கார்கி விமர்சனம்: அனைத்து பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் கார்கி |மதிப்பீடு: 3.5/5

0
534

கார்கி விமர்சனம்: அனைத்து பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் கார்கி |மதிப்பீடு: 3.5/5

கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், சாய் பல்லவி கதை நாயகியாக நடித்துள்ள கார்கி திரைப்படத்தை ப்ளாக்கி ஜெனி ரூ மை லெஃப்ட் ஃபூட் ப்ரொடக்ஷன்ஸ் ரவிச்சந்திரன் ராமச்சந்திரன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, தாமஸ் ஜார்ஜ் மற்றும் கௌதம் ராமச்சந்திரன் இணைந்து தயாரித்துள்ளனர்.
சாய்பல்லவி , ஐஸ்வர்யா லட்சுமி, வெங்கட் , ஆர் எஸ் சிவாஜி, சரவணன், ஜெயபிரகாஷ் நடித்துள்ளனர். ஷ்ரயான்தி மற்றும் பிரேம் கிருஷ்ணா அக்கட்டு ஒளிப்பதிவில் கோவிந்த் வசந்தா இசை அமைக்க பிரபல பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பாடல்களை எழுதியுள்ளார்.

பள்ளி ஆசிரியையான மிடில் க்ளாஸ் குடும்பத்தில் வாழும் கார்கி (சாய் பல்லவி) அப்பா என்றால் உயிர். அவர் விரும்பும் காதலரை மனம் முடிப்பதற்காக பெற்றோரின் சம்மதத்துடன் திருமணத்திற்காக காத்திருக்கிறார். இதனிடையில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் தந்தையுடன் வசிக்கும் 9 வயது சிறுமி, 4 வட மாநில தொழிலாளிகளால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார். காவல்துறை விசாரணையில் 5வதாக ஒரு நபரும் இந்த வன்கொடுமையில் ஈடுபட்டிருப்பது தெரியவருகிறது. அதே குடியிருப்பில் செக்ரியூட்டியாக வேலை பார்க்கும் சாய்பல்லவியின் தந்தையை, சிறுமி பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்கிறது போலீஸ். இதில் மன உளைச்சலுக்கு ஆளாகி பல பிரச்சனைகளை எதிர் கொள்ளும் அவர், பின்பு சட்ட போராட்டங்களின் மூலம் தனது தந்தையை சாய் பல்லவி காப்பாற்றினாரா? இறுதியில் அவருக்கு என்ன ஆனது? பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நியாயம் கிடைத்ததா என்பதே மீதித்கதை.

பள்ளி டீச்சராக நடித்துள்ள சாய் பல்லவி வலுவான கதாபாத்திரத்தை ஏற்று எளிமையான பெண்ணாக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு உயிர் கொடுத்துள்ளார். அனைவருடைய பாராட்டுக்களையும் கைத்தட்டல்களையும் பெறுகிறார் சாய் பல்லவி.

சாய் பல்லவியின் திக்குவாய் வக்கீலாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காளி வெங்கட் முதிர்ச்சியான நடிப்பின் மூலம் படத்திற்கு வலு சேர்த்து அனைவரின் மனதில் நிற்கிறார்.

நீதிபதியாக வரும் திருநங்கையின் தேர்வு சிறப்பு.

ஆர் எஸ் சிவாஜி, சரவணன், ஜெயபிரகாஷ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அந்தந்த கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர்.

பிரேம் கிருஷ்ணா அக்கட்டு ஒளிப்பதிவு, கோவிந்த் வசந்தா இசை பின்னணி இசை என அனைத்தும் ஒன்றிணைந்து திரைக்கதையோடு பயணிக்க வைக்கிறது.

அன்றாடம் குழந்தைகள் முதல் பெண்களை வரை சந்தித்து வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் குழந்தையின் மனநிலை, அதன் பாதிப்பாக அந்த குடும்பத்தில் நிலவும் சூழலை என சமூக அவலங்களை தோலுரித்து காட்டும் கதையை தேர்வு செய்து ஆழம் மற்றும் அழுத்தம், சமூக சீர்கேடு, ஆண்களின் சபல புத்தி என பல விஷயங்களை திரைக்கதை அமைத்து பார்ப்பவர்களை அதனுடனே பயணிக்க வைத்து காட்சிப்படுத்தியுள்ள இயக்குனர் கௌதம் ராமச்சந்திரனுக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் அனைத்து பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் கார்கி.