சென்டிமென்ட் ஆக்சன் திரில்லர் சப்ஜெக்டில் YSIMY புரொடக்ஷன்ஸ் (YSIMY Productions) ‘ரூல் நம்பர் 4’ (Rule Number 4)

0
94

சென்டிமென்ட் ஆக்சன் திரில்லர் சப்ஜெக்டில் YSIMY புரொடக்ஷன்ஸ் (YSIMY Productions) ‘ரூல் நம்பர் 4’ (Rule Number 4)

பாஸர் (Director Bosser) இயக்கியுள்ள இந்த படத்தில் ஏகே பிரதீஸ் கிருஷ்ணா ( AK Pratheesh Krishna )கதாநாயகனாக நடிக்க, ஸ்ரீகோபிகா (Shree Gopi ka)கதாநாயகியாக நடிக்கிறார். அவர்களுடன் மோகன் வைத்யா(Mohan vidhya ), ஜீவா ரவி(Jeeva Ravi), கலா கல்யாணி(Kala Kalyani ), பிர்லா போஸ்(Birla Bose), கலா பிரதீப்(Kala Pradeep ) உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர் – ஷிமி இஸட் (Simy Z )
இணை தயாரிப்பாளர்கள் – ஏ. குமரபிள்ளை, கிரண் மேலவீட்டிள், தேவராஜன் பிள்ளை
ஒளிப்பதிவு – டேவிட் ஜான்
பின்னணி இசை – தீரஜ் சுகுமாறன்
எடிட்டிங் – எஸ்.பி.அஹமது
நடன இயக்குநர் – அஜய் காளிமுத்து
சண்டைக் காட்சி – ராக் பிரபு
இணை இயக்குநர் – ஜெகானந்த வர்தன்
மக்கள் தொடர்பு – பா.சிவக்குமார்

கதைக்களம்:

நாயகன் ஏகே பிரதீப் கிருஷ்ணா ஏடிஎம் வேன் டிரைவராக பணிபுரிகிறான். அவனுக்கு ஒரு பெண் மீது காதல் உருவாக அதை அவளிடம் சொல்ல அவள் ஏற்க மறுக்கிறாள். ஆனாலும் விடாமல் அவளை துரத்தி தன் காதலை ஏற்க வைக்கிறான். பிறகுதான் தெரிகிறது தான் காதலித்த பெண் தன்னுடன் ஏடிஎம் வேனில் துப்பாக்கி சுமந்து கூடவே வரும் செக்யூரிட்டியின் மகள் என்பது. இப்படி சுவாரஸ்யமாக பயணிக்கும் கதையில்… அந்த பெண்ணின் அப்பாவிடம் விவரத்தை சொல்லி காதலுக்குச் சம்மதம் பெற ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்க நினைக்கிறார்கள். அதற்காக அதன்படி கோடிக்கணக்கான ரூபாயோடு ஏடிஎம் வேன் பயணிக்கும்போது இடையில் அவளை வேனில் ஏற்றிக் கொள்ள திட்டம் வகுக்கிறார்கள். அதன்படி அவளை ஏற்றிக் கொள்கிறார்கள். இப்போது வேனில் வேனை ஓட்டுகிற நாயகன், அவன் காதலிக்கும் பெண், அந்த பெண்ணின் தந்தை, பேங்க் மேனேஜர், கூடவே ஒரு கர்ப்பிணிப் பெண் என ஐந்து பேர் இருக்கிறார்கள். வேன் ஓடிக்கொண்டேயிருக்க, காதல் விவகாரத்தை அந்த அப்பாவிடம் சொல்லி அவருக்கு ஷாக் கொடுக்கிறார்கள்.

வேன் அப்படியே, காட்டிலாக்கா கட்டுப்பாட்டிலுள்ள ஏடிஎம் ஒன்றில் பணத்தை நிரப்புவதற்காக காட்டுப் பாதையில் நுழைகிறது. அந்த சமயத்தில் வேனிலிருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் சிலரால் வேன் வழிமறிக்கப்பட்டு, அதிலிருப்பவர்கள் கொடூரமாக தாக்கப்படுகிறார்கள். வேனை பெட்ரோல் ஊற்றி கொளுத்தும் முயற்சியிலும் இறங்குகிறார்கள்.

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காட்டிலாக்கா உயரதிகாரி பணத்தை தன் வசமாக்கிக்கொள்ள நினைத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்.

வேனிலிருப்பவர்கள் அந்த இக்கட்டான சூழலிருந்து தப்பிக்கப் போராடுகிறார்கள். அந்த முயற்சிக்கு பலன் கிடைத்ததா? கொள்ளையர்களின் நோக்கம் நிறைவேறியதா? என்பது கதையோட்டம்.

படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களுக்கு கெவின் டெகாஸ்டா (Kevin D costa) இசையமைத்துள்ளார்.

விறுவிறுப்பான கதைக்களம், அதிரடி ஆக்சன், அட்டகாசமான சென்டிமென்ட் என உருவாகியுள்ள இந்த ரூல் நம்பர் 4 (Rule Number 4) நவம்பர் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

தமிழகமெங்கும் ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனிஸ் (An Action Reaction JENISH Distribution ) படத்தை வெளியிட்டுள்ளார்.