கான்ஜுரிங் கண்ணப்பன் திரைவிமர்சனம் : கான்ஜுரிங் கண்ணப்பன் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு டைம் பாஸ் ஹாரர் காமெடி  | ரேட்டிங்: 3.5/5

0
488

கான்ஜுரிங் கண்ணப்பன் திரைவிமர்சனம் : கான்ஜுரிங் கண்ணப்பன் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு டைம் பாஸ் ஹாரர் காமெடி  | ரேட்டிங்: 3.5/5

நடிகர்கள்:
கண்ணப்பன் – சதீஷ்
டார்க் டேவ்ஸ் – ரெஜினா கசாண்ட்ரா
லக்ஷ்மி – சரண்யா பொன்வண்ணன்
அஞ்சா நெஞ்சன் – விடிவி கணேஷ்
எக்சார்சிஸ்ட் ஏழுமலை – நாசர்
டெவில் ஆர்ம்ஸ்ட்ராங் – ஆனந்தராஜ்
டாக்டர் ஜானி – ரெடின் கிங்ஸ்லி
சோடா சேகர் – நமோ நாராயணா
கடப்பாரை – ஆதித்ய கதிர்
மாக்டலீன் – எல்லி அவ்ராம்
வில்லியம் – ஜேசன் ஷா
ராபர்ட் – பெனடிக்ட் காரெட்
தொழில்நுட்ப கலைஞர்கள் :
இயக்குனர்: செல்வின் ராஜ் சேவியர்
ஒளிப்பதிவாளர்: எஸ். யுவா
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
கலை இயக்குனர்: மோகனா மகேந்திரன்
எடிட்டிங் : பிரதீப் இ. ராகவ்
ஸ்டண்ட் மாஸ்டர்: மிராக்கிள் மைக்கேல்
சிறப்பு ஒப்பனை கலைஞர்: பட்டணம் ரஷீத்
ஒப்பனை கலைஞர்: குப்புசாமி
ஆடை வடிவமைப்பாளர்: மீனாட்சி என்
காஸ்டியூமர் : வி பிரசாத்
பேனர்: ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்
கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: அர்ச்சனா கல்பாத்தி
அசோசியேட் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: ஐஸ்வர்யா கல்பாத்தி
நிர்வாகத் தயாரிப்பாளர்: எஸ்.எம்.வெங்கட் மாணிக்கம்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
கண்ணப்பன் (சதீஷ்) வேலை தேடும் கேம் டிசைனர். அவரது குடும்பத்தில் ஓய்வு பெற்ற தந்தை அஞ்சா நெஞ்சன் (வி.டி.வி. கணேஷ்), யூடியூபர் அம்மா லட்சுமி (சரண்யா பொன்வண்ணன்), மற்றும் மாமா சோடா சேகர் (நமோ நாராயணன்) ஆகியோர் ஜாலியான வாழ்க்கை வாழ்கிறார்கள். கண்ணப்பன் தனது நேர்காணலுக்கு குளிக்க தயாராகும்போது, வீட்டில் தண்ணீர் இல்லாதது அவருக்கு சிக்கல் ஏற்படுகிறது. அவர் வீட்டில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத கிணற்றைத் திறக்க முடிவு செய்கிறார், அதன் பின் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் போது வினோதமான பொருள் ஒன்று கிடைக்கிறது. அதில் இருக்கும் சூனியம் வைக்கப்பட்ட ஒரு இறகுகளில், ஒரு இறகை தெரியாமல் பறித்து விடுகிறார். இதன் பின்னர் அவர் தூங்கும் போதெல்லாம் கனவில்  1930 இல் இரண்டு பிரிட்டிஷ் பேய்களால் வேட்டையாடப்பட்ட ஒரு அரண்மனை மாளிகைக்கு கொண்டு செல்லப்படுகிறார். நிஜ உலகில் அவன் விழித்தெழும் போது தான்  வரலாம் என்றாலும், அங்கே அவருக்கு கனவு உலகில் என்ன நடந்தாலும் அது அவன் மீது ஒரு அடையாளத்தை விட்டுச்செல்லும். எனவே, அவருக்கு அங்கு உயிர் போனால் நிஜ உலகிலும் உயிர் போகும் என்கிற சூழல் உருவாகிறது. தூங்கும் போதெல்லாம்  கண்ணப்பன் பேய் கனவுகளை அனுபவிக்கத் தொடங்குகிறார். அவர் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் வரை, அவர்கள் இடத்தில் பேய்களை