கேப்டன் திரைவிமர்சனம்: கேப்டன் ஆவலையும், எதிர்பார்ப்பையும் ஈர்க்க தவறிவிட்டார் | ரேட்டிங்: 2.5/5
கேப்டன் திரைப்படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ளார் மற்றும் 1987 ஆம் ஆண்டு ஹாலிவுட் ஆக்ஷன் படமான பிரிடேட்டரின் தழுவலாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆர்யா ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்ததுடன் தயாரித்தும் இருக்கிறார். இவரைத் தவிர, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சிம்ரன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், மாளவிகா அவினாஷ், சுரேஷ் மேனன், அம்புலி கோகுல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க, எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் எடிட் செய்துள்ளார்.
ஒரு ஜீப் காட்டுக்குள் நுழைவதை காணும் காட்சியுடன் படம் தொடங்குகிறது, அது தடை செய்யப்பட்ட வனப் பகுதியில் செக்டார் 42. இங்கு பல ஆண்டுகளாக சிவில் மற்றும் ராணுவ நடவடிக்கை இல்லாமல் உள்ளது. காட்டுக்குள் நுழைந்த ஒரு சில நொடியில், ஜீப் விபத்துக்குள்ளானதை குறிக்கும் பூம் சத்தத்தையும் பின்னர் சில துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்கிறது. அதில் நான்கு இந்திய ராணுவ அதிகாரிகள் கொல்லப்படுகின்றனர்.
ராணுவத்தில் கேப்டனாக இருக்கும் வெற்றி செல்வன் (ஆர்யா) ஒரு அனாதை. அவர் தனது அணி தான் தனது குடும்பம் என்றும் அவர்களைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்வேன் என்று விரிவான அறிமுகத்துடன் கேப்டன் தொடங்குகிறது. இந்நிலையில், தடைசெய்யப்பட்ட வனப் பகுதியில் செக்டார் 42 க்குள் செல்லும் வேலை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது, அங்கு செல்லும் மக்கள் விவரிக்க முடியாதபடி இறக்கிறார்கள். அவரும் அவரது குழுவும் செக்டர் 42 லொகேஷனுக்கு செல்லும் போது, அந்த முதல் ஜீப்பை போலவே, வெற்றி செல்வனின் ஜீப்பை மினோட்டர்களால் (விசித்திரமான உயிரினங்கள்) தாக்கப்படுகிறார்கள். அவரது நண்பர் கார்த்தி தேவன் (ஹரிஷ் உத்தமன்) அவரையும் அவரது குழுவினரையும் சுட முயற்சிக்கிறார், ஆனால் இறுதியில் தன்னைத்தானே சுட்டுக்கொள்கிறார். கேப்டன் தனது குழு உறுப்பினர் கார்த்திக்கை (ஹரிஷ் உத்தமன்) இழக்கிறார். தனது சிறந்த நண்பரை இழந்த பிறகு, வெற்றி செல்வன் தனிப்பட்ட முறையில் பணியை மேற்கொள்கிறார், அப்போதுதான் விஷயங்கள் ஒரு திருப்பத்தை எடுக்கத் தொடங்குகின்றன. அங்கு மினோட்டர்கள் (விசித்திரமான உயிரினங்கள்) இருப்பதையும், அதன் காரணமாக அங்கு செல்பவர்கள் உயிருடன் திரும்புவதில்லை என்பதையும் வெற்றி செல்வன் உணர்கிறார்.கீ ர்த்தி (சிம்ரன்) என்ற விஞ்ஞானி, ராணுவ வீரர்களின் மரணத்தின் பின்னணியில் மறைந்துள்ள காரணத்தைக் கண்டறிய வெற்றி செல்வனிடம் உதவி கேட்கிறார். கீர்த்தியும் வெற்றியும், அவரது குழுவுடன் சேர்ந்து, இப்போது மினோட்டர், அதன் வரலாறு மற்றும் உயிரினங்களைத் தோற்கடிப்பதற்கான சிறந்த வழியைக் கண்டறியும் திட்டத்தை உருவாக்குகிறார்கள். வெற்றி செல்வன் தனது உயிரை பணயம் வைத்து மினோட்டர்களை எப்படி எதிர்கொண்டார்? அந்த விசித்திரமான உயிரினங்களின் தலைமை யார்? ராணுவ அதிகாரிகள் தங்களைத் தாங்களே சுட்டுக்கொள்ள மினோடார்ஸ் என்ன செய்கிறார்கள்? விஞ்ஞானி கீர்த்தி (சிம்ரன்) செய்த ஆராய்ச்சி என்ன? என்பதை நீங்கள் வெள்ளித் திரையில் பார்க்க வேண்டும்.
பா ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரையில் சிறப்பான நடிப்புக்குப் பிறகு, ஆர்யாவை இந்தப் படத்தில் பார்ப்பது வியப்பாக இருக்கிறது. ராணுவ அதிகாரி வேடத்தில் நடிக்க கடுமையாக முயற்சி செய்துள்ளார். ஆனால் படம் முழுக்க ஒரு எக்ஸ்பிரஷனை வைத்துக்கொண்டு ராணுவ அதிகாரிக்கான கம்பீரத்தை ஆர்யாவால் வெளிப்படுத்த முடியவில்லை. இருப்பினும் ஆக்ஷன் காட்சிகளில்; ஆர்யாவின் ஈடுபாட்டை பாராட்டியே ஆக வேண்டும்.
ஆர்யாவின் காதலியாக ஐஸ்வர்யா லட்சுமி இரண்டு காட்சிகள் மற்றும் ஒரு மாண்டேஜ் பாடலுக்கு மட்டும் பயன்ப்படுத்தப்பட்டுள்ளார்.
சிம்ரன் குறைவான காட்சிகளில் தோன்றினாலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
