கும்பாரி சினிமா விமர்சனம் : ‘கும்பாரி’ நட்பு, பாசம், காதல் கலந்த காமெடி எண்டர்டெயினர் | ரேட்டிங்: 3/5

0
246

கும்பாரி சினிமா விமர்சனம் : ‘கும்பாரி’ நட்பு, பாசம், காதல் கலந்த காமெடி எண்டர்டெயினர் | ரேட்டிங்: 3/5

ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் குமாரதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கும்பாரி.

இந்த படத்தில் விஜய் விஷ்வா, நலீப் ஜியா, மஹானா, ஜான்விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தில்குமாரி ,காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் கெவின் ஜோசப்.
ஒளிப்பதிவாளராக பிரசாத் ஆறுமுகம், இசையமைப்பாளர்கள் ஜெயபிரகாஷ், ஜெய்சன் பிரித்திவி. படத்தொகுப்பாளராக  டி.எஸ்.ஜெய், நடன இயக்குனர் ராஜுமுருகன், சண்டை இயக்குநராக மிராக்கல் மைக்கேல், கலை இயக்குநராக சந்தோஷ் பாப்பனாங்காடு, பாடல் ஆசிரியர்களாக வினோதன், அருண்பாரதி, சீர்காழி சிற்பி  ஆகியோர் பணியாற்றியுள்ளனர். மக்கள் தொடர்பு சக்தி சரவணன்.
நலீப் ஜியா மற்றும் விஜய் விஷ்வா இருவரும் சிறு வயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்த உயிர் நண்பர்கள். விஜய் விஷ்வா கேபிள் கனெக்சன் வேலை செய்கிறார். அவரது நண்பர் நலீப் ஜியா மீன் பிடிக்கும் தொழிலைச் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். ஒரு நாள் தெருவில் ஓர் இளம்பெண்ணை (மஹானா) ஒரு ரவுடிக் கும்பல் துரத்துகிறது. வழிநெடுக அவள் கண்ணில் படுபவர்களிடம் எல்லாம் தன்னை காப்பாற்றும் படி உதவி கேட்கிறாள். ரவுடிக் கும்பல் துரத்துவது பார்த்து மனம் பதைபதைத்துப் பரிதவித்தாலும், யாரும் உதவ வராமல் தயங்கி நிற்கிறார்கள். என்னைக் காப்பாற்ற யாருமே இல்லையா என்று கதறுகிறாள் மஹானா. அப்போது வழியில் விஜய் விஷ்வா மஹானா பதற்றத்துடன் ஓடுவதை பார்த்து உதவி செய்ய நினைக்கும் போது மஹானா விஜய் விஷ்வாவை பார்த்து உன்னால் காப்பாற்ற முடியாது என்று கூறிக்கொண்டே ஓடுகிறாள். ரவுடி கும்பலிடம் சிக்கியதுடன் மஹானா விஜய் விஷ்வாவிடம் காப்பாற்றும்படி முறையிடுகிறாள். அவன் அவளைத் துரத்தி வந்து அந்தக் கும்பலை அடித்து துவம்சம் செய்கிறார். அடி வாங்கிய அவர்கள் எதிர்ப்பு காட்டாமல் சிரிக்கிறார்கள். நாயகன் விஜய் விஷ்வா புரியாமல் நிற்கிறான். ரவுடிகளால் துரத்தப்பட்ட மஹானாவும் சிரிக்கிறாள். காரணம் அது ஒரு பிராங்க் ஷோவாம். இப்படி பொதுமக்கள் உணர்ச்சிகளோடு விளையாடும் அவர்களின் வியாபார நோக்கமறிந்து கொதிக்கிற நாயகன் விஜய்  விஷ்வா   இப்படிப் போலியாக நடிக்கும் செயல்களால் உண்மையான ஆபத்து வரும்போது யாரும் காப்பாற்ற வர மாட்டார்கள் என்று கூறிக்கொண்டே மஹானாவை ஓங்கி அறைந்து விடுகிறான். இப்படிப்பட்ட வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று வெளிப்படையாக பேசிய அவனது குணத்தை பார்த்து மஹானா  நாயகன் விஜய்  விஷ்வா  மீது காதலில் விழுகிறாள். அவள் காதலுக்கு அண்ணன் ஜான் விஜய் எதிர்ப்பு தெரிவிக்க காதல் ஜோடி மீனவ நண்பன் நலீப் ஜியா மற்றும் தோழியும் அத்தை மகள் மதுமிதா உதவியுடன் ஊரை விட்டு ஓடுகிறார்கள். அப்போது அண்ணன் ஜான் விஜய்யிடம் இவர்கள் சிக்கும் போது நண்பன் நலீப் ஜியா  இன்னும் ஒரு வாரத்திற்குள் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று ஜான் விஜய்யை பார்த்து சவால் விடுகிறான். அதன் பிறகு நாயகனின் காதலை சேர்த்து வைத்த பால்ய மீனவ நண்பன் நலீப் ஜியா திருமணத்துக்கு தேவையான பண சம்பாதிக்க கடலில் மீன் பிடிக்க செல்கிறான். கடலுக்குள் சென்ற நண்பன் திடீரென காணாமல் போகிறான். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் ‘கும்பார’ படத்தின் மீதிக்கதை.
உயிர் நண்பர்களாக விஜய் விஷ்வா – நலீப் ஜியா, காதலி மற்றும் பாசக்கார அண்ணன் ஜான்விஜயின் தங்கையும் விஜய் விஷ்வாவின் காதலியுமாக மஹானா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
மற்றும் சித்தப்பாவாக பருத்திவீரன் சரவணன், ஜான்விஜய், அடியாளாக சாம்ஸ், அத்தை மகளும் மஹானாவின் தோழியாக மதுமிதா, அத்தையாக செந்தில்குமாரி, மற்றும் மஹானாவின் நண்பணாக காதல் சுகுமார் உள்ளிட்ட துணைக் கதாபாத்திரங்கள் கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி முழுமையான நடிப்பை வழங்கி நிறைவு செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளராக பிரசாத் ஆறுமுகம், நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டங்களை இயற்கை எழில் கொஞ்சும் அழகை நேர்த்தியாகப் படம் பிடித்துள்ளார்.
ஜெயபிரகாஷ், ஜெய்சன் பிரித்திவி இசை மற்றும் பின்னணி இசை கதையோடு பயணிக்க வைத்துள்ளது.
டி.எஸ்.ஜெய் படத்தொகுப்பு, இறுதியில் சட்டுன்னு முடியும் கிளைமாக்ஸ் மட்டும் ஏமாற்றம்.
இளைஞர்களின் நட்பு மற்றும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி காதல், நட்பு, நகைச்சுவை, ஆக்சன் என அனைத்தும் கலந்த முழு நீள எண்டர்டெயினர் படைத்த இயக்குனர் கெவின் ஜோசப் திரைக்கதையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்து இருக்கும்.
மொத்தத்தில் ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் குமாரதாஸ் தயாரித்திருக்கும் ‘கும்பாரி’ நட்பு, பாசம், காதல் கலந்த காமெடி எண்டர்டெயினர்.