சமாளிக்க வேண்டும். இந்த செயல் அவர் சிக்கலில் தள்ளுகிறது. எக்சார்சிஸ்ட் ஏழுமலை (நாசர்) மற்றும் மனநல மருத்துவர் டாக்டர் ஜானியின் (ரெடின் கிங்ஸ்லி) உதவியை அவர் நாடினாலும், அவர் தூங்கும் ஒவ்வொரு முறையும் அதே கனவை அனுபவிக்கிறார். யார் யார் இறகை பறிக்கிறார்கள் அவர்களும் அதே கனவில் தான் நுழைவார் என்று எக்சார்சிஸ்ட் ஏழுமலை விளக்குகிறார். கண்ணப்பனின் மனநல மருத்துவர் டாக்டர் ஜானி மற்றும் பணத்திற்காக தனக்கு தொல்லை தரும் குத்துச்சண்டை வீரர் டெவில் ஆம்ஸ்ட்ராங் (ஆனந்தராஜ்), ஆகியோர் இந்த வலையில் விழுகிறார்கள். அத்துடன் கண்ணப்பனின் கவனக்குறைவால் தந்தை அஞ்சா நெஞ்சன், யூடியூபர் அம்மா லட்சுமி மற்றும் மாமா சோடா சேகர் ஆகியோரையும் அடுத்தடுத்து இந்த சிக்கலில் மாட்டுகிறார்கள். கண்ணப்பன் அங்கே கனவு உலகில் சிக்கிய பேய்களிடமிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மீதிக் கதை.
சதீஷ், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், ரெஜினா கசாண்ட்ரா, ரெடின் கிங்ஸ்லி, வி.டி.வி கணேஷ், சந்திரசேகர் கோனேரு, நமோ நாராயணன் மற்றும் சர்வதேச நடிகர்கள் எல்லி அவ்ராம், ஜேசன் ஷா மற்றும் பெனடிக்ட் காரெட் ஆகிய அனைவரும் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாத விசித்திரமான கதைக்களத்தில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து திரைக்கதைக்கு பலம் சேர்க்கிறார்கள். குறிப்பாக ஆனந்தராஜும், ரெடின் கிங்ஸ்லியும் காமெடி காட்சிகளில் ஸ்கோர் செய்து உள்ளனர்.
பேய் படத்துக்கு உண்டான த்ரில்லர் பாணியிலான பின்னணி இசையை சிறப்பாகத் தந்திருக்கிறார் யுவன்சங்கர் ராஜா.
நம்மை மாய உலகத்துக்குள் அழைத்து சென்றுள்ளார் ஒளிப்பதிவாளர் எஸ்.யுவா. கூடவே யுவன்சங்கர் ராஜா நம்மை பின்னணி இசை மூலம் பயமுறுத்துகிறார்.
கனவுலகம் நிஜ உலகம் என மாறி மாறி வரும் காட்சிகளில் எந்த குழப்பம் இல்லாமல் தெளிவாக கதை புரியும் படி சிறப்பாகக் எடிட் செய்துள்ளார் படத்தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ்.
சிறப்பு ஒப்பனை கலைஞர் பட்டணம் ரஷீத், ஒப்பனை கலைஞர்  குப்புசாமி, ஆடை வடிவமைப்பாளர் மீனாட்சி, காஸ்டியூமர் வி.பிரசாத் ஆகிய தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்களிப்பு கன்ஜுரிங் கண்ணப்பனின் ஈர்ப்புக்கு வலு சேர்க்கிறது.
கான்ஜுரிங் கண்ணப்பனில் ட்ரீம் கேட்சர் என்று அழைக்கப்படும் சூனியம் வைக்கப்பட்ட ஒரு விநோத பொருளில் உள்ள இறகை கவனக்குறைவாக பறிப்பதன் மூலம், தூங்கும் போதெல்லாம் கனவில் ஏற்படும் இன்னல்களை திகில் மற்றும் நகைச்சுவை கலந்த திரைக்கதை அமைத்து சிறந்த கதாபாத்திர தேர்வு செய்து ஹாரர் நகைச்சுவைத் திரைப்படம் படைத்துள்ளார் இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர்.
மொத்தத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரித்துள்ள கான்ஜுரிங் கண்ணப்பன் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு டைம் பாஸ் ஹாரர் காமெடி.