காரி விமர்சனம் : காரி வீரமும், கம்பீரமும் கலந்த ஜல்லிக்கட்டின் மகத்துவத்தை பறைசாற்றும் கிராமத்து விருந்து | ரேட்டிங்: 3.5/5

0
515

காரி விமர்சனம் : காரி வீரமும், கம்பீரமும் கலந்த ஜல்லிக்கட்டின் மகத்துவத்தை பறைசாற்றும் கிராமத்து விருந்து | ரேட்டிங்: 3.5/5

பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமன் குமார் தயாரிப்பில் சசிகுமார், பார்வதி அருண், ஜேடி சக்கரவர்த்தி, ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், இயக்குநர் பாலாஜி சக்திவேல், நாகி நீடு, பிரேம்குமார், பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, அம்மு அபிராமி, ராம்குமார், தேனிமுருகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குனர் ஹேமந்த் காரி படத்தை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு-கணேஷ் சந்திரா, இசை-டி.இமான், பாடல்கள்-லலித் ஆனந்த், ஹேமந்த், எடிட்டர்-சிவாநாதீஷ்வரன், சண்டை-அன்பறிவு, கலை-மிலன், விஷ_வல் -ஹரிஹரசுதன், பிஆர்ஒ-ஜான்.

இரு கிராமத்தில் கோயில் நிர்வாகத்திற்காக ஊர்மக்கள் சார்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்கின்றனர்.இதில் பங்கேற்க சென்னையில் இருக்கும் குதிரைக்கு பயிற்சி கொடுக்கும் ஆடுகளம் நரேன், சசிகுமாரை சந்திக்க ஊர் தலைவர் நாகி நீடு வந்து ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள கிராமத்திற்கு வருமாறு அழைக்கிறார். முதலில் எதிர்ப்பை தெரிவிக்கும் சசிகுமார், பின்னர் தன் தந்தையின் எதிர்பாராத இறப்பிற்கு பின் கிராமத்திற்கு வருகிறார். அங்கே கிராமத்தின் நிலைமை மோசமாக இருப்பதையும், தண்ணீர் இல்லாமல் நிலங்கள் வறண்டு இருப்பதையும், முட்புதர்கள் மண்டி கிடக்க அதனால் குப்பைக் கிடங்காக மாற்ற நினைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தையும்  கேள்விப்படுகிறார். இதற்கிடையே அடங்காத ஜல்லிக்கட்டு காளைகளை வாங்கி விருந்துக்கு பலி கொடுக்கும் கொடூர வில்லன் பணக்கார ஜே.டி.சக்கரவர்த்தியின் பழக்கத்தையும் முறியடிக்கவும், ஜல்லிக்கட்டில் காளையை பிடித்து போட்டியில் வெல்ல  வேண்டும் என்ற நிர்பந்தத்தையும செய்து முடித்தாரா? இத்தகைய சூழ்நிலையில் சசிகுமார் எப்படி சமாளித்தார்? காளையை அடக்கினாரா? வில்லனை எதிர்த்து போராடினாரா? கிராமத்தை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சசிகுமார் கிராமத்து கெட்டப்பில் அச்சு அசலாக வாழ்ந்துள்ளார்.

காரி காளை மாட்டிற்காக உருகும் பார்வதி அருணின் தத்ரூபமான நடிப்பு படத்திற்கு பலம்.

ஜேடி சக்கரவர்த்தி, ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், இயக்குநர் பாலாஜி சக்திவேல், நாகி நீடு, பிரேம்குமார், பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, அம்மு அபிராமி, ராம்குமார், தேனிமுருகன் மற்றும் பலர் படத்தை தாங்கி பிடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு-கணேஷ் சந்திரா, இசை-டி.இமான், பாடல்கள்-லலித் ஆனந்த், ஹேமந்த், எடிட்டர்-சிவாநாதீஷ்வரன், சண்டை-அன்பறிவு, கலை-மிலன் ஆகிய தொழில் நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு படத்தின் இன்றியமையதாக காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

விலங்குகளின் முக்கியத்துவத்தையும், கார்ப்பரேட் கம்பெனியின் அடாவடித்தனத்தையும், ஜல்லிக்கட்டு விளையாட்டையும் ஒருங்கிணைத்து படத்தை கொடுத்துள்ளார் அறிமுக இயக்குனர் ஹேமந்த். கிராமத்து மண் மாறாத காட்சிக்கோணங்களில் அச்சு அசலாக காண்பித்து சமூக அக்கறை கலந்து இயல்பான நடையில் முதல் பாதியின் எதிர்பார்ப்பை இறுதி வரை தோய்வில்லாமல் கொடுத்து அசத்தியுள்ளார் இயக்குனர் ஹேமந்த்.

மொத்தத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமன் குமார் தயாரித்திருக்கும் காரி வீரமும், கம்பீரமும் கலந்த ஜல்லிக்கட்டின் மகத்துவத்தை பறைசாற்றும் கிராமத்து விருந்து.