குண்டான் சட்டி விமர்சனம் : குண்டான் சட்டி குழந்தைகளை கண்டிப்பாக கவர்ந்து ஈர்க்கும் | ரேட்டிங்: 2.5/5

0
214

குண்டான் சட்டி விமர்சனம் : குண்டான் சட்டி குழந்தைகளை கண்டிப்பாக கவர்ந்து ஈர்க்கும் | ரேட்டிங்: 2.5/5

செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் சார்பில் டாக்டர்.எஸ்.ஏ.கார்த்திகேயன் தயாரித்திருக்கும் குண்டான் சட்டி என்ற குழந்தைகள் ரசிக்கக்கூடிய 2டி அனிமேஷன் தொழில்நுட்பத்தை கையாண்டு திரைப்படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் 12 வயது மாணவி பி.கே.அகஸ்தி.
தொழில்நுட்ப கலைஞர்கள்: திரைக்கதை வசனம் பாடல்கள் – அரங்கன் சின்னத்தம்பி, இசை- எம்.எஸ்.அமர்கீத், எடிட்டிங்- பி.எஸ். வாசு, மக்கள் தொடர்பு-வெங்கட்
கும்பகோணம் அருகில் கொரநாட்டு கருப்பூர் கிராமத்தில் குப்பன், சுப்பன் என்னும் இரு நண்பர்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். இருவரும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்கிறார்கள். இருவருக்கும் ஒரே நேரத்தில் ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. இரண்டு குழந்தைகளுக்கும் குண்டேஸ்வரன், சட்டிஸ்வரன் என்று பெயர் சூட்டுகிறார்கள். அவர்கள் ‘குண்டான்’, ‘சட்டி’ என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் தோற்றத்தையும் பெயரையும் வைத்து பள்ளியில் கேலி செய்யதாலும், குண்டானும், சட்டியும் மற்றவர்களின் கேலிகளுக்கு வருத்தப்படாமல் நன்றாக படிக்கிறார்கள். கிராமத்தில் கோவில் நிலத்தை வைத்திருக்கும் பண்ணையார், ஏழைகளிடம் அதிக வட்டி வசூலிக்கும் சேட்டு, அதிக லாபம் கிடைக்க பொருட்களை பதுக்கி வைத்திருக்கும் வியாபாரி என மூவரும் செய்யும் சட்டவிரோத செயல்களை குண்டான், சட்டி இருவரும் புத்திசாலிதனமாக கையாண்டு அவர்களை ஏமாற்றி எல்லோருக்கும் நல்லது செய்கிறார்கள். ஏமாந்த மூவரும் குண்டான், சட்டி இருவர் மீதும் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் இருவரும் செய்யும் சேட்டைகள் தந்தை குப்பனுக்கும், சுப்பனுக்கும் தெரியவர குண்டானையும், சட்டியையும் மூங்கில் மரத்தில் கட்டி ஆற்றோடு விடுகிறார்கள். ஆற்றில் பயணப்படும் அவர்கள் என்ன என்ன சேட்டைகள், எப்படி செய்கிறார்கள்? இறுதியில் குண்டான், சட்டி இருவரும் எப்படி வீடு திரும்பினார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
திரைக்கதை வசனம் பாடல்கள்- அரங்கன் சின்னத்தம்பி, இசை- எம்.எஸ்.அமர்கீத், எடிட்டிங்- பி.எஸ். வாசு, ஆகிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு அனிமேஷனில் வடிவமைக்கப்பட்டிருக்கும் கதைக்கு பலம் சேர்த்துள்ளனர்.
கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள், குறும்புத்தனங்கள் போன்றவற்றைக் கொண்டு மாணவர்கள் பள்ளிக்கூடத்தில், வீட்டில் பெற்றோர்களிடத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். எப்படி படித்து முன்னேற வேண்டும் என்பதை குண்டேஸ்வரன், சட்டிஸ்வரன் என இரு பாத்திரத்திற்கு வித்தியாசமான தோற்றத்தை அனிமேஷனில் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம் சிறப்பு. படம் முழுக்க வரும் அனிமேஷன் சிறுவர்களை கவர்ந்து ஈர்க்க கூடியதாக உள்ளது. 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி பி.கே.அகஸ்தி குழந்தைகள் எப்படி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு எளிதாக புரியும் படி நேர்த்தியாக சொல்லி இருக்கிறார். அத்துடன் இந்தச் சிறுவயதிலேயே அனிமேஷன் படத்தை உருவாக்கி பெற்றோர்களுக்கு பெருமை சேர்த்திருக்கும் பி.கே.அகஸ்தி, வருங்காலத்தில் நிச்சயமாக பல வெற்றிப்படங்களை கொடுத்து சாதனை படைப்பார் என்பது உறுதி.
மொத்தத்தில் செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் சார்பில் டாக்டர்.எஸ்.ஏ.கார்த்திகேயன் தயாரித்திருக்கும் குண்டான் சட்டி குழந்தைகளை கண்டிப்பாக கவர்ந்து ஈர்க்கும்.