சந்திரமுகி 2 திரைப்பட விமர்சனம் : சந்திரமுகி 2 ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறி விட்டது | ரேட்டிங்: 2/5

0
980

சந்திரமுகி 2 திரைப்பட விமர்சனம் : சந்திரமுகி 2 ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறி விட்டது | ரேட்டிங்: 2/5

சந்திரமுகி- 2
தயாரிப்பு – சுபாஸ்கரன்
நடிகர்கள்
ராகவா லாரன்ஸ் – பாண்டியன், வேட்டையன்
கங்கனா ரனாவத் – சந்திரமுகி
வடிவேலு – முருகேசன்
ராதிகா சரத்குமார் – ரங்கநாயகி
லட்சுமி மேனன் – திவ்யா
மஹிமா நம்பியார் – லட்சுமி
ராவ் ரமேஷ் – குருஜி
சுரேஷ் மேனன்
விக்னேஷ்
ஒய்.ஜி.மகேந்திரன்
ரவி மரியா
ஸ்ருஷ்டி டாங்கே
சுபீக்ஷா
சாய் ஐயப்பன்
சத்ரூ
கார்த்திக் சீனிவாசன்
சி.ரங்கநாதன்
தேவி
பாவனா
பேபி மானஸ்வி
மாஸ்டர் சஞ்ஜீவ்
மாஸ்டர் தர்சித்
பேபி தீக்ஷா

தொழில்நுட்ப கலைஞர்கள் :
எழுத்து – இயக்கம் –பி. வாசு
இசை – எம்.எம்.கீரவாணி
ஒளிப்பதிவாளர் – ஆர்.டி.ராஜசேகர்
கலை இயக்குனர் – தோட்டா தரணி
எடிட்டிங் – ஆண்டனி
பாடலாசிரியர்கள் – யுகபாரதி – மதன் கார்க்கி- விவேக் – சைத்தன்ய பிரசாத்
நடன பயிற்சி – கலா, தினேஷ், பாபா பாஸ்கர்
சண்டைப்பயிற்சி – கனல் கண்ணன், ஸ்டண்ட் சிவா, ரவி வர்மா,
ஓம் பிரகாஷ்
லைக்கா புரொடக்ஷன்ஸ் தலைமை – ஜி.கே.எம்.தமிழ்குமரன்
தயாரிப்பு நிறுவனம் – லைக்கா புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர் – சுபாஸ்கரன
மக்கள் தொடர்பு – யுவராஜ்

ரங்கநாயகி (ராதிகா சரத்குமார்) தலைமையிலான ஒரு பணக்கார குடும்பத்தில் தொடர்ந்து பல்வேறு துர்சம்பவங்கள் நடக்கின்றன.பல பிரச்சனைகளை சந்தித்து வரும் ரங்கநாயகி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் குல தெய்வத்துக்கு ஒரு பெரிய பூஜை செய்ய வேண்டும், என்று குடும்ப சாமியார் (ராவ் ரமேஷ்) அறிவுறுத்துகிறார். அவர்கள் பூஜை செய்ய வேண்டிய கோவில் வேட்டையன் அரண்மனைக்கு அருகில் உள்ளது. குடும்பம் வேட்டையபுரம் அரண்மனைக்கு பயணம் செய்கிறது. அதே போல், வேற்று மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்த குடும்பத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட மகளுக்கு பிறந்த குழந்தைகளையும் அங்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று சாமியார் கூறியதால், இந்தக் குழந்தைகளும் அவர்களது கார்டியன் பாண்டியனும் (ராகவா லாரன்ஸ்) இங்கு வருகின்றனர். இப்போது அரண்மனைக்கு முருகேசன் (வடிவேலு) சொந்தக்காரர். அவர் அந்த அரண்மனையை ரங்கநாயகியின் குடும்பத்திற்கு குத்தகைக்கு விடுகிறார். ஆனால் அரண்மனையில் சந்திரமுகியின் தீய ஆவி இருப்பதைப் பற்றி அவர்களுக்கு அதிகம் தெரியாது. முருகேசன் ரங்கநாயகி மற்றும் அவரது குடும்பத்தினரை வீட்டின் தெற்கு நோக்கி செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கிறார். அந்த வீட்டை குத்தகைக்கு எடுத்து தங்கும் அவர்களை, தங்கள் குலதெய்வக் கோயிலில் பூஜை செய்ய விடாமல் தடுக்கிறார் ஒரிஜினல் சந்திரமுகி (கங்கனா). விஷயங்கள் மோசமாகி போக வேட்டையன் தான் மையப் புள்ளியாக இருக்கிறார். வேட்டையன் யார், என்ன நடக்கிறது? பின்னர் ராதிகாவின் குடும்பம் என்ன சவால்களைச் சந்தித்தது? வேட்டையனுக்கும் (லாரன்ஸ்) ராதிகா குடும்பத்துக்கும் எப்படி தொடர்பு? சந்திரமுகியை தடுத்து ரங்கநாயகியின் குடும்பம் குலதெய்வம் கோயிலில் பூஜை செய்ததா என்பதே சந்திரமுகி 2.

சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்திற்கு அவர் ஒருவரே மக பொருத்தமானவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அவருக்கு பதிலாக அந்த முக்கிய கதாபாத்திரத்திற்கு  யாரும் பொருந்த மாட்டார்கள் என்பதை சந்திரமுகி 2 நிருபித்துள்ளது. லாரன்ஸ் அந்த பாத்திரத்தில் துளியும் பொருந்தவில்லை. ராகவா லாரன்ஸ் இரட்டை வேடத்தில் பாண்டியனாகவும், வேட்டையன் என்கிற செங்கோடையனாகவும் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பால் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. படம் முழுக்க  ரஜினியை அப்படியே நகலெடுத்து நடித்து வைத்திருக்கிறார்.

சந்திரமுகியாக நடித்த கங்கனா ரனாவத், படத்தின் இரண்டாம் பாதியில் ஒரு கண்ணியமான கேமியோவை வழங்குகிறார். சந்திரமுகி வேடத்தில் கங்கனா நடித்தாலும், ஜோதிகாவின் இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் நினைவில் ஆழமாக பதிந்துள்ளது. அவரது நேர்த்தி மற்றும் நுட்பமான நடிப்பைத் தவிர, அவரது நடிப்பில் சந்திரமுகியை நினைவில் கொள்ள எதுவும் இல்லை.

ரங்கா நாயகியாக ராதிகா சரத்குமார், திவ்யா மற்றும் சந்திரமுகியாக லட்சுமி மேனன், லட்சுமியாக மஹிமா நம்பியார், ப்ரியாவாக ஸ்ருஷ்டி டாங்கே, குணசேகரனாக மிதுன் ஷ்யாம் ஆகியோர் படத்தைக் காப்பாற்ற தங்களால் இயன்றவரை முயற்சி செய்துள்ளனர்.

வடிவேலுவும் லாரன்ஸும் சேர்ந்து காலாவதியான மற்றும் மிகையான நகைச்சுவையை, காமெடி என்ற பெயரில் நம்மை எரிச்சல் மூட்டுகிறார்கள். மற்றும் ரவி மரியா, விக்னேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், ராவ் ரமேஷ், சுரேஷ் மேனன்,  சுபீக்ஷா, சாய் ஐயப்பன், சத்ரு, கார்த்திக் சீனிவாசன், சி.ரங்கநாதன், தேவி, பாவனா, பேபி மானஸ்வி, மாஸ்டர் சஞ்ஜீவ், மாஸ்டர் தர்சித், பேபி தீக்ஷா, மறைந்த நடிகர்கள் மனோ பாலா, ஆர்.எஸ்.சிவாஜி என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள்  இருந்தும் யாருக்கும் அதிகம் வேலையே இல்லை.

கீரவாணியின் இசையும் பின்னணி இசையும் மிகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில காட்சிகளை எம்.எம். கீரவாணி தனது பின்னணி இசையுடன் படத்தை தூக்கி நிறுத்த முயன்றுள்ளார்.

ராஜசேகர் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. எடிட்டர் ஆண்டனி இன்னும் சிறப்பாக செய்து இருக்கலாம்.

படம் முழுக்க ரஜினியை அப்படியே நகலெடுத்து நடித்த லாரன்ஸை போல இயக்குனர் பி.வாசுவும் அப்படியே மீண்டும் அதே சந்திரமுகியை இன்னொரு நகலாக சந்திரமுகி 2 வை படைத்துள்ளார். இயக்குனர் பி.வாசு முதல் பாகத்தில் செய்த அதே பார்முலாவை பின்பற்ற எந்தவித மெனக்கடலும் இல்லாமல் திரைக்கதையில் த்ரில்லான தருணங்கள் மற்றும், ஒரு திகில் படத்திற்கு அடிப்படைத் தேவையாக இருக்கும் பயமுறுத்தும் சூழல் முற்றிலும் இல்லாமல் அமைத்துள்ளார். திரை முழுக்க கதாபாத்திரங்கள் நிறைந்திருக்கின்றன தவிர, அவை எதுவும் தெளிவாக எழுதப்படாததால் படம் சுவாரஸ்யம் எதுவும் இன்றி சந்திரமுகி 2 நகர்ந்து செல்கிறது.

மொத்தத்தில் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள சந்திரமுகி 2 ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறி விட்டது.