சான்றிதழ் திரைப்பட விமர்சனம் : ‘சான்றிதழ்’ சும்மா ஜாலியா போய் ஒரு முறை பார்க்கலாம் | ரேட்டிங்: 2.5/5

0
287

சான்றிதழ் திரைப்பட விமர்சனம் : ‘சான்றிதழ்’ சும்மா ஜாலியா போய் ஒரு முறை பார்க்கலாம் | ரேட்டிங்: 2.5

நடிகர்கள்: ஹரிகுமார், ரோஷன் பஷீர், ராதா ரவி, அபுகான், ரவிமரியா, மனோபாலா, அருள்தாஸ், கவுசல்யா, ஆஷிகா அசோகன், தனிஷா குப்பாண்டா, ஆதித்ய கதிர், காஜல் பசுபதி, உமா ஸ்ரீ
இயக்கம்: ஜெயச்சந்திரன்
இசை: பைஜு ஜேக்கப்
தயாரிப்பு : வெற்றிவேல் சினிமாஸ் – எஸ்.ஜே.எஸ். சுந்தரம் மற்றும் ஜே.வி.ஆர்
மக்கள் தொடர்பு : நிகில்

கெட்ட எண்ணம் கொண்டவர்களை கண்காணிக்க சிசிடிவி கேமராக்களை பயன்படுத்தும் கருவறை கிராமத்தைச் சுற்றி கதை நகர்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் கருவறை என்ற கிராம மக்கள் தங்களுக்கு என்று தனி சட்டங்களை வகுத்துக் கொண்டு ஒழுக்கமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருகிறார்கள். கருவறை கிராமத்தின் இத்தகைய சிறப்பை அறிந்து மத்திய அரசு  குடியரசுத் தலைவர் விருது அறிவித்தாலும் கிராம மக்கள் விருதை ஏற்க மறுத்ததால் கிராம மக்களுக்கும் அரசு அமைச்சருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கோபமடையும் அமைச்சர் கருவறை கிராமத்தின் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார். தறுதலை கிராமமாக இருந்த அந்த ஊரை கருவறை கிராமமாக மாற்றியதற்கு பின்னால் வெள்ளைச் சாமி என்பவரது மிகப்பெரிய போராட்டமும், அவர் தனது கனவு கிராமத்தை உருவாக்க தன் உயிரையே தியாகம் செய்ததை சொல்வது தான் ‘சான்றிதழ்’ படத்தின் கதை.
எப்போதும் அடிதடி மற்றும் முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் பார்த்த ஹரி இந்தப் படத்தில் இரண்டாம் பாதியில் வெள்ளைச்சாமி என்ற மாறுபட்ட கதாபாத்திரத்தில் வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக வலம் வருகிறார். தனது கிராம மக்களின் பொறுப்பற்ற மற்றும் அவல நிலையை கண்டு கலங்கும் காட்சிகள் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
அமைச்சர் வேடத்தில் ராதாரவி, வெள்ளைச்சாமி மச்சானாக அருள்தாஸ், மற்றும் நடிகை கௌசல்யா ஆகியோர் தங்களது அனுபவ நடிப்பின் மூலம் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். கருவறை கிராமத்து இளைஞனாக நடித்திருக்கும் ரோஷன் பஷீர் – நிருபராக வரும் ஆஷிகா அசோகன், ரவி மரியா, மனோபாலா, ஆதித்யா கதிர் தனிஷா குப்பண்டா, காஜல் பசுபதி, உமா ஸ்ரீ உட்பட படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் பார்வையாளர்களை கலகலப்பாகவும், கிளுகிளுப்பாகவும் வைத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ரவிமாறன் சிவன் முழு கிராமத்தையும், பைஜு ஜேக்கப்பின் இசையில் பாடல் காட்சிகளும் அழகான கோணத்தில் காட்சி படுத்தி கவனம் ஈர்த்திருக்கிறார். பைஜு ஜேக்கப் பின்னணி இசையில் கூடுதல் கவனம் செய்திருக்கலாம்.
தனி மனித ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு மிக முக்கியம் என்ற கருத்தை மையமாக வைத்து கமர்ஷியல் அயிட்டங்களை சேர்த்து திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் ஜெயச்சந்திரன். கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கமற்ற தறுதலை கிராமம் எப்படி வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத கட்டுப்பாடுகளும், சட்டத்திட்டங்களுடன் சிறந்த கருவறை கிராமாக மாறுகிறது என்பதை நல்ல கருத்துடன் ஒரு கற்பனை கிராமத்தையே படைத்துள்ளார் இயக்குநர்.
மொத்தத்தில் வெற்றிவேல் சினிமாஸ் சார்பில் எஸ்.ஜே.எஸ்.சுந்தரம் மற்றும் ஜே.வி.ஆர் தயாரித்துள்ள ‘சான்றிதழ்’ சும்மா ஜாலியா போய் ஒரு முறை பார்க்கலாம்.