கபடி ப்ரோ திரைப்பட விமர்சனம் : கபடி ப்ரோ ஜாலியா ஒரு முறை பார்க்கலாம் | ரேட்டிங்: 2.5/5

0
218

கபடி ப்ரோ திரைப்பட விமர்சனம் : கபடி ப்ரோ ஜாலியா ஒரு முறை பார்க்கலாம் | ரேட்டிங்: 2.5/5

சதீஷ் ஜெய ராமன் இயக்கத்தில் அஞ்சனா சினிமாஸ் சார்பில் உஷா சதீஷ் தயாரிக்கும் படம்  கபடி ப்ரோ. சுஜன், பிரியா லால், சிங்கம் புலி, சஞ்சய் வெள்ளங்கி, மதுசூதனராவ், ஹானா, மனோபாலா, சண்முகசுந்தரம், மீரா கிருஷ்ணன், அஞ்சலி உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜே.டேனியல் இசை அமைத்துள்ளார், கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். மக்கள் தொடர்பு சிவா.வாழ்க்கையில் எதையும் வெல்வதற்காக எந்த விதியையும் மீறும் ஒரு கபடி சாம்பியன், ஒரு குற்றவாளியை பிடிக்க எந்த விதியையும் வளைக்கும் போலீஸ் அதிகாரியுடன் நடக்கும் கதை. தென்காசி பகுதியில் சின்ன சின்ன தில்லுமுல்லுகளை செய்து வாழ்க்கையை ஒட்டி வரும் கபடி வீரன் வீரபாகு. தனது நண்பர்கள் அர்ஜெண்ட் முத்துவும் (சிங்கம் புலி), சக்தியும் (சஞ்சய் வெள்ளங்கி) உடன் பாயும் புலி என்ற பெயரில் கபடி அணி வைத்து இருக்கிறான். இவர்கள் மூவரும் சின்ன சின்ன தில்லு முல்லுகளையும்  ஜாலியாக செய்து வருகிறர்கள். இந்த நிலையில் கபடி வீரன் வீரபாகுவுக்கு  இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்து (மதுசூதன ராவ்)  மகள் அபிராமி (பிரியா லால்) உடன் காதல் மலர்கிறது. மறுபக்கம் வீரபாகு குடும்பத்தினர் அவன் தாய்மாமன் மகளை திருமணம் செய்வான் என்று எதிர்பார்த்த நிலையில் வீரபாகு நண்பன் பெயரில் ஆள் மாறாட்டம் செய்து காதலி அபிராமியை மணம் முடிக்க முற்படுகிறான். வீரபாகுவின் தில்லு முல்லுகள் காதலியின் தந்தை இன்ஸ்பெக்டர் இசக்கி பாண்டியனுக்கும், அவனது காதலி அபிராமிக்கும் தெரியவர  இன்ஸ்பெக்டர் இசக்கிபாண்டியன் கோபத்துக்கு ஆளாகிறான். ஊரில் நடக்கும் கபடி போட்டியில் இசக்கிபாண்டியன் வீரபாகுவை பழிவாங்க விரும்புகிறார். பின்பு நடந்தது என்ன ..?  போட்டியில் வீரபாகு வெற்றி பெற்றானா? காதலர்கள் மீண்டும் ஒன்று சேர்கிறார்களா? என்பதுதான் கதை.

வீரபாகு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இளம் நடிகர் சுஜன் யதார்த்தமான நடிப்பு வழங்கி கபடி விளையாட்டில்  ஜொலிக்கிறார்.

நண்பர்களாக அர்ஜெண்ட் முத்து கதாபாத்திரத்தில் காமெடிக்கு பலம் சோர்த்துள்ளார் சிங்கம் புலி, சக்தி கதாபாத்திரத்தில் சஞ்சய் வெள்ளங்கி தன்னுடைய கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார். கதாநாயகிகள் பிரியா லால் மற்றும் ரஜினி இருவரும் கிராமப் பெண்ணாக  வலம் வருகிறார்கள்.கல்யாண புரோக்கராக மறைந்த மனோபாலா கலகலப்பூட்டி மனதில் நிற்கிறார். இன்ஸ்பெக்டர் இசக்கி பாண்டியன் பாத்திரத்தில் வரும் மதுசூதன ராவ் திரைக்கதையை விறுவிறுப்பாகிறார். ஹானா, சண்முக சுந்தரம், மீரா கிருஷ்ணன், அஞ்சலி உட்பட அனைத்து நடிகர்களின் கதாபாத்திரம் படத்துக்கு பலம் சேர்க்கிறது.

பாடலாசிரியர்கள் தாமரை, ஞானகரவேல் ஆகியாரின் பாடல் வரிகளுக்கு இசையமைப்பாளர் ஏ.ஜே.டேனியலின் இசை கேட்கும் ரகமாக இருக்கிறது.
கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு கிராமப்புற காதல் காட்சிகளும், கபடி விளையாட்டையும் சிறப்பாகவும் கலர்ஃபுல்லாகவும் காட்சிப்படுத்தியுள்ளார்.
ஒரு கபடி சாம்பியன், எதிலும் வெற்றி பெற எந்த விதியையும் மீறுபவனின் காதல் கதை. திரைக்கதையில் காதல், ஆக்ஷன், காமெடி கலந்த தில்லுமுல்லு வைத்து ஜாலியாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் சதீஷ் ஜெய ராமன்.
மொத்தத்தில் அஞ்சனா சினிமாஸ் சார்பில் உஷா சதீஷ் தயாரிக்கும் கபடி ப்ரோ ஜாலியா ஒரு முறை பார்க்கலாம்.