க்ளாஸ் மேட்ஸ் சினிமா விமர்சனம் : க்ளாஸ் மேட்ஸ் போதையில் தள்ளாடுகிறது  | ரேட்டிங்: 2.25/5

0
175
க்ளாஸ் மேட்ஸ் சினிமா விமர்சனம் : க்ளாஸ் மேட்ஸ் போதையில் தள்ளாடுகிறது  | ரேட்டிங்: 2.25/5

நடிகர்கள்: அங்கையற்கண்ணன், பிராணா, குட்டிப்புலி ஷரவண சக்தி, மயில்சாமி, டிஎம் கார்த்திக், சாம்ஸ், எம்பி முத்துப்பாண்டி, அபி நட்சத்திரா, அருள்தாஸ், மீனாள், எஸ்ஆர் ஜாங்கிட் ஐபிஎஸ் மற்றும் பலர்

தொழில்நுட்ப கலைஞர்கள்  :
எழுதி இயக்கியவர் : குட்டிப்புலி ஷரவண சக்தி
இணை இயக்குனர் : ஜே.அங்கையற்கண்ணன், ரத்னகுமார்
தயாரிப்பாளர் : ஜே.அங்கையற்கண்ணன்
இணை தயாரிப்பாளர் : கலைவாணி கண்ணன்
நிர்வாக தயாரிப்பாளர் : ஹர்னிஷ்.ஏ.கே.
பேனர்: முகவை பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
டிஓபி: அருண்குமார் செல்வராஜ்
படத்தொகுப்பு: எம்.எஸ்.செல்வம்
கூடுதல் எடிட்டர் : ஆர்.ராஜவர்மன்
கலை இயக்குனர் : ஜெய்
இசையமைப்பாளர் : பிரிதிவி
பாடல் வரிகள் : சீர்காலி சிற்பி
நடன இயக்குனர் : சந்தோஷ்
ஆடை வடிவமைப்பாளர் : ஏ.முத்து
ஸ்டண்ட் : ராம்குமார்
ஸ்டில்ஸ்: சிவா
ஒப்பனை: ஜி.ராகவன் ராகுல்
SFX : கண்ணன்
ஒலி வடிவமைப்பு: சி.ஏ.மைதீன் (மைட்டி ஸ்டுடியோ)
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

பாம்பன் பாலம், ஏர்வாடி தர்கா, உத்திரகோசமங்கை கோவில், கமல்ஹாசன், அப்துல் கலாம் என இராமநாதபுரத்தின் பெருமைகளை சொல்லிவிட்டு படம் தொடர்கிறது. கால் டாக்சி டிரைவர் அங்கையற்கண்ணனும் குட்டிப்புலி  ஷரவணசக்தியும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் குடிக்கு அடிமையான மகா குடிகாரர்கள். புதிதாக கல்யாணம் ஆன அங்கையர் கண்ணன் அழகான மனைவியுடன் பொறுப்பான கணவனாக வாழ்ந்து வந்தாலும், சம்பாதிக்கும் காசு நண்பன் ஷரவணசக்தியுடன் சேர்ந்து குடித்து பொழுதைக் கழிக்கிறார்கள். டீச்சர் வேலைக்கு போகும் மனைவி, பாசத்துடன் இருக்கும் மகள் என ஒரு அன்பான குடும்பத்துடன் வாழும் சக்தி சரவணன், தினந்தோறும் நண்பன் அங்கையற் கண்ணனுடன் குடிப்பதை மட்டும் நிறுத்துவதில்லை. ஒரு கட்டத்தில் இருவரும் அவர்களது மனைவியை சந்தேகப்பட ஆரம்பிக்கிறார்கள். மயில்சாமி ஊரில் குடிப்பதை நிறுத்தி விட்டு மனைவி மற்றும் ஐ.ஏ.எஸ்.கனவுடன் இருக்கும் மகள் அபி நட்சத்ரா உடன் வாழும் அவரது குடும்பத்தில் அவர்கள் இருவரும் சேர்ந்து குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். இந்நிலையில் துபாயில் இருந்து வரும் ஷரவணசக்தி மச்சான் ஷாம்ஸ் க்கு பெண் பார்த்து திருமணம் ஏற்பாடு நடக்கிறது.  திருமணத்துக்கு முதல் நாள் ஷாம்ஸ் குடித்துவிட்டு போட்ட ஆட்டத்தின் வீடியோ வைரலாக திருமணம் நின்று விடுகிறது. குடித்துவிட்டு ஷரவணசக்தி, அங்கையற் கண்ணன் மற்றும் மயில்சாமி ஆகிய மூவரும் போதையில் காரில் போகும்போது கார் மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டு அதில் மயில்சாமி அகால மரணம் அடைகிறார். இதனால், ஐ.ஏ.எஸ்.கனவுடன் இருக்கும் மகள் அபி நட்சத்ரா மற்றும் மனைவி ஆதரவு அற்ற தனித்து நிற்கிறார்கள். அத்துடன் அங்கையற்கண்ணன் மற்றும் ஷரவணசக்தி குடும்பம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் தயாரிப்பாளரும், கதையின் நாயகன் அங்கையர் கண்ணன் கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கி அந்த பாத்திரமாகவே மாறி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
படத்தின் இயக்குனரும், இரண்டாம் நாயகனாக சக்தி சரவணன் தன் கதாபாத்திரத்திற்கு தேவையான பங்களிப்பை வழங்கியுள்ளார். இருந்தாலும் ஒரு சில இடங்களில் அவரது நடிப்பு கொஞ்சம் ஓவரா இருந்தது.

பிராணா, மயில்சாமி, டி எம் கார்த்திக், சாம்ஸ், எம்பி முத்துப்பாண்டி, அபி நட்சத்திரா, அருள்தாஸ், மீனாள், எஸ்ஆர் ஜாங்கிட் ஐபிஎஸ் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்திற்கு நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் அருண்குமார் செல்வராஜ், எடிட்டர் எம்.எஸ்.செல்வம், கூடுதல் எடிட்டர் ஆர்.ராஜவர்மன், கலை இயக்குனர் ஜெய், இசையமைப்பாளர் பிரிதிவி, பாடல் வரிகள் சீர்காலி சிற்பி, நடன இயக்குனர் சந்தோஷ், ஆடை வடிவமைப்பாளர் ஏ.முத்து, ஸ்டண்ட் ராம்குமார், ஸ்டில்ஸ் சிவா, ஒப்பனை ஜி.ராகவன் ராகுல், SFXஓ கண்ணன், ஒலி வடிவமைப்பு சி.ஏ.மைதீன் (மைட்டி ஸ்டுடியோ) உட்பட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் கடின உழைப்பு கதைக்கு பலமாக அமைந்துள்ளது.

குடி பழக்கம் எப்படி குடியை கெடுக்கும் என்னும் கதைகளத்தில் காமெடி, சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களுடன் அசத்தலான கிளைமாக்ஸ் காட்சியுடன் இயக்கிய குட்டிப்புலி ஷரவண சக்தி திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படம் விறுவிறுப்பாக இருந்து இருக்கும்.

மொத்தத்தில் முகவை பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்திருக்கும் க்ளாஸ் மேட்ஸ் போதையில் தள்ளாடுகிறது.