படம் சிறந்த தொழில்நுட்ப மற்றும் தயாரிப்பு பிரம்மாண்டமாக உள்ளது.

ஸ்டண்ட் இயக்குனர்கள் – அனல் அரசு, ஸ்பிரோ ரசாடோஸ், கிரெய்க்மேக்ரே, யானிக் பென், கெச்சா காம்பக்டீ மற்றும் சுனில் ரோட்ரிக்ஸ் ஆகியோரின் ஆக்ஷன் காட்சிகள் வியக்க வைக்கின்றன.

ஜி.கே. விஷ்ணுவின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது. கரடுமுரடான நிலப்பரப்புகள் மற்றும் போர்க்களங்களின் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் பார்வையில் மூழ்கும் அனுபவத்தை உருவாக்குகின்றன.

விறுவிறுப்பான ரூபனின் படத்தொகுப்பு மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ், படத்தின் ஒவ்வொரு பிரேமும் ரிச்சாகவும் பிரமாண்டமாகவும் இருக்கிறது.

அனிருத்தின் இசை மற்றும் பின்னணி இசை படத்தை வேறு லெவலுக்கு கொண்டு செல்கிறது. இனி அனிருத்தின் இசை பாலிவுட்டையும் தன் அதிரடி இசை மழையால் அனைவரையும் கவர்ந்து இழுக்கும்.

அட்லீயின் கதை வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, நமது அரசியல் அமைப்பு பற்றிய முக்கியமான கருத்தையும் அளிக்கிறது. எந்தவொரு நிலையிலும் தனது தேசத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு ஜவான் (சிப்பாயின்) போராட்டங்கள், சங்கடங்கள் மற்றும் அசைக்க முடியாத உறுதிப்பாட்டுடன் தேசத்திற்காக நமது வீரர்கள் செய்யும் தியாகங்கள் பற்றியும், முதலாளித்துவம், விவசாயக் கடன்களை விட கார்ப்பரேட் கடன்களுக்கு அரசாங்கங்கள் அளிக்கும் தள்ளுபடிகள்,    விவசாயிகள் தற்கொலைகள், புறக்கணிக்கப்பட்ட அரசு மருத்துவமனைகளில் உள்ள சுகாதார அமைப்பின் குறைபாடுகள், தரமற்ற இராணுவ ஆயுதங்களால் ஏற்படும் உயிர் பலி, தேர்தல் மோசடிகள் மற்றும் உரிமையான வளங்களை அணுக முடியாத குடிமக்களின் அவலநிலை என சமூகப் பிரச்சினைகளை திரைக்கதையில் அட்லி மற்றும் எஸ் ரமணகிரிவாசன் விறுவிறுப்பாக அமைத்து இருக்கிறார்கள். அட்லீ தனது முதல் பாலிவுட்டில் திரைப்படத்தில், ஷாருக்கானை பிரமிக்க வைக்கும் விதத்தில் மாஸாக திரையில் காட்சிப்படுத்தி தெறிக்கவிட்டுள்ளார். தொடர்ந்து மூன்று வெற்றிகளை படைத்த அட்லீ மற்றுமொரு மாஸ் ஆக்ஷனுடன் உணர்ச்சிகளை தடையின்றி கலக்கும் ஒரு சினிமா படைத்துள்ளார். அவரது இயக்குனரின் திறமை எப்போதும் போல் கூர்மையாக இருக்கும் என்பதை தனது முதல் பாலிவுட் அறிமுகத்தில் அவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

மொத்தத்தில் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் ஜவான் அதிரடி ஆக்ஷன் பாக்ஸ் ஆபீஸ் திரில்லர்.